Sunday, October 21, 2012

உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மனு- தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம்:கருணாநிதி!


சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு தாக்கல் செய்துள்ள மனு, தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என்று முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்:

சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்திற்கு எத்தனை அவசியமானது என்பதைப்பற்றி நான் 2 நாட்களுக்கு முன்பு கூட கடிதம் எழுதியிருந்தேன், திராவிடர் கழகத் தலைவர் இளவல் வீரமணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் ஜி. ராமகிருஷ்ணனும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா. பாண்டியனும், பா.ம.க. சார்பில் நிறுவனர் ராமதாசும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

லேடன் இப்ராஹிமோவிக்கு “தங்க பாதம்” (GOLDEN FOOT ) விருது!

zladen ibrahimovic
மோன்டி கார்லோ:2012ம் ஆண்டுக்கான கோல்டன் ஃபூட் (GOLDEN FOOT ) என்றழைக்கப்படும் “தங்க பாதம்” விருதை, ஸ்வீடன் கால்பந்து அணி கேப்டன் லேடன் இப்ராஹிமோவிக் தட்டிச் சென்றார்.
மொனாகோ நாட்டில் லார்வாட்டோ கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தி கிரிமால்டி ஃபோரம் என்ற அரங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்பந்து ஜாம்பவானான பிரேசில் வீரர் பீலே, கோல்டன் ஃபூட் விருதை இப்ராஹிமோவிக்கிற்கு வழங்கினார்.

Saturday, October 20, 2012

மழைக்கால நோய்கள்!


மழையின் இதம் மனசுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம். ஊருக்குள் இருக்கிற ஒட்டுமொத்த அழுக்கையும் இழுத்துக்கொண்டோடும் மழைநீரில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் உற்சாகமாக நீந்திக்கொண்டிருக்கும். தன் வழியில் சிக்கியவர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும். இப்படிப் பரவும் நோய்களிலிருந்து தப்பிக்க, வருமுன் காக்கும் பாலிஸிதான் பெஸ்ட் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் குணசேகரன்.

விக்கிலீக்ஸுக்கு உதவியவரின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை


வாஷிங்டன் : விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களைத் தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிராட்லே மேனிங் தொடர்பான மின்னஞ்சல்களை ஒப்படைக்கும்படி, அரசுத் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு இராணுவம் மற்றும் அரசுத் துறைகளின் ஆவணங்களைக் கொடுத்து உதவியதாக, அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லே மேனிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.

திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் நிஜமாக நடந்தது என்ன?


திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில்  நேற்று மதியம் ஏர்-இந்தியா விமானம் ஹைஜாக் எச்சரிக்கையை அடுத்து, ஆயுதப் படையினரால் சூழ்ந்து கொண்டது பற்றி வெவ்வேறான தகவல்கள் உலாவுகின்றன.
கோபமடைந்த பயணிகள் காக்பிட்டுக்குள் புகுந்ததை அடுத்தே, பைலட் ஹைஜாக் அபாய சிக்னல் அனுப்பினார் என்பது ஒரு தகவல். ஆனால், பயணிகள் மற்றும் கேரள போலீஸின் கூற்றுப்படி, இது தவறான குற்றச்சாட்டு.

பயணிகள் யாரும் காக்பிட்டுக்குள் சென்றதாக தெரியவில்லை. விமானத்தின் முன்பகுதியில் நின்று சிலர் கோபமாக பேசியிருக்கிறார்கள். விமானியிடமும் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். கோபமடைந்த (அல்லது அச்சமடைந்த) கேப்டன், தவறான எச்சரிக்கை கொடுத்திருக்கிறார் என்றே தெரிகிறது.

ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்கள் (2)


தக்பீர் சொல்லும் முறை
الله أكبر الله أكبرلااله الا الله والله أكبر الله أكبر ولله الحمد
அல்லாஹு அக்பர்அல்லாஹு அக்பர்., லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.
9. ஈத் தொழுகைக்காக நடந்து செல்வது
பெருநாள் தொழுகைக்காக நடந்து செல்வது நபி வழியாகும் என அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் . (ஆதாரம் திர்மிதி)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈத் தொழுகைக்கு நடந்தே சென்று நடந்தே திரும்பி வருவார்கள். அறிவிப்பவர்அப்துர்ரஹ்மான் பின் ஸஃது ரளியல்லாஹு அன்ஹுஆதாரம்இப்புனுமாஜா(1070) ஆகவேஈத் தொழுகைக்கு நடந்து செல்வதும்நடந்தே திரும்பி வருவதும் ஸுன்னத்தாகும்.
10. ஈத் தொழுகையின் நேரம்
சூரியன் உதயமாகி தொழுகை தடுக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு பெருநாள் தொழுகை தொழுவது நபிவழியாகும் (புகாரி,அபூதாவூது,இப்னு மாஜாஹாக்கிம்)
குறிப்புபொழுது புலர்ந்து சுமார் இருபது நிமிடங்கள் வரை தடுக்கப்பட்ட நேரமாகும்அதன் பின்னர் தொழலாம்.

அர்ஜென்டினா: இனி ஓட்டுப் போட 16 வயது போதும்!


பியுனோஸ் எயர்ஸ்:அர்ஜென்டினா நாட்டில் தற்போது ஓட்டுப் போடும் வயது 18 ஆக இருக்கிறது. இதை 16 ஆகக் குறைத்து அந்நாட்டின் தலைமை ஆட்சிக் குழுவில் (செனட் சபையில்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் ஓட்டளித்தனர். 2 உறுப்பினர்கள் ஓட்டெடுப்பைப் புறக்கணித்தனர்.
இதனை அடுத்து இத்தீர்மானம் அடுத்த மாதம் பாராளுமன்ற கீழ் சபையில் கொண்டு வந்து நிறைவேறியதும் சட்டம் அமுலுக்கு வரும்.

பத்திரிகையாளர் காஸ்மி பிணையில் விடுதலை!

Israeli-diplomat-attack-Court-denies-bail-to-Syed-Mohammed-Ahmad-Kazmi
புது தில்லி : கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் செய்யித் முஹம்மத் அஹமத் காஸ்மியை உச்சநீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே பிப்ரவரி 13 அன்று ஒரு காரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பத்திரிகையாளர் காஸ்மியின் மகன் ஷவ்ஸாப் காஸ்மி இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட முதல் நாள் முதலே தன்னுடைய தந்தை அப்பாவி என்று தாங்கள் கூறி வந்ததாகவும், இந்த நம்பிக்கையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Friday, October 19, 2012

27 ம் தேதி பக்ரீத் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு


முஸ்லிம்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகை இம்மாதம் 27 ம்தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

முன்னதாக, அரசு நிரலின் படி இம்மாதம் 26 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை என்று நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பிறை கண்டதில் நாள் வேறுபாடு காரணமாக பக்ரீத் பண்டிகை இம்மாதம் 27 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தலைமை காஜி  சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.

தலைமை காஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "ஹிஜ்ரி 1433 துல்காயிதா மாதம் 29-ம் (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை துல்ஹஜ் மாத பிறை சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் காணப்படவில்லை. அதனால் 18-ந் தேதி அன்று துல்ஹஜ் மாத முதல் பிறை என்று இஸ்லாமிய சட்டதிட்ட முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஈதுல் அத்ஹா (பக்ரீத்) பண்டிகை 27-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும்." என்று கூறியுள்ளார்.

ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்கள் (1)


''ஈத்'' என்னும் அரபுச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும்பெருநாள் ஆண்டு தோறும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற்றது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனாவாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்அதற்கான காரணங்களை வினவியபோது நாங்கள் பண்டு தொட்டு விளையாடுவதற்காகவும்பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்றார்கள்அப்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

Dua For Gaza