புதுடெல்லி:தீவிரவாத வழக்குகளின் பெயரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின்(டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை பணியில் மீண்டும் சேர்க்கவேண்டும் என்று ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு வலியுறுத்தியுள்ளார்.
தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) மிர்ஸா மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்காத சூழலில் மிர்ஸாவுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி பணியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கர்நாடகா முதல்வர் ஜகதீஷ் ஷெட்டார் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார்.


