Saturday, February 25, 2012

ம.பி. பத்திரிகையாளர் கொலை: குழந்தையை கடத்திய கும்பலுக்கு தொடர்பு?

MP scribe's murder linked to abduction
போபால்:குடும்பத்துடன் கொலைச் செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திரிகா ராய் ஒரு குழந்தையை கடத்திச் சென்ற கும்பலை பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் கொலையில் முடிந்ததாக மத்திய பிரதேச போலீஸ் கூறுகிறது.

அண்மையில் பி.டபிள்யூ.டி பொறியாளரான ஹேமந்த் ஜாரியாவின் மகனை கடத்திச் சென்ற கும்பலை சந்திரிகாராய்க்கு தெரியும். ராய் அந்த கும்பலை மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இம்முயற்சி கொலையில் முடிந்துள்ளது என்று ம.பி போலீஸ் கூறுகிறது.

எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் இந்தியா: ஒபாமா

Obama
வாஷிங்டன்:இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளில் எண்ணெய் உபயோகம் அதிகரித்ததுதான் விலை உயர்வுக்கு காரணம் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.

நீண்ட கால அடிப்படையில் எண்ணெயின் விலை உயர்வுக்கு மேற்கண்ட 3 நாடுகளும்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய பாரக் ஒபாமா, மேற்காசியாவின் ஸ்திரமற்ற நிலையும், ஈரான் பிரச்சனையும் விலை உயர்வுக்கு ஆக்கமளித்துள்ளது என்று தெரிவித்தார்.

ஈரான்:பாராளுமன்ற தேர்தல் துவங்கியது!

Campaigning began in Iran on Thursday for parliamentary elections
டெஹ்ரான்:அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஈரான் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் துவங்கியுள்ளன. அதிபர் அஹ்மத் நஜாதின் மக்கள் ஆதரவு மதிப்பீடு செய்யப்படும் என கருதப்படும் இந்த தேர்தலில் 3400 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மார்ச் 2-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அணுசக்தி திட்டத்தின் பெயரால் மேற்கத்திய நாடுகளின் மிரட்டல்களுக்கு மத்தியில் வலுவான நிலைப்பாட்டை மேற்கொண்ட அஹ்மத் நஜாதிற்கு ஆதரவு கூடும் என்று கருதப்படுகிறது.

யூத தம்பதியர் இந்தியாவை விட்டு வெளியேற நீதிமன்றம் உத்தரவு!

CAW2XHWV
கொச்சி:விசா சட்டத்தை மீறி இந்தியாவில் தங்கிய யூத புரோகிதர் என கருதப்படும் ஷெனோர் ஸல்மான் மற்றும் அவரது மனைவி யோஃபா ஷெனோய் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு மத பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்றும், உளவுத்துறை அதிகாரிகள் இவர்களுக்கு எதிராக அறிக்கையை அளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது.

யூத தம்பதியர் விசா சட்டத்தை மீறி இந்தியாவில் தங்கியது தொடர்பாக ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்வோம் என்று மாவட்ட ஆட்சியர் பி.எ.ஷேக் பரீத் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதி எஸ்.ஸிரி ஜகன் உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் மேல்முறையீடு செய்ய நீதிபதி அனுமதியளித்தார்.

கர்நாடகா:முதல்வர் பதவி கிடையாது – எடியூரப்பாவின் ஆசையில் மண்!

yediruppa
பெங்களூர்:முதல்வர் பதவிக்காக பகீரத முயற்சியில் ஈடுபட்ட எடியூரப்பாவின் ஆசையில் மண் விழுந்துள்ளது. இம்மாதம் 27-ஆம் தேதிக்குள் மீண்டும் தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று எடியூரப்பா இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும், பலன் இல்லை. கட்சியின் மத்திய தலைமை எடியூரப்பாவுக்கு பெப்பே காட்டிவிட்டது. அவரது கோரிக்கையை நிராகரித்த பா.ஜ.க மேலிடம், முதல்வர் டி.வி.சதானந்தாகவுடாவை தற்போது மாற்ற தேவையில்லை என்றும், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எடியூரப்பா, தான் குற்றவாளியில்லை என்பதை நிரூபிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

சிரியா எதிர்ப்பாளர்களுக்கு ஹமாஸ் ஆதரவு!

Hamas’s prime minister in Gaza, Ismail Haniya
கெய்ரோ:சிரியாவில் ஏகாதிபத்தியவாதி பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் துவங்கி பல மாதங்கள் கடந்த நிலையில் ஃபலஸ்தீன் போராட்ட இயக்கமும், சிரியா மற்றும் ஈரானின் நீண்டகால நண்பரான ஹமாஸ் தனது மெளனத்தை கலைத்துள்ளது.

கெய்ரோவில் வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் ஆற்றிய உரையில் ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா சிரியா எதிர்ப்பாளர்களுக்கு தனது ஆதரவை வெளியிட்டார்.

சென்னை என்கவுன்டர் குறித்த தமிழக போலீசாரின் கூற்றில் முரண்பாடு – விசாரணைக்கு நிதீஷ் குமார் உத்தரவு

imagesCAT5RXRL
பாட்னா:சென்னை வேளச்சேரியில் கடந்த வியாழக்கிழமை நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பீகார் இளைஞர்கள் குறித்த தமிழக போலீசாரின் தகவல்கள் முரணாக இருப்பதால் அதுகுறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார். இந்த விசாரணையை பீகார் மாநில டிஜிபி தலைமையிலான போலீசார் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

என்கவுன்டரில் கொலைச் செய்யப்பட்ட 5 வங்கிக் கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தமிழக காவல்துறை அறிவித்தது. மேலும் கொல்லப்பட்ட இளைஞர்கள் பணத்தை பீகாரில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், பீகாருக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எகிப்து:அதிபர் தேர்தலில் போட்டியிடும் இஸ்லாமிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்: கவலைக்கிடம்!

Abdel Moneim Abol Fotoh
கெய்ரோ:ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் எகிப்தின் இஸ்லாமிய கட்சி அதிபர் வேட்பாளர் டாக்டர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கெய்ரோவில் தீவிரகண்காணிப்பு பிரிவில் அவருக்கு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மூளைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உதவியாளர்களும், போலீசாரும் கூறுகின்றனர்.

போலி என்கவுண்டர்:மோடி அரசின் நடவடிக்கையில் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

Encounter deaths Supreme Court pulls up Gujarat Govt
புதுடெல்லி:குஜராத் மாநிலத்தில் நடந்த போலி என்கவுண்டர் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை கண்காணிக்கும் கண்காணிப்புக் குழுவுக்கு புதிய தலைவரை நியமித்த மோடி அரசின் நடவடிக்கையை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிமன்றத்திடம் கலந்தாலோசிக்காமல் இத்தகையதொரு தீர்மானம் எடுத்த மோடி அரசு மீது கடுமையான அதிருப்தியை உச்சநீதிமன்றம் வெளியிட்டது.

நாக்பூர் மாநகராட்சியில் பா.ஜ.க-முஸ்லிம் லீக் கூட்டணி!

imagesCALXG0EU
நாக்பூர்:ஹிந்துத்துவா கட்சியான பா.ஜ.கவும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கும் கூட்டணி வைத்துள்ளன. நாக்பூர் மாநகராட்சியில் இந்த விசித்திரமான முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பை சம்பாதிக்கும் நடவடிக்கையாக முஸ்லிம் லீக்கின் உறுப்பினர்கள் ஹிந்துத்துவா அரசியல் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

இதனால் 145 உறுப்பினர்களை கொண்ட நாக்பூர் மாநகராட்சியில் 62 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.கவுக்கு மாநகராட்சியை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முஸ்லிம் லீக்கின் இஷ்ரத் அன்ஸாரி, அஸ்லம் கான் ஆகியோர் சங்க்பரிவாரின் அரசியல் கட்சியுடன் மாநகராட்சி ஆட்சியில் பங்காளிகளாக மாறியுள்ளனர்.

Dua For Gaza