Tuesday, September 18, 2012

அமெரிக்க அரசை கண்டித்து இராமநாதபுரத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம்!

 இறைவனின் இறுதி தூதர் நபி(ஸல்) அவர்களைஅவதூறாக சித்தரித்து சினிமா தயாரித்தது தொடர்பாக அமெரிக்க அரசை கண்டித்து கீழக் கரை, ஏர்வாடி, பெரியபட்டினம், எஸ்.பி.பட்டினம் பகுதிகளில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

முகமது நபியை அவதூறாக சித்தரித்து அமெரிக்காவில் தயாரான சினிமாவின் 14 நிமிட முன்னோட்ட காட்சி ஜூலை மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது முஸ்லிம்கள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அமெரிக்க அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரான் தயாரித்துள்ள நவீன தொழில்நுட்ப ட்ரோன்!


         டெஹ்ரான்:  

24 மணிநேரமும் நிற்காமல் பறக்கும் திறன் கொண்ட நவீன தொழில்நுட்ப ட்ரோன்(ஆளில்லா விமானம்) தயாரிப்பு வெற்றிக்கரமாக பூர்த்தியானதாக ஈரான் அறிவித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன், ராணுவத்தினரை சுமந்து செல்லவும், நீண்ட தூர தாக்குதல்களை நடத்தவும் திறன் படைத்தது என்று ஈரான் ராணுவ கமாண்டர் மேஜர் ஜெனரல் முஹம்மது அலி ஜஃப்ரி கூறியுள்ளார். 

Monday, September 17, 2012

பாம்பன்: அமெரிக்க அரசை கண்டித்து கடையடைப்பு, பேரணி,பொதுக் கூட்டம்!


 இறைத்தூதர் முகமது நபி(ஸல்) அவர்களை தவறதாக சித்தரித்து திரைப்படம் எடுத்தவரையும், அமெரிக்க அரசையும் கண்டித்து பாம்பனில் இஸ்லாமியர்கள் கண்டன பேரணி நடத்தினர்.


முகமது நபியை தவறாக சித்தரித்து அமெரிக்காவில் திரைப்படம் தயாரிக்கப்படடு திரையிடப்பட்டுள்ளது. இதற்கு உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திரைப்படம் எடுத்த அமெரிக்கரையும், அமெரிக்காவையும் கண்டித்து பாம்பனில் நேற்று இஸ்லாமியர்கள் கண்டன பேரணி நடத்தினர். திரைப்படத்தை உடனே நிறுத்த வலியுறுத்தி பாம்பனில் கடையடைப்பும் நடந்தது.

ஒல்மர்ட்டின் வருகையை எதிர்த்து ஜெர்மனியில் மாபெரும் பேரணி!


பெர்லின்: ஜெர்மனியின் ஐஸலோன் மாநகரில் வர்த்தகம் மற்றும் தகவல் தொழினுட்பப் பள்ளியில் வருடாந்தம் இடம்பெறும் கருத்தரங்கில் உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் எஹூத் ஒல்மேர்ட், அமெரிக்கச் செயலர் கொண்டலீஸா ரைஸ் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

முன்னாள் இஸ்ரேலியப் பிரதமரின் ஜெர்மன் வருகையை வன்மையாக ஆட்சேபித்து ஆயிரக்கணக்கான ஜேர்மனியர்கள் அணிதிரண்டனர். பலஸ்தீன் கொடிகளை அசைத்தவாறும், 2008 ஆம் ஆண்டு காஸாமீது இஸ்ரேல் மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலின்போது படுகொலை செய்யப்பட்ட பலஸ்தீனர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறும் ஜெர்மனிய மக்கள் மாபெரும் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டனர். "இவரை இங்கே உரையாற்ற அழைப்பதற்குப் பதிலாக, போர்க்குற்ற விசாரணைகளுக்காக ஹேய்க்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்துக்கு அனுப்பிவையுங்கள்!" என்று பேரணியில் கலந்துகொண்ட பலஸ்தீன் ஆதரவாளர்கள் குரல் எழுப்பினர்.

காஸியாபாத்:போலீசுக்கு கிள்ளுக்கீரையாகிப்போன முஸ்லிம் உயிர்கள்!

Six die as police open fire at crowd protesting against burning of Quran in Ghaziabad
காஸியாபாத்(உ.பி):முஸ்லிம்களின் புனித வேதமான திருக்குர்ஆனின் பிரதிகளை கிழித்தெறிந்து அதில் முஸ்லிம்கள் வெறுக்கும் பன்றியின் பெயரை எழுதி இழிவுப்படுத்திய சம்பவத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முஸ்லிம்களை கொல்வதற்காக காத்திருந்ததைப் போல துப்பாக்கிச்சூடு நடத்த போலீஸ் அவசரம் காட்டியதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
போராட்டம் நடத்தியோர் மீது லத்திசார்ஜ், கண்ணீர் புகை வீச்சு, துப்பாக்கிச்சூடுக் குறித்த முன்னறிவிப்பு எதுவுமின்றி அவசர அவசரமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு பார்வையிடச் சென்ற ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த்(அர்ஷத் மதனி பிரிவு) தலைவர்களிடம் உள்ளூர் மக்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் சென்னையில் நடத்திய மனித சங்கிலி போராட்டம்!

அப்பாவி சிறைவாசிகளை பிணையில் விடுவிக்க கோரி "சட்டப்படி பிணையில் விடு, அப்பாவிகளை விடுதலை செய்!" என்ற முழக்கத்தை முன்வைத்து கடந்த 15.08.2012 முதல் 15.09.2012 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அதன் நிறைவாக டெல்லி (ஜந்தர் மந்தர்) மற்றும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 100ற்கும் மேற்பட்ட இடங்களில் இக்கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை 15.09.2012 அன்று ஒரே நேரத்தில் நடத்தியது.


சென்னையில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு நீதிக்கான போராட்டத்தில் தங்களின் கைகளுக் துணை நிற்கும் என்பதை உறுதி செய்தனர்.

துனிசியா, சூடான் தூதரக அதிகாரிகளை அமெரிக்கா திரும்ப அழைத்துள்ளது!

US pulls some embassy staff out of Sudan, Tunisia
வாஷிங்டன்:இறைத்தூதரை இழிவுப்படுத்தும் திரைப்படத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில் துனீசியா, சூடான் நாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரை நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
அவசர சேவைக்கான அதிகாரிகளை தவிர இதர அதிகாரிகள் இரு நாடுகளில் இருந்து விரைவாக வெளியேவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நியூலாண்ட் கூறினார்.

Sunday, September 16, 2012

"பாதுகாப்பு கொடுக்க எங்களுக்கு தெரியும்!"அமெரிக்க படையை திருப்பி அனுப்புகிறது சூடான்!


தமது தூதரகத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்த பாதுகாப்பு படைக்கு அனுமதி மறுத்துள்ளது சூடான். இதனால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சூடான் தலைநகர் கார்ட்டூம் சென்று இறங்கிய அமெரிக்க பாதுகாப்பு டீம், நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பல நாடுகளிலும் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க தூதரகங்களில், அதிக சேதமடைந்த இடங்களில், கார்ட்டூம் அமெரிக்க தூதரகமும் ஒன்று. அதையடுத்தே, தூதரகத்தை பாதுகாக்க அமெரிக்க Marine rapid response team அங்கு அனுப்பப்பட்டது.
இவர்கள் இன்று முதல் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பை பொறுப்பேற்பார்கள் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

மாரடைப்பு வருவதை தலைமுடி மூலம் முன் கூட்டியே அறியலாம்: ஆய்வில் தகவல்!

மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது கடினம். ஆனால் இத்தாலி விஞ்ஞானிகள் தலைமுடி மூலம் முன்கூட்டி கண்டு பிடித்து விடலாம் என்று கூறுகிறார்கள். இது சம்பந்தமாக இஸ்ரேலில் உள்ள மோயர் மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வந்தனர். 

உடலில் கார்டிசாலின் என்ற ஒரு வகை என்சைம் சுரப்பது உண்டு. இது தொடர்ந்து அதிகமாக சுரந்தால் மாரடைப்பு ஏற்படும். உமிழ்நீர், சிறு நீர்,ரத்தம் ஆகியவற்றின் மூலம் கார்டிசாலின் சுரப்பதை கண்டு பிடிக்கலாம். ஆனால் இவற்றின் மூலம் துல்லியமாக கண்டு பிடிக்க முடியாது. ஏன் என்றால் இவற்றின் மூலம் சோதனை நடத்தும் போது குறிப்பிட்ட அந்த நேரத்தில் சுரக்கும் கார்டிசாலின் அளவை மட்டுமே கண்டு பிடிக்க முடியும்.

சிறையில் உண்ணாவிரதம்: மரணத்தின் விளிம்பில் ஃபலஸ்தீனர்கள் – ரெட்க்ராஸ்!

3 Palestinian hunger strikers risk death
டெல்அவீவ்:சட்டவிரோத சிறையில் இருந்து விடுவிக்க கோரி இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் 3 ஃபலஸ்தீனர்கள் மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும், இதுக்குறித்து அதிகாரிகள் கண்ணைத் திறக்கவேண்டும் என்றும் ரெட் க்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸமர் பரக், ஹஸன் ஸஃபாதி, அய்மன் ஷரானிஹ் ஆகியோர் இஸ்ரேலின் அட்டூழியத்தை எதிர்த்து பல வாரங்களாக சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விசாரணை கூட நடத்தாமல் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்ட தங்களை இனிமேலாவது விடுதலைச் செய்ய வேண்டும் என்பது ஃபலஸ்தீனர்களின் கோரிக்கையாகும் என்று ரெட் க்ராஸின் இஸ்ரேல் பிரதிநிதிகளின் தலைவர் ஜுவான் பெர்டோ ஸ்கேரர் கூறியுள்ளார்.

Dua For Gaza