Friday, July 22, 2011

கேரளா:அருந்ததி ராய்க்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க குண்டர்கள்

arundhati_roy
திருச்சூர்(கேரளா):கேரளாவின் கலாச்சார நகரமாக கருதப்படும் திருச்சூரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வருகைத்தந்த பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய்க்கு எதிராக பா.ஜ.கவை சார்ந்த சங்க்பரிவார குண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சூரில் சாகித்ய அகாடமி அரங்கில் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு வருகைத்தந்தார் அருந்ததிராய். அவருக்கு எதிராக பா.ஜ.க பாசிச குண்டர்கள்  கறுத்த முகமூடி அணிந்துக்கொண்டு  ’வெளியே போ(கோ பேக்)’ என கோஷம் எழுப்பினர். பா.ஜ.க போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது என்பதை அறிந்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

லிபியா:ப்ரிகாவில் போராட்டம் தீவிரம்-எட்டுபேர் பலி

imagesCA55LL2C
திரிபோலி:லிபியாவின் எண்ணெய் நகரமான ப்ரிகாவில் கர்னல் முஅம்மர் கத்தாஃபியின் படையினருக்கும், அரசு எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. சில தினங்களாக இந்நகரத்தின் பல பகுதிகள் எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் எதிர்ப்பாளர்களின் கொடியின் வண்ணத்திலான ஆடை அணிந்து வந்த கத்தாஃபியின் ராணுவத்தினர் தாக்குதலை தொடுத்தனர். இத்தாக்குதலில் எட்டுபேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

புளியங்குடி மஸ்ஜிதுக்கு தீவைப்பு:ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்

புளியங்குடி:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி நகராட்சியில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றிற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர்.இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

புளியங்குடியில் காயிதே மில்லத் நகர் 4வது தெருவில் புளியங்குடி தவ்ஹீத் ஜமாத் அறக்கட்டளையின் தற்காலிக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கடந்த 8 மாதமாக இங்கு தான் செயல்பட்டு வருகிறது. இதில் மஸ்ஜிதூர் ரஹ்மான் என்ற மஸ்ஜித் கூரை செட்டில் செயல்பட்டுவந்தது. இங்கு தினமும் 5 வேளை தொழுகை நடத்தப்பட்டது.

Thursday, July 21, 2011

முன்னாள் எம்.எல்.ஏ., அசன்அலி வீட்டில் கொள்ளை

ராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழக்கரையில் மேலத்தெருவில் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் அலி குடியிருக்கிறார்.

இவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளார். இவரது வீட்டின் அருகே சென்னை தொழில் அதிபர் இஸ்மாயில் வீடு உள்ளது.



இவர்களது வீடுகளில் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் பின்புறம் மாடி வழியாக கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.


பின்னர் 2 வீடுகளில் இருந்த பீரோவை உடைத்து பட்டு சேலை, வெள்ளி பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்பட ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை அடித்து சென்றுவிட்டனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

இஸ்லாமியாஃபோபியா:முஸ்லிம் இளைஞருக்கு துபாய் செல்ல அனுமதி மறுப்பு

images
கோழிக்கோடு:இச்சம்பவம் நியூயார்க்கிலோ, லண்டனிலோ, டெல் அவீவிலோ நடக்கவில்லை. கடவுளின் சொந்த நாடு (God’s own country) என்றழைக்கப்படும் கேரளாவில் நடந்த சம்பவம். துபாய் செல்வதற்கு விமான நிலையத்திற்கு வந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை துபாய் செல்வதற்கு எமிக்ரேசன் (குடிபெயர்வு) அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். காரணம் வேறொன்றுமில்லை அவரது தாடிதான் பிரச்சனை.

கேரள மாநிலத்தின் வடமாவட்டமான காஸர்கோட்டிலிருந்து 150 கி.மீ பயணித்து மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ள கரிப்பூர் விமான நிலையத்திற்கு தனது தாயாருடன் விசிட்டிங் (சுற்றுலா) விசாவில் செல்வதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வருகை தந்தார் முஹம்மது இக்பால். இவர்களது சுற்றுலா விசாவை அனுப்பியவர் இக்பாலின் சகோதரர் ஆவார். செல்லவிருந்த விமானம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகும்.

போர்க் குற்றவாளி ஹாடிக் கைது

article-1158895-03BB04BB000005DC-272_468x391
பெல்கிரேடு:ஐ.நா நீதிமன்றம் போர்க்குற்றவாளியாக அறிவித்த கோரன் ஹாடிக்கை செர்பியா கைது செய்துள்ளது. 1991-95 ஆம் ஆண்டில் குரோஷியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலைச் செய்த வழக்கில் ஹாடிக்(வயது 52) குற்றவாளியாவார்.

குரோஷியாவில் செர்ப் பிரிவினைவாதிகளின் தலைவராக இருந்தார் ஹாடிக். போஸ்னிய செர்ப் ராணுவத் தளபதியாக இருந்த போர் பயங்கரவாதி ரத்கோ மிலாடிச்சை கைதுச் செய்து இரண்டு மாதத்திற்கு பிறகு செர்பியா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக முயன்றுவரும் செர்பியா சர்வதேச அழுத்தத்தை தொடர்ந்து பிராந்தியத்தின் கடைசிக் குற்றவாளியான ஹாடிக்கை கைதுச் செய்துள்ளது.

முல்லா உமர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானதின் பின்னணியில் அமெரிக்கா – தாலிபான்

mullah omer
காபூல்:தாலிபான் தலைவர் முல்லா உமர் கொல்லப்பட்டதாக பொய்யான செய்தி வெளியானதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக அவ்வமைப்பின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

தங்களின் மொபைல் போன்களை ஹேக் செய்து அமெரிக்கர்கள் எஸ்.எம்.எஸ்ஸை அனுப்பியதாக தாலிபானின் செய்தித் தொடர்பாளர்களான ஸபீஹுல்லா முஜாஹிதும், காரி யூசுஃப் அஹ்மதியும் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி ஒட்டுகேட்பு:பிரிட்டன் பிரதமர் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்

david-cameron_6_jpg-100x100
லண்டன்:சர்வதேச ஊடக முதலை ரூபர்ட் மர்டோக்கின் நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் பத்திரிகைக்கு பரபரப்பான செய்திகளுக்காக பிரபலங்கள் உள்பட ஏராளமானோரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட வழக்கை சரியான முறையில் விசாரணை நடத்துவதில் அரசுகள் தோல்வியடைந்ததாக பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார்.

ரூபர்ட் மர்டோக்கிற்கு சொந்தமான நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் பத்திரிகை நடத்திய தொலைபேசி ஒட்டுக்கேட்பு சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியதையடுத்து அப்பத்திரிகை இழுத்து மூடப்பட்டது. இந்நிலையில் இப்பிரச்சனையை குறித்து அழைப்பு விடுக்கப்பட்ட பாராளுமன்ற அவசரக்கூட்டத்தில் விளக்கம் அளித்தார் டேவிட் காமரூன்.அதேவேளையில் நியூஸ் ஆஃப் த வேர்ல்டிற்கு எதிரான லஞ்சம், தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்குகளின் விசாரணையை முறியடிக்க தனது அதிகாரிகள் தலையிடவில்லை என காமரூன் தெரிவித்தார்.

சோமாலியாவில் கொடும் பட்டினி-ஐ.நா

_40931017_somalia203ap
மொகாதிஷு:கடந்த 60 வருடங்களாக ஆப்பிரிக்காவில் தொடரும் வறட்சி சோமாலியாவில் இரண்டு முக்கிய பிரதேசங்களை கொடும் பட்டினியால் வாடும் பகுதிகளாக மாற்றியதாக ஐ.நா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐ.நா மனிதவள துறையின் ஒருங்கிணைப்பாளர் மார்க் பவ்டன் சோமாலியாவின் பாகுல், லோவர் ஷாபல்லெ ஆகிய பிரதேசங்கள் பட்டினியால் வாடுவதாக அறிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை:மனுதாரர்களை மிரட்டுபவர்களுக்கு கமிஷன் எச்சரிக்கை

4_Shailesh_Gandhi_Sunday_Magazine_vb
புதுடெல்லி:தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி விண்ணப்பம் அளிக்கும் மனுதாரர்களை மிரட்டுபவர்களுக்கு தகவல் உரிமை கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய மிரட்டல் வேலைகளில் ஈடுபடுவோரை தண்டிக்க அரசின் அனைத்து கட்டமைப்புகளையும் கமிஷன் பயன்படுத்தும் என தகவல் உரிமை கமிஷனர் ஷைலேஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

ரேசன் கார்டிற்காக இரண்டு வருடம் காத்திருந்த பிறகு பலனில்லாமல் வந்த வயோதிக பெண்மணியின் புகாரை தொடர்ந்து கமிஷன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வறுமையில் வாடும் துர்கா என்ற வயோதிக பெண்மணி ரேசன் கார்டிற்காக டெல்லி அரசு அலுவலகத்தில் இரண்டு வருடங்களாக அலைந்துள்ளார். தனது மனுவின் நிலையைக் குறித்து அறிய அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி மனு கொடுத்துள்ளார். ஆனால், இம்மனுவிற்கு பதிலளிக்காததுடன் அவருடைய வீட்டிற்கு சென்று கண்காணிப்பு குழு உறுப்பினர் மிரட்டியுள்ளார்.

Dua For Gaza