Wednesday, February 16, 2011

யெமனில் மக்கள் எழுச்சிக்கு தீப்பொறியாக மாறிய தவக்கல் கர்மான்

ஸன்ஆ,பிப்:எகிப்தில் ஏகாதிபத்திய ஆட்சியையும், முப்பது ஆண்டுகளாக அதிகாரத்தை விட்டு விலகாத ஹுஸ்னி முபாரக்கையும் 18 தினங்கள் நடந்த இரத்தக் களரியின்றி நடத்தப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவந்தது.

இந்த எழுச்சியின் மூலம் யெமனில் உருவாகியுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்க தவக்கல் கர்மான் என்ற பெண்மணி களமிறங்கியுள்ளார்.

ஃபேஸ்புக் என்ற சமூக இணையதள நெட்வர்க் மூலமாக யெமன் ஏகாதிபத்திய அரசுக்கெதிரான பிரச்சாரத்தில் மூழ்கியுள்ள தவக்கல் அடுத்த கட்ட போராட்டத்திற்காக மக்கள் தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

32 வயதான மூன்று குழந்தைகளின் தாயாரான தவக்கல் யெமன் நாட்டின் பிரசித்திப்பெற்ற மனித நேய ஆர்வலராவார். ஆண்கள் கூட ஏகாதிபத்திய அரசுக்கெதிராக குரல் எழுப்ப தயங்கும் வேளையில், யெமன் தேசம் அராஜக ஆட்சிக்கெதிரான போராட்டத்திற்கு ஒரு தலைவரை தேடும் வேளையில் தவக்கலின் பணி புரட்சிகரமானது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிபரின் மாளிகையை நோக்கி மக்கள் பேரணி நடத்தினர். திங்கள்கிழமை ஸன்ஆ பல்கலைக்கழகத்திற்கு அருகில் மாணவர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். மாணவர்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என சமூகத்தின் அனைத்துத் துறைகளைச் சார்ந்தவர்களும் வீதிகளில் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளனர்.

முபாரக்கினைப் போலவே அலி அப்துல்லாஹ் ஸாலிஹும் யெமன் நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளாக அதிபர் பதவியில் விடாப்பிடியாக இருந்துவருகிறார்.

"எகிப்திற்கு பிறகு இப்பிராந்தியத்தில் எல்லா ஏகாதிபத்தியவாதிகளும் வீழ்ச்சியை சந்திப்பார்கள். இதில் முதலிடம் அலி அப்துல்லாஹ் ஸாலிஹாகும்" என தவக்கல் கர்மான் கருத்துத் தெரிவித்துள்ளார்.

எகிப்து ஒரு முன்மாதிரியாகும். ஏனெனில் இப்பிராந்தியத்தில் செல்வாக்கு மிகுந்த ஏகாதிபத்தியவாதியாக இருந்தார் ஹுஸ்னி முபாரக். யெமனிலும் எகிப்தைப்போல் புரட்சியை ஏற்படுத்த இயலும் என தவக்கல் கர்மான் சுட்டிக்காட்டுகிறார்.

ஊழல், கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம், மறுக்கப்படும் சுதந்திரம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி யெமன்வாசிகள் போராட்டக் களமிறங்குகின்றனர்.

அரபுலகில் நடைபெறும் எழுச்சிப் போராட்டங்களில் பெண்கள் தீவிரமாக பங்கேற்கின்றனர். தவக்கல் கர்மானின் சகோதரர் தாரிக் யெமனில் பிரசித்திப்பெற்ற கவிஞராவார். அதிபர் ஸாலிஹுடன் தாரிக்கிற்கு நெருக்கம் உண்டு. தவக்கலை ஒதுங்கச் சொல்லுங்கள். எனக்கு கீழ்படியாவிட்டால் அவரை கொலைச் செய்துவிடுவேன் என ஸாலிஹ் மிரட்டியுள்ளார். தனக்கு வந்த மிரட்டலை தவக்கல் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளிடமும், அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் தவக்கலுக்கு மிரட்டல் செய்திகள் வந்தன. சமீபத்தில் அதிபரின் ஆதரவாளர்கள் தவக்கல் கர்மானை தாக்கியபொழுது அவருக்கு ஆதரவு தெரிவிப்பர்கள் தவக்கலை பாதுகாத்தனர்.
செய்தி:பாலைவனதூது

எகிப்து:இஃவானுல் முஸ்லிமீன் புதிய அரசியல் கட்சியை துவக்குகிறது

கெய்ரோ.பிப்.16:ஜனநாயகம் புனரமைக்கப்பட்ட பிறகு எகிப்தில் புதிய அரசியல் கட்சியை துவக்கப் போவதாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்துள்ளது.

அரசியல் சட்டத்தை திருத்தவும், சுதந்திரமான தேர்தல் நடத்தவும் முபாரக்கிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவ சுப்ரீம் கவுன்சில் தயார் என அறிவித்ததைத் தொடர்ந்து முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் நீதிபதியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் சட்ட திருத்த குழுவில் முஸ்லிம் சகோதரதத்துவ இயக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அடுத்த அதிபர் தேர்தலில் அதிபர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என முஸ்லிம் சகோதரதத்துவ இயக்கத்தின் இணையதளம் தெரிவிக்கிறது.
செய்தி:பாலைவனதூது 

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட பார்ஸி மொழியில் ட்விட்டர் செய்திகளை பரப்பும் அமெரிக்கா

வாஷிங்டன்,பிப்.16:ஈரானில் அரசுக்கெதிரான போராட்டம் தலைநகர் டெஹ்ரானில் நடந்துவருகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளைப் போல் ஈரானிலும் ஒரு புரட்சி உருவாகாதா? என கனவு கண்டுவருகிறது.

ஏற்கனவே முன்னர் ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது அமெரிக்கா. ஆனால், அப்போராட்டம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், துனிசீயா, எகிப்து மற்றும் சில அரபுநாடுகளில் நடக்கும் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தைப் போல் ஈரானிலும் நடைபெற வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது.இந்நிலையில் ஈரான் தலைநகரில் நடந்த போராட்டத்தை மேலும் கிளர்ச்சியாக மாற்ற சமூக இணையதளமான ட்விட்டர் மூலம் ஈரானின் அதிகாரப்பூர்வ மொழியான பார்ஸியில் செய்திகளை போஸ்ட் செய்கிறது அமெரிக்கா.

"கெய்ரோவைப்போல் ஒருங்கிணையவும் போராடவும் ஈரான் மக்களை அனுமதியுங்கள்", ’ஈரான் சொந்த மண்ணில் போராட்டங்களை சட்ட விரோதமாக்குகிறது' போன்ற வாசகங்களை அமெரிக்காவின் ஸ்டேட் டிபார்ட்மெண்ட் ட்விட்டரில் அளித்துவரும் செய்தியாகும்.

அரபு மொழியிலான ட்விட்டர் செய்திகளையும் அமெரிக்கா தயாரித்து வருகிறது. ஈரானில் அரசுக்கெதிராக நடக்கும் சிறிய அளவிலான போராட்டத்தையும் ஆதரித்து அறிக்கை விட்டுள்ளார் ஹிலாரி கிளிண்டன். ஆனால், தங்களது கைப்பாவைகளின் ஆட்சி நடக்கும் பஹ்ரைன், யெமன், ஜோர்டான், அல்ஜீரியா போன்ற நாடுகளில் உண்மையிலேயே ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களைக் குறித்து மெளனம் சாதிக்கிறது அமெரிக்கா.

ஈரானில் ஜனநாயக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நியர்களாக்கப்படும் இந்திய குடிமக்கள் - அஸ்ஸாம் முஸ்லிம்களின் துயர வாழ்க்கை

புதுடெல்லி,பிப்.15:ரஸியா பேகம், அஸ்ஸாம் மாநிலம் பார்பெட்டாவைச் சார்ந்தவர். தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், துயரச் சம்பவங்களையும் விவரிக்கும்போது உடைந்துபோய் அழுகிறார். கடந்த 24 வருடங்களாக டெல்லி போலீசாரின் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறது இவரது குடும்பம். சில தினங்களுக்கு முன்னால் ரோஹினி பகுதியைச் சார்ந்த போலீசார் இவரது மகள் ராணியை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரிடம் ரூ.1750 ஐ பெற்றுக்கொண்டு விடுவித்துள்ளனர்.

ரஸியாவின் ஒரே மகனான அப்துற் ரஸ்ஸாக் கடந்த 2006-ஆம் ஆண்டு தற்கொலைச் செய்துக்கொண்டார். இதற்கு போலீசாரின் தொந்தரவும் இதர பிரச்சனைகளும்தான் காரணம். ஆனால், போலீசார் இவர் போதைப் பொருளுக்கு அடிமையானதால் ஏற்பட்ட மனச்சோர்வினால் தற்கொலைச் செய்துக் கொண்டதாக கூறியுள்ளனர்.

ரஸியா, போலீசாரால் நிர்மூலமான தனது வாழ்க்கையைக் குறித்து விளக்குகிறார்:

ரஸியா, பஹாடியில் பெங்காளி மொழி பேசும் அஸ்ஸாம் மக்கள் அதிகமாக வாழும் சேரிக் குடிசைகள் நிறைந்த தைமீர் நகரில் வசித்து வருகின்றார். இப்பகுதியில் வாழும் அஸ்ஸாம் முஸ்லிம்களில் பெரும்பாலோர் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ அல்லது சில நேரங்களில் மூன்று தடவை போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்டு கொடுமைக்கு ஆளானவர்களாவர். இவர்களில் பலர் பங்களாதேஷிற்கு அனுப்பப்பட்டனர். போலீசார் இங்கு வாழும் மக்களை பிடித்துச் செல்வது வழக்கான ஒன்றாகிவிட்டது.

போலீசார் வாரம் ஒருமுறை இங்குவந்து எங்களில் ஒருவரை பிடித்துச் செல்வர், காரணம் கேட்டால் "நீங்கள் பங்களாதேஷைச் சார்ந்தவர்கள்" எனக் கூறுவர். பிறகு எங்களை போலீஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதைக்கு ஆளாக்குவார்கள். மேலும் எங்களிடம் பணத்தை கேட்பார்கள். சிலர் போலீசாருக்கு அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பணத்தை கொடுப்பர். இல்லாவிட்டால் அவர்கள் பங்களாதேசுக்கு அனுப்பப்படுவர். இவ்வாறு கூறிய ரஸியா தான் இந்தியாவைச் சார்ந்தவர் என்பதை நிரூபிக்கும் வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை, வங்கிக் கணக்குப்புத்தகம் ஆகியவற்றை ஆதங்கத்தோடு காண்பித்தார்.

பணம் சம்பாதிக்கும் வியாபாரம்
டெல்லி போலீஸ் தைமூர் நகரை பணம் சம்பாதிக்கும் வியாபார ஸ்தலமாகவே காண்கிறது. டெல்லியின் அனைத்து போலீஸ் நிலையங்களிலிருந்து தைமூர் நகருக்கு போலீஸார் வருகின்றனர். பிடித்துச் செல்லும் நபர்களிடம் பணத்தை கறப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். பணம் இல்லையா? அவர்களது வாழ்க்கை அம்பேல்தான். உடனடியாக பங்களாதேசுக்கு அனுப்பப்படுவர்.

"சில நேரங்களில் ரோஹினி போலீஸ், சில நேரங்களில் ஜாமிஆ நகர் போலீஸ் இல்லாவிட்டால் ஆர்.கே.புரம் போலீஸ் என அனைவருமே தைமூர் நகருக்கு வந்து பங்களாதேஷ் முஸ்லிம்கள் எனக் குற்றஞ்சாட்டி இங்கு வாழும் நபர்களை இழுத்துச் செல்வது வழக்கமாகும்.

டெல்லியில் குண்டுவெடிப்பு ஏதேனும் நிகழ்ந்தாலே போதும், இங்கிருக்கும் நபர்களைத்தான் பிடித்துச் செல்வர்". இவ்வாறு கூறும் முஸ்தபா, போலீசாரால் இரண்டு தடவை பிடித்துச் செல்லப்பட்டவர். லஞ்சமாக பணத்தைப் பெற்றுக்கொண்டு அவரை விடுதலைச் செய்துள்ளனர்.

"எவருமே எங்களைப் பற்றி கவலைப்படுவது கிடையாது. நாங்கள் வாழ்ந்தால் அல்லது இறந்தால் அவர்களுக்கு என்ன?" விரக்தியுடன் பேசும் ரஸியா ஒரு சிறிய அறையில் வசிக்கிறார். இந்த அறைதான் அவருக்கு சமையலறையும், படுக்கையறையும் எல்லாமே.

ரஸியாவின் வாழ்க்கையைப் போலவே தைமூர் நகரின் சேரிப் பகுதிகளில் வாழும் அனைத்து முஸ்லிம்களின் வாழ்க்கையும் அமைந்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை தேவைகளை நிறைவுச் செய்ய டெல்லிக்கு வந்தார் ரஸியா. அன்று முதல் வாழ்வதற்கான போராட்டத்தை நடத்திவருகிறார்.

"பங்களாதேஷி" என என்னை அடையாளமிட்டு அழைப்பதிலிருந்து நான் தப்பிவிட முடியாது எனக் கூறுகிறார் ரஸியாவின் மகளான ராணி. இவரைத்தான் சில தினங்களுக்கு முன்னால் போலீசார் அழைத்துச் சென்று பின்னர் பணத்தைப் பெற்றுக்கொண்டு விடுவித்துள்ளனர். தான் இந்திய முஸ்லிம் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் காண்பிக்கிறார் ராணி.

பிரோஷா பேகம். இவர் ஹிந்தி மொழியை சிரமப்பட்டு பேசுகின்றார். ஆனாலும், அவர் வஞ்சகர்களால் தனக்கு ஏற்பட்ட வேதனைகளை பகிர்ந்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் டெல்லி போலீசாரால் பிரோஷா பேகம் பங்களாதேசில் கொண்டு விடப்பட்டார். "நான் பங்களாதேஷில் கொண்டு விடப்பட்ட பொழுது எங்கு செல்வது என தெரியாமல் விழித்தேன். சாலையோரம் நின்றுக் கொண்டு பலரிடம் பணத்தை கேட்டுவாங்கி மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன்" எனக் கூறும் பிரோஷா பேகம் தான் ஒரு உண்மையான இந்தியர் என ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார்.

போலீசார் தொந்தரவு இவர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது. இதனால் இவர்களின் வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது. இதுமட்டுமல்ல வேலையின்மை, வறுமை, குடிநீர் தட்டுப்பாடு, மின்சார தட்டுப்பாடு என வேறு சில பிரச்சனைகளையும் இவர்கள் சந்திக்கின்றார்கள்.

இப்பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதின் இமாம் ஷக்கீல் அஹ்மதுக்கு கூட இப்பிரச்சனைக்குரிய தீர்வைக் குறித்து நம்பிக்கை இல்லை. போலீஸ் நிர்வாகத்தில் அடிப்படையான மாற்றம் வராவிட்டால் இப்பிரச்சனை தொடரும் என அவர் நம்புகிறார். இப்பகுதியில் நடக்கும் பல நிகழ்வுகளும் அவருக்கு தெரியும். மஸ்ஜிதுக்கு தொடர்ந்து வருகின்ற நபர்கள் சில நேரங்களில் திடீரென
காணாமல் போனால் இமாமுக்கு புரிந்துவிடும் இவர்கள் பங்களாதேஷில் கொண்டுபோய் விடப்பட்டுள்ளனர் என.

இவர்கள் பங்களாதேஷிகள் அல்ல
அஸ்ஸாம் முஸ்லிம்கள் பங்களாதேஷைச் சார்ந்தவர்கள் எனக் கூறுவது தவறாகும். இந்திய பிரஜை என்பதை நிரூபிப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் இவர்களிடம் இருந்த போதும் ஏழைகளாக இருப்பதால் இவர்களின் குடியுரிமை சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறது. மேலும் எந்தத் தவறும் செய்யாமலேயே
தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

twocircles.net இணயதள இதழின் செய்தியாளரிடம் தைமூர் நகர் மக்கள் கூறுகையில், "உண்மையில் இங்கு பங்களாதேஷைச் சார்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியிருந்தால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் இன்ஃபார்மர்களாகத்தான் இருப்பார்கள். மேலும் உண்மையான இந்தியக் குடிமக்களான
அப்பாவி அஸ்ஸாம் மாநில முஸ்லிம்கள் மீது போலீசார் பொய்வழக்கில் சிக்கவைத்து சித்திரவதைச் செய்து காசை கறக்கும்போது அதில் பங்கினையும் பெற்றிருப்பர்.

இந்த அப்பாவி மக்களுக்கு தங்களுக்கு இழைக்கப்படும் தேவையற்ற தொந்தரவுகள் எப்பொழுது முடிவுக்கு வரும் என்பது குறித்து தெரியாமல் தங்களது அன்றாட வாழ்க்கையை துயரத்துடன் கழித்து வருகின்றனர்.

புதுப்பட்டிணத்தில் இந்து முன்னணியினர் கலவர வெறியாட்டம்

புதுப்பட்டினம் என்ற சிற்றூரில் ஜனவரி 28-ம் தேதியன்று இந்து முன்னனி சார்பில் அவ்வமைப்பின் கொடி ஒன்று பேருந்து நிலையம் அருகில் ஊன்றப்பட்டுள்ளது. பிப்.8 அன்று யாரோ விசக்கிருமிகள் அக்கொடியினை அறுத்து இருக்கின்றனர். இதை முஸ்லிம்கள் தான் செய்ததாக கூறி 8 முஸ்லிம்களின் பெயரை கூறி சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இந்து முன்னணியினர்.

பிப்.11 அன்று இப்பிரச்சனையை பற்றி பேசுவதற்காக முஸ்லிம்களின் தரப்பிலிருந்து ஜமாஅத் உறுப்பினர்கள் உட்பட சில நபர்கள் காவல் நிலையத்திற்கு வருகின்றனர், அதே சமயம் இந்துக்கள் சார்பில் கொஞ்சம் பேர் அங்கு வருகின்றனர். இன்ஸ்பெக்டர் இல்லாத காரணத்தால் சப்இன்ஸ்பெக்டர் ஹேமலதா அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப் பேச்சில் ஈடுபடுத்துகின்றார்கள் முஸ்லிம்கள் தங்களது பக்கம் நியாயம் இருப்பதாகவும் இந்தப் பிரச்சனைக்கு முஸ்லிகள் யாரும் காரணம் இல்லையென்றும், வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்திருக்கும் பாலா என்ற இந்துத்துவவாதி இந்த ஊருக்கு திரும்பி வந்த பின்பு தான் இது போன்ற செயல்கள் நடப்பதாக தங்கள் நிலையை கூறியவுடன் அத்தனை பேரும் ஏற்றுக் கொண்டு சமாதான நிலைக்கு வருகின்றனர்.

அந்த சமயம், நெடு நாட்களாக முஸ்லிம்கள் ஜும் ஆப் பள்ளிக்கு எதிரில் இருக்கும் கோயில்களில் தொழுகை நேரத்தில் ஒலித்து வரும் பாடல்களை நிறுத்தக்கோரி கேட்டும் அதை தொடர்ந்து செய்து வருவதாகவும் எங்களது இறை வழிப்பாட்டிற்கு இடையூறாக இருப்பது பற்றி தீர்த்து வைக்கக் கோரினர்.
அப்பொழுது வேலு என்பவர், நாங்கள் பாட்டை நிற்பாட்ட முடியாது, நீங்கள் வேண்டுமானால் தொழுகையை நிற்பாட்டுங்கள் என்று கூற ஆரம்பித்ததும் , முஸ்லிம்களது மனம் பாதிக்கப்படுகிறது வந்திருந்த முஸ்லிம்கள் அனைவரும் கண்டனம் எழுப்புகின்றனர். நிலவரம் சரியில்லாமல் போவதைக் கண்ட காவல்துறையினர் பிப்.13 அன்று சமாதானக் கூட்டம் நடத்துவதாக அறிவித்து விட்டு அன்றைய கூட்டத்தை கலைத்து விடுகின்றனர்.

முஸ்லிகள் அனைவரும் பிப்.13-ஐ எதிர்நோக்கி இருக்கும் பொழுது பாசிஸ்டுகளின் சதிவேலையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கிறது. பிப்.11 அன்று இரவே இந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது எனறு இந்து முன்னணி சார்பில் தடை விதிக்கப்படுகின்றது.

பிப்.12 பகல் 3.00 மணி வரை ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர், அஸர் தொழுகை ஆரம்பிக்கும் நேரத்திற்கு சற்று முன்னர், ஒரு சுமோ, ஒரு கார் மற்றும் 5 அல்லது 6 பைக்குகளில் தம்பிக்கோட்டை, மற்றும் பட்டுக்கோட்டையில் இருந்து இந்து முன்னணியினர் புதுப்பட்டினம் வந்து சேருகின்றனர்.

முஸ்லிம்கள் எப்போதும் போல் அஸர் தொழுகைக்கு மஸ்ஜிதிற்கு சென்றுவிட்டு வெளியில் வருகையில் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் மஸ்ஜிதிற்கு எதிரில் நின்று கொண்டு ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு பழிக்கின்றனர். மேலும் முஸ்லிம்களின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துகின்றனர். இதனை கண்ட சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் அனைவரும் இந்து முன்னணியினரை திருப்பித் தாக்குகின்றனர். இதில் முஸ்லிம்களின் தரப்பில் 5 பேரும் இந்து முன்னணி தரப்பில் 12 பேரும் காயம் அடைகின்றனர், இத்ரீஸ் அஹ்மது என்ற 11வது படிக்கும் மாணவரின் மண்டை எலும்பு உடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விசயம் அறிந்த காவல்துறை முஸ்லிம்களின் தரப்பில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 13 பேரை ரிமாண்ட் செய்துள்ளனர். இரண்டு பேரை தேடி வருகின்றனர். இந்து முன்னணி சார்பில் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 10 பேரை ரிமாண்ட் செய்து 9 பேரை தேடி வருகின்றனர், வெளியூரில் இருந்து வந்த அத்தனை இந்து முன்னணியினரும் ஓடிப்போய் விட்டனர் என்பது நமது நிரூபர் அளிக்கும் தகவல். தற்பொழுது புதுப்பட்டினம் எஸ்.பி.-யின் மேற்பார்வையில் இருக்கிறது.
செய்தி:கூத்தாநல்லூர் முஸ்லீம்ஸ்

Sunday, February 13, 2011

பல்லாயிரக்கணக்கான மக்கள் எகிப்து நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகக்கோரி அந்நாட்டு வீதிகளில் இறங்கி போராடினர்!

கெய்ரோ,பிப்.13:பல்லாயிரக்கணக்கான மக்கள் எகிப்து நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகக்கோரி அந்நாட்டு வீதிகளில் இறங்கி போராடினர். 300க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இன்னுயிரை அரபுலகின் மிகப்பெருமை வாய்ந்த நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான தியாகம் செய்துள்ளனர். இத்தியாகிகளைக் குறித்த தகவல்களை ஆன்இஸ்லாம்.நெட் இணையதளம் வெளியிட்டு வருகிறது.

இஸ்லாம் பக்கீர்
தனது நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக கனவு கண்டவர் இஸ்லாம்
பக்கீர். அவரது கனவு நிறைவேறவிருக்கும் வேளையில் தனது இன்னுயிரை இழந்தார் அவர்.

1989-ஆம் ஆண்டு பிறந்த பக்கீர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தைப் பெற்றார்.

ஜனவரி 25-ஆம் தேதி டோக்கி மாவட்டத்திலுள்ள தனது வீட்டிலிருந்து தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி ஆர்வத்துடன் சென்றார். ஆனால், பக்கீர் துவக்கத்தில் ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராட வேண்டும் என எண்ணவில்லை. ஆனால், அவரது வயதை ஒத்தவர்கள் தங்களது வாழ்க்கைப் பிரச்சனைக்காக போராடத் துவங்கிய பொழுது, அதனைக் கண்ணுற்ற பக்கீர் எகிப்திய சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க தயங்கவில்லை.

போராட்டத்தில் கலந்துகொண்டோர் மீது போலீசார் ரப்பர் குண்டால் சுட்டனர். ரப்பர்குண்டு பக்கீரின் காலைத் தாக்கியது. ஆனால், காயம் அவரை தனது நாட்டின் சிறந்ததொரு எதிர்காலத்திற்கான போராட்டத்தில் கலந்துகொள்வதை தடுக்கவில்லை.

ஜனவரி 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. தனது பெயர் எகிப்தின் வரலாற்றில் எழுதப்படும் என்பதை உணராமலேயே பக்கீர் தனது வீட்டிலிருந்து பிரம்மாண்ட போராட்டத்தில் கலந்துகொள்ள தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி சென்றார்.

மிகுந்த உற்சாகத்துடன் முழக்கமிட்டவரை நோக்கி கொலைக்கார தோட்டா பாய்ந்துவந்து அவரது முதுகில் தாக்கியது. மரணமடைந்தார் இஸ்லாம் பக்கீர்(இன்னாலில்லாஹி...).

வளமான நாட்டின் எதிர்காலத்திற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்தவர்களின் பட்டியலில் பக்கீர் இஸ்லாமின் பெயரும்
இடம்பிடித்தது.

ஆன்இஸ்லாம்.நெட்

இஃவான்கள் இலக்கை அடைவார்களா?

எகிப்தில் இஃவானுல் முஸ்லிமீன் என்ற லட்சிய இயக்கத்தை தோற்றுவித்த இமாம் ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…) அவர்கள் , 12 பிப்ரவரி 1949, சனிக்கிழமை இரவு 8.00, அன்று ஷஹீதாக்கப்பட்டு நேற்றுடன் 63-வது வருடம் நிறைவுறுகிறது.

எகிப்தில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் புரட்சியில் இஃவான்களின் பங்கு முக்கியத்துவமானதாகும். இந்நிலையில் இஃவான்களைக் குறித்து மீள்பார்வை இதழில் வெளியான கட்டுரையை பாலைவனத் தூதில் வெளியிடுகிறோம்.

நபியவர்கள் கூறினார்கள்; "அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்"(அபூதாவூத்)

புனர் நிர்மாணம் என்றால் என்ன? என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள் விளக்கம் தருகின்றபோது, மார்க்கத்தில் புதிதாக நுழைந்த நூதனங்கள் அகற்றப்படுதல், மார்ர்க்கத்தில் மறக்கப்பட்ட அல்லது இல்லாது செய்யப்பட்டவற்றை மீண்டும் கொண்டுவருதல் போன்ற விளக்கங்களை அளித்துள்ளனர்.(பத்ஹுல் பாரி). அது போன்றே நவீன கால அறிஞர்கள் இதர்கு விளக்கம் அளிக்கின்றபோது, மார்க்கத்தை குறித்து காலத்தின் பண்புகளுக்கு ஏற்ப விளங்கி நடைமுறைப்படுத்தல் என்றனர்.

இந்த இரண்டு விளக்கங்களும் ஒன்றையொன்று முழுமைப்படுத்துவதாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் புனர்நிர்மாணம் என்பது இஸ்லாம் பற்றிய புரிதல் அதன் மூலமாக அல்குர் ஆன் சுன்னாவிற்கு மீளல். அதாவது எந்தக் கலப்புமின்றி குர் ஆன் சுன்னாவிலிருந்து தூயவடிவில் இஸ்லாத்தை விளங்கி அதனை நாம் வாழ்கின்ற காலத்தின் பாஷையில், வடிவத்தில், இயல்பில் நடைமுறைப்படுத்தல் எனப் பொருள்படும்.

அந்த வகையில் புனர்நிர்மாணம் என்பது நபியவர்களது தாஃவா இந்த உலகில் எதை சாதிக்க நினைத்ததுவோ அல்லது சாதித்ததுவோ அதனை மீண்டும் இந்த உலகில் சாதித்துக்காட்டுவதுதான் புனர்நிர்மாணமாகும்.

நபியவர்களது தாஃவா, இஸ்லாத்திற்கான முதல் நிர்மாணம் அதனை புனர்நிர்மாணம் செய்வதென்பது அதே பணியை மீண்டும் மேற்க்கொண்டு அதே இலக்கை அடைதல் என்பதாகும். நபியவர்களது தாஃவாவின் இலக்கு என்ன? முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுதல், அவர்களுக்கு தலைமையை வழங்குதல், இந்த முழு உலகமும் இஸ்லாத்தின் வழிக்காட்டுதலில் இயங்கவேண்டும் என்பதே. இதுதான் நபியவர்களது பணி.

இதைத்தான் அல்குர் ஆன் இவ்வாறுக் குறிப்பிடுகிறது
"இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்;. பாதுகாவலர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன், மிகச் சிறந்த உதவியாளன்."( அல்குர் ஆன்22:78)

நபியவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தலைமை. முஸ்லிம்கள் மனித சமூகத்தின் தலைமை. அதற்காகத்தான் அல்லாஹ் முஸ்லிம்களைத் தேர்வுச் செய்தான் என்கிறது இந்த அல்குர் ஆன் வசனம்.

உலகிற்கு வழிகாட்டி தலைமையை வழங்கும் இந்தப் பணிக்காகத்தான் கிலாபத் அவசியப்பட்டது. தலைமையை வழங்கும் அதிகார மிக்க இடம்தான் கிலாபத். நபியவர்களின் முதல் நிர்மாணம் இந்த இலக்கை அடைந்தது. பின்னர் நீண்ட காலம் உலகிற்கு வழிக்காட்டித் தலைமையை வழங்கியது. ஆனால் 1924ம் ஆண்டுடன் அது சரிந்து வீழ்ந்தது.

இப்பொழுது புனர்நிர்மாணம் ஒன்று அவசியப்படுகிறது. அதன் இலக்கு என்ன? நபியவர்களது அதே இலக்குதான் அதனுடைய இலக்காகவும் இருக்கும். அதிகாரத்துடன் தலைமையை வழங்க இங்கும் ஒரு கிலாபத் அவசியப்படுகிறது.

1928ம் ஆண்டு மார்ச் மாதம், நபியவர்களது அதே இலக்குடன் அதே வழிமுறையுடன்; காலத்திற்குரிய இயல்புடனும் பாஷையுடனும் ஒரு புனர்நிர்மாணப் பணி ஆரம்பிக்கின்றது. நபியவர்கள் தனது முதல் பணியை ஆரம்பித்தபோது, எவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் அதுவும் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் ஆரம்பித்தார்களோ அதேபோன்று, சில மனிதர்களுடன் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் அந்தப்புனர் நிர்மாணப்பணி ஆரம்பிக்கின்றது. அதுதான் இன்று பரந்து விரிந்து உலகின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கமாகும்.

இந்த இயக்கம் ஸூஹைபுர்ரூமி போன்ற பிலால் போன்ற சமூக அந்தஸ்தற்ற ஆறு நபர்களுடன்தான் ஆரம்பித்திருக்கிறது. இமாம் ஹஸனுல் பன்னாவின் உரைகளினால் கவரப்பெற்ற இவர்கள் இமாமவர்களின் வீட்டுக்கு வந்து நீங்கள் குறிப்பிடுவதுப் போன்று பலப் பிரச்சனைகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் தீர என்ன வழி? நாங்கள் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் என்னச் செய்வது என்பதுதான் தெரியாமல் இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு வழிக்காட்டுகிறீர்களா?என்றுக் கேட்டார்கள். அவர்களது உணர்வுகளால் கவரப்பட்ட இமாமவர்கள் அவர்களுக்கு வழிக்காட்டும் பணியை ஆரம்பித்தார்கள். அன்றே அவர்கள் தமக்கு வைத்துக்கொண்ட பெயர்தான் அல் இஃவானுல் முஸ்லிமூன் என்பது.

இந்த நிகழ்வு 1928ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வுகள் நடந்து முடிந்து 79 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று சுமார் 90 நாடுகளில் இந்த தாஃவக் காணப்படுகிறது. இன்னும் 21 வருடங்களில் 2028 ஆகின்றபோது இந்த புனர்நிர்மாணப் பணி அதன் உச்சத்தை அடைந்திருக்க வேண்டும். அதாவது முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுகின்ற, அதற்குத் தலைமையை வழங்குகின்ற இடத்திற்கு இஸ்லாம் வந்து சேர்ந்திருக்கும்.

இன்னும் 21 வருடங்களில் இது சாத்தியப்படுமா? இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சாத்தியப்படப் போகிறது. அல்லாஹ்த்தாஅலா அல்குர் ஆனில் கூறுவதைக் கேளுங்கள்: "அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்."( அல்குர் ஆன்2:261)

இஸ்லாமிய தாஃவா என்பது, அதனது ஒரு முயற்சி எழு நூறு மடங்கு பரகத் பொருந்தியது. எழு நூறு மடங்கு விளைவைத் தரக்கூடியது. இதுதான் மேற்கூறிய வசனத்தின் பொருள். சுமார் 90 நாடுகளில் பரவியுள்ள இந்த தஃவாவின் மொத்த அங்கத்தவர்களை எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தால் எத்தனை பேர் இருப்பார்கள்? அவர்கள் ஒவ்வொருவரும் இந்த தாவாவுக்காக செலவுச் செய்யும் நாணயங்களை எழு நூறு மடங்கால் அதிகரித்துப் பார்த்தால் எவ்வளவு தொகை காணப்படப்போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை.

எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை. எனவே இன்னும் இருபத்தியொரு வருடங்களில் 2028ம் ஆண்டில் உலகிற்கு வழிகாட்டும் சக்தியாக,தலைமையை வழங்கும் சக்தியாக இஸ்லாம் தான் இருக்கப்போகிறது. அதற்கான பணி பலமாகவும் வேகமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அன்றைய நாள் அந்த அதிசயத்தை கண்களால் காணும் பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்கும் தரவேண்டும் என பிரார்த்திப்போம்.

நினைவலைகளி​ல் ஷாஹித் ஆஸ்மி


ஷாஹித் ஆஸ்மி - மனித நேயமிக்க துணிச்சலான வழக்கறிஞர். அதிகாரவர்க்கத்தின் அடக்கு முறையினால் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்கள் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகயிருந்தாலும் அவர்களுக்காக வாதாடியவர்.

தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்ட எத்தனையோ முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை துணிவுடன் எடுத்து நடத்தி விடுதலையைப் பெற்றுத் தந்தவர். நீதிக்காக போராடிய அந்த இளைஞரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி அக்கிரமக்காரர்களின் கைக்கூலிகள் துப்பாக்கித் தோட்டாக்களால் துளைத்தனர்.

நீதிக்கான போராட்டத்தில் அந்த லட்சிய வீரர் தனது இன்னுயிரை இழந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. இவ்வேளையில் அவரைக் குறித்த சில நினைவலைகளை அவருடன் தொடர்புடையவர்களிடமிருந்து பகிர்ந்து கொள்வோம்.

ஷாஹித் ஆஸ்மியின் தாயார் ரிஹானா ஆஸ்மி - இவருடைய கணவர்(ஷாஹிதின் தந்தை) இறந்து பல வருடங்களாகிவிட்டன. ரிஹானா மார்க்கப்பற்றுள்ள பெண்மணி. தனது பேச்சினூடே திருக்குர்ஆன் வசனங்களையும், நபிகளாரின் பொன்மொழிகளையும் மேற்கோள்காட்டுவார்.

தனது மகனைக் குறித்து ரிஹானா கூறுகிறார். "நான் எனது மகனை நினைத்து பெருமைப்படுகிறேன். அவனைக் கொன்றவர்கள் கட்டாயம். தூக்கிலேற்றப்பட வேண்டும். இதன் மூலம் எனது மகனுக்கு நீதிக் கிடைக்கவேண்டும்." எனக்கூறிய அவரிடம், உங்கள் மகனை கொலைச் செய்தவர்கள் யார்? எனக் கேட்டபோது, அவர் கூறினார், "ஹேமந்த் கர்காரேயை யார் கொன்றார்களோ? அவர்கள்தான்!" என பதிலளித்தார்.

'உங்கள் மகன் ஷாஹித் ஆஸ்மி கொலைச் செய்யப்பட்டுள்ள சூழலில், அதே வழக்கறிஞர் தொழிலுக்கு ஏன் உங்களது இளைய மகனையும் பணிபுரிய அனுமதித்தீர்கள்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ரிஹானா, "நான் எனது இறைவனை சந்திப்பதைக் குறித்து பயப்படுகிறேன். உனது மூத்தமகன் கொலைச் செய்யப்பட்டதால் பயந்துபோய் உனது இளைய மகனை பாதிக்கப்பட்ட, ஏழை மக்களுக்காக உழைக்கும் பணியை ஏற்கச் செய்வதிலிருந்து தடுத்தாயா? எனக்கேட்டால் நான் என்னச் செய்வேன்?" என வினா எழுப்பிய ரிஹானா, "அல்லாஹ் எனது இளைய மகனை காப்பாற்றுவான்" என உறுதியுடன் தெரிவித்தார்.


மும்பை புறநகர் பகுதியான குர்லாவில் கிராந்தி நகர் சேரிப் பகுதியில் வசிப்பவர் தன்னா. இவர் ஒரு விதவையாவார். ஷாஹித் ஆஸ்மியைக் குறித்து நினைவுக்கூறும் பொழுது அவர் முகத்தில் தெரிந்த வருத்தத்தை நம்மால் உணரமுடிகிறது. அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. அவர் கூறுகிறார்: "எனது மகன் ஹேமந்த். அவனுக்கும் இன்னொரு நபருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த நபர் தற்செயலாக இறந்துவிட்டார். போலீசார் எனது மகன் மீது 302-பிரிவின் படி கொலைக் குற்றத்தை சுமத்தினர். நான் ஒரு விதவை. நான் எனது மகனை வழக்கிலிருந்து விடுவிக்க பல வழக்கறிஞர்களையும் அணுகினேன். வழக்கிற்காக என்னிடமிருந்த அனைத்தையும் விற்றதுதான் மிச்சம். எல்லா வழக்கறிஞர்களுமே 'உங்கள் மகனை எங்களால் காப்பாற்ற இயலாது' என கைவிரித்து விட்டனர். இந்நிலையில் ஷாஹித் ஆஸ்மியைக் குறித்து கேள்விப்பட்டு அவரை வெறுங்கையுடன் சென்று சந்தித்தேன்.

ஷாஹித் என்னிடம் இந்த வழக்கில் காசு வாங்காமலேயே வாதாடுகிறேன் எனத் தெரிவித்ததோடு 2006 ஆம் ஆண்டு எனது மகனுக்கு இவ்வழக்கிலிருந்து விடுதலையையும் பெற்றுத் தந்தார். எனது மகன் ஹேமந்தைப் போல் ஷாஹிதும் எனக்கு மகன்தான்.

70 அடி பரப்பளவைக் கொண்ட எங்கள் வீட்டில் ஷாஹித் வந்தால் தரையில் உட்காருவார். மாதந்தோறும் எங்களுக்கு நிதியுதவி அளித்து வந்தார். அவர் கொல்லப்படுவதற்கு முன்பாகக் கூட எங்களுக்கு நிதியுதவி அளித்தார். அவர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். ஏன் எனது மகனைப் போல் நான் கருதிய நேர்மையான மனிதரை கொலைச் செய்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. நாங்கள் மீண்டும் அனாதையாக உணர்ந்தோம். ஆனால், அவருடைய சகோதரர் காலித் ஆஸ்மி தனது சகோதரரைப்போல் எங்களுக்கு உதவிச் செய்வதாக வாக்களித்தார். இப்பொழுது காலிதும் எங்களது மகன்தான். அவரை இறைவன்
காப்பாற்றுவான்." என தெரிவித்தார்.

ஷாஹித் ஆஸ்மி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்ட பொழுது இரண்டு கேள்விகள் மிஞ்சின. ஒன்று. யார் ஷாஹித் ஆஸ்மியின் கொலைக்கு பின்னணியிலிருந்து செயல்பட்டவர்கள்?

இரண்டாவது ஷாஹித் ஆஸ்மியின் பணியை யார் எடுத்து நடத்துவார்?

முதல் கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ஆனால், இரண்டாவது கேள்விக்கு விடை அவருடைய இளைய சகோதரர் வழக்கறிஞர் காலித் ஆஸ்மியைத் தவிர வேறு எவரும் விடை தரவில்லை.

ஷாஹித் ஆஸ்மி இறந்து ஒருவாரத்திற்குள் அவரது சகோதரர் காலித் ஆஸ்மி, "நான் எனது சகோதரனின் குறிக்கோளை ஏற்று செயல்படுவேன்" என அறிவித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி காலித் ஆஸ்மி தொலைபேசி வாயிலாக அளித்தப் பேட்டியில்; "நான் எனது சகோதரனின் குறிக்கோளை ஏற்றுக்கொண்டு செயல்படுவேன். அவரது பணிகளை சவாலாக ஏற்றுக்கொண்டு உரிய பங்களிப்பை செலுத்துவேன். நான் எனது உயிரைக் குறித்து அஞ்சவில்லை. குறிக்கோள்தான் முக்கியமானது. நான் இதற்காக விலைக் கொடுக்க தயாராகிவிட்டேன். இதனைத் தவிர எனது வாழ்க்கையில்
வேறொன்றுமில்லை" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு சிக்கலான வழக்குகளில் அப்பாவிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுகளுக்கெதிராக வாதாடிக் கொண்டிருக்கிறார் அவர்.
 

Saturday, February 12, 2011

யாஸின் மாலிக் மீது செருப்பை வீசிய பா.ஜ.க குண்டர்கள்

அஜ்மீர் தர்காவிற்கு வருகைத்தந்த ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாஸின் மாலிக் மீது பா.ஜ.கவைச் சார்ந்த குண்டர்கள் செருப்பை வீசியுள்ளனர்.

கஞ்ச் பகுதியில் ஹோட்டலின் மூன்றாவது மாடியில் நின்றுக் கொண்டிருந்த யாஸின் மாலிக்கை நோக்கி வீசப்பட்ட செருப்பு அவர் மீது படவில்லை. மாலிக்கின் வருகையையொட்டி பா.ஜ.கவினர் ஏற்பாடுச் செய்த போராட்டத்திற்கிடையேதான் இந்த செருப்பு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பா.ஜ.க எம்.எல்.ஏ வாசுதேவ் தேவ்னானியின் தலைமையிலான கும்பல் ஹோட்டலின் முன்னால் யாஸின் மாலிக்கின் உருவப் பொம்மையை தீவைத்துக் கொளுத்தினர். மாலிக் உடனடியாக அஜ்மீரிலிருந்து வெளியேற வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கஷ்மீர் லால்சவுக்கில் பா.ஜ.கவினரை கொடியேற்ற அனுமதிக்காத சூழலில் யாஸின் மாலிக் போன்றவர்களை நாட்டில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது என இந்திய தேசத்தை குத்தகைக்கு எடுத்துள்ளதைப் போல் பா.ஜ.கவின் தேவ்னானி தெரிவிக்கிறார்.

இஸ்ரேலும், அமெரிக்காவும் இல்லாத மேற்காசியா - அஹ்மத் நிஜாத்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இல்லாத மேற்காசியா எதிர்காலத்தில் உருவாகும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் அறிவித்துள்ளார்.

'எத்தனதை தந்திரங்களை கையாண்டாலும் மக்கள் புரட்சியின் மூலமாக அமெரிக்காவும், சியானிஷ நாடும் இல்லாத ஒரு மேற்காசியாவை உருவாக்கலாம் என்பதை உங்களால் உறுதிப்படுத்த முடியும்' - ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 32-வது நினைவு தினத்தையொட்டி டெஹ்ரானின் ஆசாத்(சுதந்திர) சதுக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் அஹ்மத் நஜாத் தெரிவித்தார்.

'இப்பிராந்தியத்தில் எகிப்து மற்றும் துனீசியாவின் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிடக் கூடாது. ஆஃப்கானில் இவர்கள் என்னச் செய்தார்கள்? இப்பிராந்தியத்தில் ஏன் இவர்கள் ராணுவ தளங்களை அமைக்கின்றார்கள்?' -நஜாத் கேட்கிறார்.

இரண்டு நாடுகள் என்று கூறும் பொழுதே இஸ்ரேலின் மேலாதிக்கத்திற்காக அமெரிக்கா செயல்படுவதாக நஜாத் குற்றஞ்சாட்டினார்.

எகிப்திய புரட்சியை வாழ்த்திய நஜாத், எச்சரிக்கையோடு இருக்குமாறு அந்நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார். சுதந்திரத்தை பெறுவது உங்களுடைய உரிமையாகும். உங்களை ஆட்சிபுரிபவர் யார்? என்பதை தீர்மானிக்க வேண்டியதும் நீங்களே!

சுதந்திர நாட்டைக் குறித்தும், உலக நாடுகளைக் குறித்தும் கருத்துத் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஊழல் அரசாங்கத்தை எதிர்த்து அஞ்சாமல் உறுதியுடன் நில்லுங்கள்.வெற்றி உங்களின் அருகில் உள்ளது' என நஜாத் எழுச்சிப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட எகிப்திய மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
 

Dua For Gaza