புதுடெல்லி: கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி அன்று மஹாராஷ்டிரா மாநிலம் அக்கோட்டில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் உட்பட பலரும் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தை விசாரிப்பதற்காக கல்லூரி பேராசிரியரின் தலைமையில் மஹாத்மா காந்தி அந்தராஷ்டிரிய விஷ்வவித்யாலயாவின் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உண்மையை கண்டறியும் பொருட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று தங்களது அறிக்கையை சமர்பித்துள்ளனர்.
Saturday, December 15, 2012
அப்சல் குருவை தூக்கிலிடக் கூடாது! – மத்திய அமைச்சர்
கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி அன்று நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்ற குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்சல் குருவுக்கு எதிராக எவ்வித ஆதாரம் இல்லாதபோதும் பெரும்பான்மை மனசாட்சிபடி தூக்கு தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தது.இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதலின் 11 வது நினைவு நாளில் கொல்லப்பட்ட 9 பாதுகாப்பு வீரர்களின் புகைப்படங்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
லேபிள்கள்:
இந்தியா
பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் டெங்கு நோய் தடுப்பு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுதுறையின் சார்பில் புதுவலசையில் கடந்த 14/12/12 அன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் டெங்கு நோய் தடுப்பு நிலவேம்புகசாயம் புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் வைத்து இலவசமாக வழங்கப்பட்டது. இதில் புதுவலசை மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டார பொதுமக்கள் எராளமான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் வீடுகளுக்கும் வாங்கி சென்றனர்.
Friday, December 14, 2012
பள்ளிவாசல்களின் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிப்பு!
இஇராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இசுலாமிய வழிபாட்டுத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் காவி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 144 தடை உத்தரவை மீறி வரும் 15.12.2012 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் (CAMP OFFICE) முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து இசுலாமிய மக்கள் கூட்டமைப்பு அறிவித்
துள்ளது. இந்த போராட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் இசுலாமிய பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .
லேபிள்கள்:
இராமநாதபுரம்
எகிப்து:முர்சிக்கு எதிராக செயல்பட்டால் புரட்சி வெடிக்கும்-ஸலஃபிக்களின் தலைவர் எச்சரிக்கை
ஜனநாயக முறையில் தெரிவானவரே ஜனாதிபதி முர்ஸி: அவருக்கு எதிராக செயற்பட்டால் புரட்சி வெடிக்கும் – ஸலபி தலைவர் ஸயீத் அப்துல் அஸீம் .
தற்போதைய ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்ஸி ஜனநாயக முறையில் தெரிவானவர். அவருக்கு எதிராக செயற்பட்டாலோ, வெளியேற்ற முற்பட்டாலோ இஸ்லாமிய புரட்சி வெடிக்கும் என எகிப்திய ஸலபிக்களின் முன்னணி தலைவர் ஸயீத் அப்துல் அஸீம் எச்சரிக்கை விடுத்தார்.
லேபிள்கள்:
உலகம்
கோத்ராவில் வளர்ச்சிக்கு அப்பால் முஸ்லிம்கள்!
குஜராத்தில் பாரபட்சமான வளர்ச்சியை காண விரும்பினால் நீங்கள் கோத்ராவிற்கு செல்லலாம். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரை பலிவாங்கிய ஹிந்துத்துவா பயங்கரவாதம் நிகழ்த்திக்காட்டிய இந்திய வரலாறு காணாத இனப்படுகொலைக்கு துவக்கம் குறித்த மண்ணில் வளர்ச்சியில் கூட பாரபட்சம் காட்டப்படுகிறது. சாலைகள் உடைந்து, கழிவு நீர் நிரம்பி, குடிநீர் கூட இல்லாத பகுதியாக இருந்தால் நீங்கள் உறுதியாக நம்பலாம்-அது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்று. கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு வளர்ச்சி என்பதே முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு எட்டவேயில்லை. மின்சாரம் மட்டுமே இங்குள்ள ஒரே ஆடம்பரம். தெருவிளக்கு, கழிப்பறை, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உள்ள சாலைகள் உடைந்து சிதறிப்போய் கிடக்கின்றன. மழைக்காலங்களில் போக்குவரத்து முடங்கும். மாற்று சாலைக்கான கோரிக்கையும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.
லேபிள்கள்:
இந்தியா
Thursday, December 13, 2012
உண்மையில் அஸ்ஸாமில் பிழைக்க வந்த வந்தேறிகள் யார்?அஸ்ஸாம் முஸ்லிம்களின் உண்மை வரலாறு...

தேசப்பிரிவினைக்குப் பிறகு பிரிக்கப்பட்ட பாகிஸ்தானில் இருந்து அத்வானி உள்பட பெருபான்மையான இந்துக்கள் வெளியேறி இந்தியாவிற்கு வந்தார்கள் என்று கூறினால் அவர்கள் இந்தியயர்கள் அது நம்பக்கூடியதாக உள்ளது. ஆனால் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் (கிழக்கு) பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவிற்குள்
வந்தார்கள் என்றால் அவர்கள் வந்தேறிகள் !!!என்ன கொடுமை சுதந்திரதிற்கு உழைத்த முஸ்லிம்களை சுதந்திரம் கிடைத்த பிறகு அடித்து விரட்டியது யார்?மேலும் இன்று அசாமில் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் சக்தியான உள்ள முஸ்லிம்களை அடித்து விரட்டுவது ஏன் ? உண்மையில் மங்கோலியாவில் இருந்து வந்து அஸ்ஸாமில் குடியேறிய போடோ தீவிரவாதிகள் வந்தேறிகள் கிடையாதா?யார் இந்த அஸ்ஸாம் வாழ் முஸ்லிம்கள் உண்மையில் இவர்கள் வந்தேறிகளா ?ஒரு உண்மை வரலாறு பார்ப்போம்...
லேபிள்கள்:
இந்தியா
மரணப்படுக்கையில் இருக்கும் அபுதாஹிரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் NWF நடத்திய மாபெரும் தர்ணா போராட்டம்
சென்னை : கோவை சிறைச்சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அபுதாஹிரை விடுதலை செய்யக்கோரி நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக சென்னையில் 12.12.12 அன்று மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ. ஃபாத்திமா ஆலிமா தலைமை தாங்கினார்.
கோவை மத்திய சிறையில் 15 ஆண்டுகாலமாக சிறைவாசத்தை அனுபவித்து வரும் அபுதாஹிர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.எல்.இ என்னும் அறியவகை நோயால் தாக்கப்பட்டுள்ளார். இதன் கொடூர தன்மை என்னவெனில் இந்த நோய் இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய நோயாகும். இந்த நோய் தாக்கியவரின் ஒவ்வொரு உள் உறுப்புகளும் செயல் இழக்கச் செய்து மரணத்தை உண்டாக்கும் கொடிய வகை நோயாகும். இதன் பாதிப்பால் சிறையில் போதிய மருத்துவ வசதியின்றி பல சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றார். இவருக்கு போதிய மருத்துவத்திற்காக இதுவரை கடந்த ஆட்சியில் அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி 90 நாட்கள் சிறப்பு அனுமதி பெற்று பரோலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இத்தனை ஆண்டு காலமாக நோயின் கடுமையை தாக்குப்பிடித்தார்.
Wednesday, December 12, 2012
இராமநாதபுரத்தில் பள்ளிவாசலின் மீது கல் வீச்சு! மாவட்ட ஆட்சியரிடம் இஸ்லாமிய அமைப்புகள் மனு
11.12.2012 காலை 6 மணியளவில் பாரதி நகர் என்ற பகுதியில் உள்ள ஓம் க்தி நகர் பள்ளிவாசலில் உள்ள ஜன்னல்களில் உள்ள கண்ணாடிகளை இந்து துவா சிந்தனயுள்ள பாசிஸ்டுகள் கற்களை கொண்டு வீசி உடைத்துள்ளனர். தொடந்து ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல்கள் (பாரதிநகர் மார்கஸ், குமாரயா கோவில் புகாரிய பள்ளி, செய்யது அம்மாள் பள்ளிவாசல்) மீது பாசிஸ்டுகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆனால் காவல்துறையோ சமூக நல்லிணக்கத்தில் பாராமுகமாய் செயல்பட்டு வருகிறது.
இது குறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் முஸ்லிம் நல அறக்கட்டளை நிர்வாகி காதர்மைதீன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேபிள்கள்:
இராமநாதபுரம்
டெங்கு படுத்தும் பாடு: அதன் ஆபத்து என்ன? புதுவலசையில் நில வேம்பு கசாயம் வழங்க பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்பாடு!
டெங்கு பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள், ஆனால் அதன் ஆபத்து என்ன என்பது தெரியுமா என்று தெரியவில்லை. டெங்கு வந்தால் அது முதலில் தாக்குவது என்பதைவிட, அழிப்பது நமது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை தான். இந்த வெள்ளை அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும். சாதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு லட்ச்சத்தி ஐம்பதாயிரத்திருக்கு மேல் வெள்ளை அணுக்கள் இருக்க வேண்டும். ஆனால் டெங்கு வெள்ளை அணுக்களை ஒன்று ஒன்றாக குறைபதில்லை. அழிப்பது பத்து ஆயிரம் தொடங்கி ஐம்பது ஆயிரத்திற்கும் மேல் ஒரு நாள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில்.
இது இருபது ஆயிரமாக இருக்குமானால் ரத்தம் உடலின் உள் பக்கமாக கசிய ஆரம்பிக்கும் விளைவு பல் இடையில், மூக்கில், யூரின், மலம் கழிக்கும் போது ரத்த கசிவு ஏற்படும். உடம்பில் அம்மை போன்று தோன்றும் இது நோயின் மோசமான சூழ்நிலை இந்த நேரத்தில் அதிகமாக வெள்ளை அணுக்கள் மட்டுமே ஏற்றபடுகின்றது.
ஒரு யூனிட் வெள்ளை அணுக்கள் ராமநாதபுரத்தில் 300௦ ருபாய் வரை கட்டணமாக வாங்கப்படுகிறது. அதுவும் மதுரையில் இருந்து தான் வரவேண்டும். ஆனால் மதுரையில் இந்த வசதி அதிகம் நாம் ரத்தம் கொடுத்தால் அதை எடுத்து கொண்டு நமக்கு வெள்ளை அணுக்கள் தருகின்றார்கள்.
இது இருபது ஆயிரமாக இருக்குமானால் ரத்தம் உடலின் உள் பக்கமாக கசிய ஆரம்பிக்கும் விளைவு பல் இடையில், மூக்கில், யூரின், மலம் கழிக்கும் போது ரத்த கசிவு ஏற்படும். உடம்பில் அம்மை போன்று தோன்றும் இது நோயின் மோசமான சூழ்நிலை இந்த நேரத்தில் அதிகமாக வெள்ளை அணுக்கள் மட்டுமே ஏற்றபடுகின்றது.
ஒரு யூனிட் வெள்ளை அணுக்கள் ராமநாதபுரத்தில் 300௦ ருபாய் வரை கட்டணமாக வாங்கப்படுகிறது. அதுவும் மதுரையில் இருந்து தான் வரவேண்டும். ஆனால் மதுரையில் இந்த வசதி அதிகம் நாம் ரத்தம் கொடுத்தால் அதை எடுத்து கொண்டு நமக்கு வெள்ளை அணுக்கள் தருகின்றார்கள்.
லேபிள்கள்:
PFI,
புதுவலசை,
மருத்துவம்




