Wednesday, October 30, 2013

ரகசிய புலனாய்வு ஏஜன்சிகள் பாசிச அஜண்டாவை செயல்படுத்துகின்றன – எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

press relese(27.10.2013)
 புதுடெல்லி:இந்தியாவில் ரகசிய புலனாய்வு ஏஜன்சிகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச அஜண்டாவை நடைமுறைப்படுத்துவதாக சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) தேசிய செயற்குழு குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய துணை தலைவர் ராகுல் காந்தியை கூட ரகசிய புலனாய்வு பிரிவு, தனது ரகசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்
உபயோகித்துள்ளது என்பதற்கான ஆதாரம் தான் அவரது முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அறிக்கை.முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புண்டு என்று அறிக்கை வெளியிட்ட ராகுல் காந்தி நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தேசிய செயற்குழு தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.

காஸாவில் ராணுவ பயிற்சி மையத்தை நோக்கி இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்!



காஸாவில் இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) தாக்குதல் நடத்தியுள்ளன. வடக்கு காஸாவில் ஹமாஸின் ராணுவ பயிற்சி மையத்தை குறி வைத்து ட்ரோன் விமானத்திலிருந்து ஏவுகணைகள் சீறிப் பாய்ந்தன.
இஸ்ரேலின் இந்த தாக்குதலில் யாருக்கும் காயமுற்றதாக தகவல் இல்லை. ராணுவ மையத்திற்கு அருகே ஏவுகணைகள் விழுந்தன. இவ்வேளையில் யாரும் அங்கிருக்கவில்லை.

Sunday, October 27, 2013

சர்ச்சைக்குரிய கருத்து: ராகுல்காந்தி வீட்டை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆர்ப்பாட்டம்! - உருவ பொம்மை எரிப்பு!



மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உ.பி., முஸாஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு ஏற்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதாக கூறி நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.

முஸாஃபர் நகர் கலவர பாதிப்புக்கு நிதி ஒதுக்கீடு! - 1800 குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் உதவி!



முஸாஃபர் நகர் கலவரம் குறித்த மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 கோடியே 84 லட்சம் ஒதுக்கி உ.பி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதன்படி அசையும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தக்கவாறு ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எனவும் அசையா சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தக்கவாறு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கு மேல் எனவும் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

Saturday, October 26, 2013

காமன்வெல்த் மாநாடு: சட்டசபை தீர்மானம் வரவேற்கத்தக்கது! – எஸ்.டி.பி.ஐ


mubarak

சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற  தமிழக சட்டசபையின்  தீர்மானம்  வரவேற்கதக்கது என்று எஸ்.டி.பி.ஐ. கூறியுள்ளது. இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை  நடத்தக் கூடாது, இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பது எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை. இந்த கோரிக்கையை தமிழக சட்டசபையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு ஐ,எஸ்,ஐ தொடர்பு! - ராகுலின் சர்ச்சைக்குரிய அறிக்கைக்கு கண்டனம்!



முஸாஃபர் நகரில் வகுப்புவாதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ தொடர்பு இருப்பதாக கூறிய ராகுல்காந்தியின் அறிக்கை  முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
முஸாஃபர் நகரில் வகுப்புவாதக் கலவரத்தால் சொந்தங்களையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் முஸ்லிம்களுக்கு ஐ.எஸ்.ஐ தொடர்பு இருப்பதாக கூறிய ராகுலின் அறிக்கைக்கு முஸ்லிம் அமைப்புகள், கட்சிகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Monday, October 21, 2013

இஸ்ரேல் சிறைகளில் கொடிய சித்திரவதைகளை அனுபவிக்கும் ஃபலஸ்தீன் குழந்தைகள்: யுனிசெஃப் அறிக்கை!



இஸ்ரேல் சிறைகளளில் ஃபலஸ்தீன சிறுவர்கள் கொடிய சித்திரவதைகளை அனுபவிப்பதாக ஐ.நா குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃபின் அறிக்கை கூறுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கொடுமைகள் குறித்து ஏழு மாதங்கள் முன்பு யுனிசெஃப் முதல் கட்ட அறிக்கையை அளித்திருந்தது. இதன் பின்னரும் அதே நிலை தொடருவதாக புதிய அறிக்கை கூறுகிறது.

இஸ்லாமிய வங்கிகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு?


Islamic Bank

புதுடெல்லி: இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய திட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம், திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் ஆதரவாக உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saturday, October 19, 2013

காணாமல் போன சென்னை ஹஜ் பயணி இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் ஊழியரால் கண்டுபிடிப்பு!


iff

ஜித்தா: சென்னையில் இருந்து புனித ஹஜ் யாத்திரை சென்று, இறந்ததாகக் கருதப்பட்ட ஒரு புனிதப் பயணி, மக்காவில் உள்ள மருத்துவமனையில் உயிருடன் இருப்பதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையைச் சேர்ந்த பரக்கத்துல்லாஹ் என்பவர் தன் மனைவி பதருந் நிசாவுடன் சேர்ந்து புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். அவர்கள் யாத்திரையின் முதல் நாளன்று பிரிந்து விட்டனர். நான்கு நாள்களாகத் தேடியும் பரக்கத்துல்லாஹ்வைக் காணாததால் அவர் இறந்து விட்டதாக அவரது யாத்திரைக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் கருதினர்.

Saturday, October 12, 2013

முஸாஃபர் நகரில் மீண்டும் கலவரம்: 2 பேர் பலி!



அண்மையில் வகுப்புக் கலவரம் நடந்த உ.பி மாநிலம் முஸாஃபர் நகரில் மீண்டும் நிகழ்ந்த வன்முறையில் 2 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பசேந்திரோட் பகுதியில் ஒரு முஸ்லிம் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் ஆபித் (வயது 28). தனது முடி திருத்தும் கடையில் இருந்து திரும்பும் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆபிதின் மீது துப்பாக்கியால் சரமாரி சுட்டார்கள். இதில் ஆபித் பலியானார். ஆபிதின் கொலையைத் தொடர்ந்து ஊர்மக்கள் கொந்தளித்தனர். நகரத்தில் துணை ராணுவப் படை நிறுத்தப்பட்டுள்ளது.

Dua For Gaza