Sunday, November 20, 2011

அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாக். டாக்டர் விரைவில் விடுதலை

5-16-2011_1255_l
ஜெய்ப்பூர்:ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் டாக்டர்.கலீல் ஜிஸ்தியின் விடுதலைக்கான வாய்ப்பு மீண்டும் உருவாகியுள்ளது. ஜிஸ்தியின் மனைவியும், பிள்ளைகளும் அஜ்மீருக்கு வருகை தந்துள்ளதை அடுத்து அவரது விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. ஜிஸ்தியின் விடுதலை தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள கருணை மனு ராஜஸ்தான் செயல் ஆளுநர் சிவ்ராஜ் பாட்டீல் பரிசீலனைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வழக்கு விசாரணை 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது குறித்தும், வழக்கில் ஜிஸ்தியின் பங்கினைக் குறித்தும் கூடுதல் விபரங்களை அளிக்க கோரி ஆளுநர் கருணை மனுவை அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இவ்வருடம் ஜனவரி மாதம் ஜிஸ்திக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

ஸைஃபுல் இஸ்லாம் கைது

imagesCA90X3VT
திரிபோலி:லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் மூத்த மகனும், அவருடைய வலதுகரமாக செயல்பட்டவருமான ஸைஃபுல் இஸ்லாம் தெற்கு லிபியாவின் உபாரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

உபாரியில் பாலைவனத்தில் வைத்து மூன்று மெய்க்காப்பாளர்களுடன் ஸைஃபுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார் என லிபியாவின் சட்ட அமைச்சர் முஹம்மது அல் அல்காயி கூறுகிறார். பெரிய அளவிலான எதிர்ப்பு தெரிவிக்காமலேயே ஸைஃபுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார். மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்காக ஸைஃபுல் இஸ்லாம் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது.

காஸ்ஸா:இந்தியா 10 லட்சம் டாலர் நிதியுதவி

T30670611-1965694
ராமல்லா(மேற்கு கரை):காஸ்ஸாவில் ஐ.நா புலன்பெயர்ந்தோர் முகாமில் வசிக்கும் ஃபலஸ்தீன் குழந்தைகளுக்காக இந்தியா 10 லட்சம் டாலர் தொகையை வழங்கியுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் இ.அஹ்மத் ஐ.நா ஏஜன்சி கமிஷனர் ஜெனரல் ஃபிலிப்போ க்ரான்டிக்கு 10 லட்சம் டாலருக்கான தொகையை செக்காக வழங்கினார்.

முகாமில் வசிக்கும் குழந்தைகளுக்கு உணவை அளிப்பதற்கான தேவைகளுக்காக 2011-12 வருடத்திற்கான இந்தியாவின் நன்கொடை என இ.அஹ்மத் தெரிவித்துள்ளார். காஸ்ஸாவில் ஐ.நா பள்ளிக்கூடங்களில் பயிலும் 76 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் 50 தினங்களுக்கான தேவைகளுக்கு இந்த தொகை விநியோகிக்கப்படும். துயரங்களை அனுபவித்துவரும் ஃபலஸ்தீன் மக்களுக்காக சேவையாற்றும் ஐ.நா ஏஜன்சிக்கான இந்தியாவின் உதவி தொடரும் என இ.அஹ்மத் தெரிவித்தார்.

அணுசக்தி:ஈரானுக்கு எதிராக ஐ.ஏ.இ.ஏ தீர்மானம்

iaea

ஜெனீவா:ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக கவலைகள் அதிகரித்து வருவதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியான ஐ.ஏ.இ.ஏ தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஈரானின் அணுசக்தியை குறித்து சர்வதேச அளவில் எழுந்துள்ள கேள்விகளுக்கு அந்நாடு பதிலளிக்க வேண்டும் என தீர்மானம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு அளிக்கப்படவில்லை. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் வெளியான ஐ.ஏ.இ.ஏவின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக குற்றச்சாட்டை எழுப்பிவரும் சூழலில் ஐ.ஏ.இ.ஏவின் அறிக்கை வெளியானது. ஆனால், எரிசக்தி தேவைக்காக தங்களுடைய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் என ஐ.ஏ.இ.ஏவில் ஈரானின் பிரதிநிதி அலி அஸ்கர் சுல்தானி கூறியுள்ளார். அணு ஆயுதம் இல்லாத மேற்காசியாவை உருவாக்குவதற்கு அடுத்த வாரம் நடைபெறும் ஐ.ஏ.இ.ஏவின் மாநாட்டை ஈரான் புறக்கணிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கஷ்மீர்:15 குழந்தைகளை மதம் மாற்றியதை ஒப்புக்கொண்டார் பாதிரியார்

ஸ்ரீநகர்:கஷ்மீரில் 15 முஸ்லிம் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றியதை ஆல் இந்தியா செயிண்ட்ஸ் சர்ச்சின் பாதிரியார் ஒப்புக்கொண்டுள்ளார்.

கஷ்மீரின் முதன்மை முஃப்தியின் தலைமையிலான உயர்மட்ட அறிஞர்கள் சபையின் முன்னால் கடந்த மாதம் பாஸ்டர் சி.எம்.கன்னா இதனை ஒப்புக்கொண்டுள்ளார். கஷ்மீரில் மதமாற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதாக இவர் மீது புகார்கள் எழுந்ததை அடுத்து உயர்மட்ட சபை பாதிரியாரிடம் விசாரணை மேற்கொண்டது.

குளிர்கால கூட்டத் தொடரில் மதக் கலவரத்திற்கு எதிரான மசோதா விவாதிக்கப்பட வேண்டும் – என்.ஏ.சி

புதுடெல்லி:தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக் கிழமையன்று மதக் கலவர தடுப்பு மசோதா மீது வருகின்ற குளிர்கால கூட்டுத்தொடரில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

என்.ஏ.சி உறுப்பினர்களாகிய பாரக் நக்வி மற்றும் ஹர்ஷ் மந்தர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்தக் கூட்டத்தில் தெரிவித்ததாவது தற்போதுள்ள அரசு உண்மையிலேயே இந்த சட்டத்தை கொண்டுவருவதில் அக்கறை கொண்டுள்ளது என்றால் அதற்கு சரியான தருணம் இதுவே ஆகும். தற்போது முடிவெடுக்க வேண்டியது அரசுதான் என்று கூறியுள்ளனர்.

தம்மாமில் நடைபெற்ற சமூக ஆர்வலர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

att9f720
‘நீதியின் மீது தேசத்தை கட்டமைப்போம்’ என்கிற முழக்கத்தோடு நவம்பர் 26, 27 நாட்களில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் வைத்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருவது போல, இந்தியர்கள் வசிக்கும் வெளிநாடுகளிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளிலும் சிறப்பாக நடந்து வருகிறது.

இந்த பிரச்சாரத்தை செய்து வரும் குழுவின் சார்பாக சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளும், கருத்தரங்கங்களும், கலந்துரையாடல்களும் பல்வேறு மொழிகளில் நடந்து வருகிறது.

Saturday, November 19, 2011

கோலாகலமாக நடக்கும் 30வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி!

18112011665
ஷார்ஜா:ஷார்ஜாவில் 30வது புத்தகக் கண்காட்சி நவம்பர் 16ம் தேதி துவங்கியது. ஷார்ஜா ஷேக் ஸுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி இந்தக் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். பல நாடுகளின் பதிப்பகங்கள் பங்குபெறும் இந்தக் கண்காட்சியில் இந்திய பதிப்பகங்கள் அதிக ஸ்டால்களைப் போட்டுள்ளதால் அனைவரின் கவனமும் அங்கே திரும்பியுள்ளது.

பல்வேறு நோய்களை விரட்டும் தாய்ப்பால்

தாய்ப்பால்
லண்டன்:குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது சிறந்த தொடக்கம் என்பதை நாம் அறிவோம். ஆனால் நோய்களை விரட்டும் மருத்துவ குணமும் தாய்ப்பாலுக்கு உண்டு என்பதை நிபுணர்கள் இப்போது தெரிவிக்கிறார்கள்.
தாய்ப்பாலில் உள்ள மூலச் செல்களுக்கு, மறதி வியாதி முதல் புற்றுநோய் வரை விரட்டும் ஆற்றல் உண்டு என்று சர்வதேச நிபுணர் குழு தெரிவித்துள்ளது. தாய்ப்பாலில் உள்ள மூலச் செல்கள், கருவில் உள்ள செல்களைப் போன்று உள்ளன. உடலில் உள்ள எந்தச் செல்லின் தன்மையையும் மாற்றியமைக்கும் ஆற்றலுடையவை மூலச் செல்கள்.

புற்றுநோய், நீரிழிவு, பார்வைக் குறைபாடு, முடக்குவாதம் போன்ற நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இச்செல்களுக்கு உண்டு என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வால்ஸ்ட்ரீட் போராட்டம்: அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானோர் கைது

imagesCA744O6C
வாஷிங்டன்:வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் துவங்கி இரண்டு மாதம் முடிவடைவதை தொடர்ந்து அமெரிக்காவின் நகரங்களில் நடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிகளுக்கு எதிரான பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

நியூயார்க்கில் ப்ரூக்ளின் பாலத்தின் வழியாக நடந்த பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர். நியூயார்க்கில் மட்டும் முன்னூறு பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

Dua For Gaza