Tuesday, June 4, 2013

ஃபலஸ்தீன் புதிய பிரதமரின் நியமனத்திற்கு ஹமாஸ் எதிர்ப்பு!

ஃபலஸ்தீனின் புதிய பிரதமராக பேராசிரியர் ரமி ஹம்தல்லாவை அறிவிப்பு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதிபர் மகமூத் அப்பாஸ். அதிபரின் இந்த நியமனத்திற்கு ஹாமாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்போது பிரதமராக இருக்கும் ஸலாம் ஃபயத், இம்மாதம் பதவியில் இருந்து விலகுவதை அடுத்து, புதிய பிரதமரை அப்பாஸ் நியமித்துள்ளார். ஹம்தல்லா தலைமையில் புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, June 3, 2013

ராமநாதபுரத்தில் இலவச பயிற்சி ! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி!


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் நந்தகுமார் அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 போட்டித் தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த வகுப்புகள் ஜூன் 14 முதல் ஜூலை 26 வரை ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம். 

Sunday, June 2, 2013

கடைய நல்லூர் மசூத் கொலை வழக்கு : டி எஸ் பி சஸ்பெண்ட்!

2005 ஆம் ஆண்டு காவல்துறை கண்காணிப்பில் இருந்த சிறைக்கைதி ஒருவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட வழக்கில், காவல்துறையின் க்யூ பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் சந்திரபால் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணிஓய்வு பெற இருந்த 24 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு, கடையநல்லூரைச் சேர்ந்த மசூத் என்னும் 38 வயது நிதி நிறுவன அதிபரை காவல்துறை ஒரு திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தது.விருதுநகரைச் சேர்ந்த வணிகர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை காரில் கடத்திச் சென்று ரூ.10 இலட்சம் கொள்ளையடித்ததாக மசூத் மற்றும் அவரது தோழர்கள் மூவரை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருந்தது.

இஸ்ரேலில் ஃபலஸ்தீனர்கள் கூட்டாக புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிப்பு!

2013610520903734_20
டெல் அவீவ்:1948-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இஸ்ரேல் உருவாக காரணமாக இருந்த போரின் போது யூத சியோனிஸ்டுகள் கூட்டுப்படுகொலைச் செய்த ஃபலஸ்தீனர்களை கூட்டாக புதைத்த  கல்லறைகள் டெல் அவீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜாஃபா மாவட்டத்தில் ஆறு கல்லறை அறைகளில் கொல்லப்பட்ட ஃபலஸ்தீனர்களின் உடல் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியை புதுப்பிப்பதற்காக சுத்தப்படுத்தும்போது மண் சரிந்தது.பின்னர் தோண்டி பரிசோதித்த போது உடல் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Friday, May 31, 2013

புதுவலசை பள்ளி தேர்வு முடிவுகள்: 450க்கு மேல் 9, 400க்கு மேல் 32 மாணவ மாணவிகள் எடுத்து சாதனை!


தமிழகம் மற்றும் புதுசேரியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 10.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இத்தேர்வில் 89% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



500 க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 9 பேர் முதலிடமும் 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 52 பேர் இரண்டாம் இடமும்  500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 136 பேர் மூன்றாம்  இடமும் பெற்றுள்ளனர்.
கணிதப்பாடத்தில் 29,905 பேர் 100 /100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அறிவியலில் 38,154 பேர் சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.
97.29 % சதவிகிதம் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டங்களில் முதலிடம் பிடித்துள்ளது .
நமதூர் அரபி ஒலியுல்லாஹ் பள்ளியில் 99 பேர் இந்த கலிவியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வை சந்தித்தனர். இதில் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான்கு பேர் தோல்வி அடைந்துள்ளனர். மாணவிகள் மூன்று பேரும், மாணவர் ஒருவரும் தோல்வி அடைந்தது வருத்ததிற்குறியது.
இதனை சமன் செய்யும் வகையில் நமதூர் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தவருடம் 95% தேர்ச்சி பெற்றுள்ளது. முதல் மூன்று இடத்தை மாணவிகளே பிடித்துள்ளனர்.

யுனெஸ்கோவின் இளம் விஞ்ஞானி விருது பெரும் இந்தியாவின் பிலால் ஹபீப்!

உலகில் கல்வி, கலச்சாரம், அறிவியல்களின் மேம்பாட்டிற்காக செயல்படும் ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவின் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது. இங்கு 27-30 தேதி வரை யுனெஸ்கோ அமைப்பின் நிகழ்ச்சிகள் நடந்தன.  

அப்போது யுனெஸ்கோ அமைப்பின் இளம் விஞ்ஞானிகளுக்கான 6 விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியாவை சேர்ந்த பிலால் ஹபீப் என்ற உத்தரகாண்ட் இளைஞரும் ஒருவர். 

கறுப்புச்சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஓயாது! கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சி!

நேற்று(30/05/2013) கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்குஎதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும் நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும் வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது. 

Thursday, May 30, 2013

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு: பொய் தகவலை ஐ.பி இட்டுக்கட்டியதா? சி.பி.ஐ விசாரணை!

2004-ஆம் ஆண்டு மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் போலி என்கவுண்டரில் மோடியின் போலீஸாரால் அநியாயமாக போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

மோடியை கொலைச் செய்ய லஷ்கர்-இ-தய்யிபா இயக்கம் திட்டமிட்டுள்ளதாக இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) தகவல் தெரிவித்ததன் அடிப்படையிலே இந்த போலி என்கவுண்டர் நடத்தப்பட்டதாக மோடியின் போலீஸ் கூறியிருந்தது.

Wednesday, May 29, 2013

’சென்சார் போர்ட்டில் அரசியல் பின்னணியா?’ – ஹைகோர்ட் கேள்வி

”கடுமையான வன்முறைக் காட்சிகள், கொடூர காட்சிகள், குற்றவாளிகளை புகழ்வது ஆகியவற்றை சினிமாவில் பார்க்கும்போது, இதற்கு தணிக்கைத்துறை எப்படி சான்றிதழ் வழங்கியது என்று தெரியவில்லை. தணிக்கைத் துறைக்கு தனி பொறுப்பு உள்ளது. தணிக்கை குழுவில் அரசியல் பின்னணி உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க கூடாது” என்று சென்சார் போர்ட்டுக்கு ஹைகோர்ட் அறிவுரை கூறியுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் கே.ஆர்.சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  மனு ஒன்றை விசாரித்தபோது  போது   நீதிபதி என்.கிருபாகரன் இந்த உத்தரவை பிறப்பித்தார் அந்த உத்தரவில்,”பாசமலர், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. தலைப்பே படத்தின் மதிப்பை அறிவிக்கும். நல்ல கதாபாத்திரங்களில் கதாநாயகர்கள் நடித்தனர். இதனால் அவர்கள் கடவுளாக வணங்கப்பட்டனர்.

பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் கலவரம்!

பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் கலவரம்!லாஷியோ: பர்மாவின் வடகிழக்கு பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பர்மாவின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோ. இங்கு, புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம் ஒருவர் எரித்து கொன்றுவிட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

Dua For Gaza