Friday, January 21, 2011

முல்லா உமருக்கு சிகிட்சை: தாலிபான், ஐ.எஸ்.ஐ மறுப்பு

காந்தஹார்,ஜன.21:தாலிபான் போராளிகளின் தலைவராக கருதப்படும் முல்லா உமர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் உதவியுடன் பாகிஸ்தானில் ஒரு மருத்துவமனையில் இதய அறுவை சிகிட்சைச் செய்துக்கொண்டார் என வெளியான செய்திக்கு தாலிபானும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயும் மறுப்புத் தெரிவித்துள்ளன.

முல்லா உமர் இதய நோயால் அவதிப்பட்டதாகவும், அவருக்கு கராச்சியில் ஒரு மருத்துவமனையில் வைத்து இதய அறுவை சிகிட்சை நடந்ததாகவும், ஒரு தனியார் புலனாய்வு ஏஜன்சியை மேற்கோள் காட்டி நேற்று முன்தினம் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து முல்லா உமர் காணாமல் போனார். இந்த ஆண்டு ஜனவரி ஏழாம் தேதி இதயக்கோளாறு காரணமாக அவர் வெளியே வந்தார் என அப்பத்திரிகை கூறுகிறது.

ஆனால், தாலிபானின் சுப்ரீம் தலைவர் முல்லா உமர் ஆரோக்கியமாக உள்ளார் எனவும், தற்பொழுதும் அந்நிய ஆக்கிரமிப்பு படையினருக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என தாலிபானின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ஸபீஹுல்லாஹ் முஜாஹித் எ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் ஒரு டாக்டரை மேற்கோள்காட்டி முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியால் நடத்தப்படும் தி எக்ளிப்ஸ் க்ரூப் என்ற தனியார் புலனாய்வு நெட்வர்க் முல்லா உமரைக் குறித்த செய்தியை வெளியிட்டது.

இஸ்லாமாஃபோபியாவிற்கு பிரிட்டனில் ஆதரவு அதிகரிக்கிறது - பரோணஸ் ஸயீத் வார்ஸி

லண்டன்,ஜன.21:முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் வழக்கமாகிவிட்டது எனவும், இதற்கு சமூக ரீதியாக ஆதரவு கிடைப்பதாகவும் டோரி கட்சியின் துணைத் தலைவரும் பிரிட்டன் அமைச்சரவையில் முதல் மூத்த முஸ்லிம் பெண் அமைச்சருமான பரோணஸ் ஸயீத் வார்ஸி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களை தீவிரவாதிகள்,மிதவாதிகள் என தரம் பிரிக்கும் நடவடிக்கைக்கு எதிராக ஸயீத் வார்ஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்லாத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு ஊடகங்கள் நடத்தும் விவாதங்களை எதிர்க்கொண்டு ஸயீத் வார்ஸி லீஸெஸ்டர் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்த உள்ளார்.

அவரது உரையின் முக்கிய பகுதிகளை டெய்லி டெலிகிராஃப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
செய்தி:பாலைவனதூது 

திருக்குர்ஆன் பிரதிகளை எரிக்க அழைப்புவிடுத்த டெர்ரி ஜோன்ஸிற்கு பிரிட்டனில் தடை

லண்டன்,ஜன.21:திருக்குர்ஆனின் பிரதிகளை எரிக்க அழைப்புவிடுத்த அமெரிக்காவில் கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸிற்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

பொதுநலத்தை கவனத்தில் கொண்டு பிரிட்டனில் நுழைய டெர்ரி ஜோன்ஸிற்கு தடை விதித்துள்ளதாக பிரிட்டனின் உள்துறை அமைச்சக அலுவலகம் அறிவித்துள்ளது.

மில்டன் கெய்ன்ஸில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று ஏற்பாடுச் செய்துள்ள நிகழ்ச்சியில் உரை நிகழ்த்த டெர்ரி ஜோன்ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பிரிட்டன் அரசு எல்லாவகை தீவிரவாதங்களையும் எதிர்ப்பதால் டெர்ரி ஜோன்ஸிற்கு தடை விதித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரிட்டனின் தீர்மானத்திற்கெதிராக நீதிமன்றத்தை அணுகப் போவதாக ஜோன்ஸ் அறிவித்துள்ளார்.
செய்தி:பாலைவனதூது

ஜெருசலத்தை யூதர்களிடம் அடகு வைக்கமாட்டோம் - யு.ஏ.இ

அபுதாபி,ஜன.21:ஜெருசலத்தை யூதர்களிடம் அடகுவைக்க ஒருபோதும் முஸ்லிம்களால் இயலாது என யு.ஏ.இயின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸய்யத் அல் நஹ்யான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளுக்கான கூட்டமைப்பான ஒ.ஐ.சியின் இண்டர் பார்லிமெண்ட் யூனியனில் ஷேக் கலீஃபாவின் உரையை யு.ஏ.இ சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ராஸல்கைமா ஆட்சியாளருமான ஷேக் ஸவூத் பின் ஸகர் அல்காஸிமி வாசித்தார்.

ஜெருசலத்திற்கு தூதரகத்தை மாற்றுவது இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும். இத்தகைய முயற்சிகளை நடத்தும் நாடுகள் மீது யு.ஏ.இ நிர்பந்தம் அளிக்கும்.

1967-ஆம் ஆண்டு நடந்த போரில் இஸ்ரேல் அபகரித்த கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பிரதேசங்கள் ஃபலஸ்தீனுக்கு சொந்தமானது என்ற ஓ.ஐ.சியைப் போலவே யு.ஏ.இயும் அங்கீகரித்துள்ளது.

சர்வதேச சட்டத்தின்படி இது முஸ்லிம்களுக்கு சொந்தமானது. இந்த சட்டத்தை காற்றில் பறத்திவிட்டு இஸ்ரேல் ஜெருசலத்தில் யூதர்களை குடியமர்த்தி வருகிறது. ஐக்கியநாடுகள் சபை ஃபலஸ்தீனை சுதந்திரநாடாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஃபலஸ்தீனில் குறிப்பாக காஸ்ஸா முனையில் இஸ்ரேல் நடத்தும் அட்டூழியத்தை ஒ.ஐ.சி பார்லிமெண்ட் கண்டித்தது. காஸ்ஸாவில் ஏராளமான நிரபராதிகளை கொன்றுகுவித்த இஸ்ரேல் அதிகாரிகளை போர் குற்றவாளிகளாக அறிவித்து விசாரணைச் செய்யவேண்டும்.

இஸ்லாத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கும் (இஸ்லாமோ ஃபோபியா) மேற்கத்திய நாடுகளுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள ஒ.ஐ.சியிடம் யு.ஏ.இ கோரிக்கை விடுத்தது. ஒ.ஐ.சியின் இண்டர் பார்லிமெண்ட் கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கியது.
செய்தி:பாலைவனதூது 

சேவை மேம்படுத்தப்படும் - வயலார் ரவி Post under இந்தியா நேரம் 14:07 இடுகையிட்டது பாலைவனத் தூது புதுடெல்லி,ஜன.21:ஏர்இந்தியாவின் வளைகுடா நாடுகளுக்கான சேவை மேம்படுத்தப்படும் என புதிதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்ற வயலார் ரவி தெரிவித்துள்ளார். ஏர்இந்தியாவைக் குறித்த வளைகுடாவாழ் இந்தியர்களின் புகார்களுக்கு பரிகாரம் காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். தொலைவு அடிப்படையில் ஏர் இந்தியாவின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற வளைகுடா வாழ் தென்னக இந்தியர்களின் கோரிக்கையை ஆராய்ந்த பிறகு முடிவெடுக்கப்படும். நேற்று மதியம் ஒரு மணிக்கு விமானப் போக்குவரத்துறை அமைச்சகத்திற்கான பொறுப்பை வயலார் ரவி ஏற்றுக்கொண்டார். நண்பரான பிரபுல் பட்டேலிடமிருந்து இப்பதவியை ஏற்றுக்கொள்வதில் சந்தோஷமடைவதாக வயலார் ரவி தெரிவித்தார். இனி வரும் ஆண்டுகள் மறக்கமுடியாத அனுபவங்களை விமானப் போக்குவரத்துறையில் அளிக்கவேண்டுமென பிரபுல் பட்டேல் வயலார் ரவியிடம் கேட்டுக்கொண்டார். ஏர் இந்தியா விமான நிறுவனம் லாபகரமாக செயல்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்த வயலார் ரவி இதற்காக தொழிலாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையிலான பணிகளை புரிவோம் என தெரிவித்தார்.

புதுடெல்லி,ஜன.21:ஏர்இந்தியாவின் வளைகுடா நாடுகளுக்கான சேவை மேம்படுத்தப்படும் என புதிதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்ற வயலார் ரவி தெரிவித்துள்ளார்.

ஏர்இந்தியாவைக் குறித்த வளைகுடாவாழ் இந்தியர்களின் புகார்களுக்கு பரிகாரம் காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.

தொலைவு அடிப்படையில் ஏர் இந்தியாவின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற வளைகுடா வாழ் தென்னக இந்தியர்களின் கோரிக்கையை ஆராய்ந்த பிறகு முடிவெடுக்கப்படும்.

நேற்று மதியம் ஒரு மணிக்கு விமானப் போக்குவரத்துறை அமைச்சகத்திற்கான பொறுப்பை வயலார் ரவி ஏற்றுக்கொண்டார். நண்பரான பிரபுல் பட்டேலிடமிருந்து இப்பதவியை ஏற்றுக்கொள்வதில் சந்தோஷமடைவதாக வயலார் ரவி தெரிவித்தார்.

இனி வரும் ஆண்டுகள் மறக்கமுடியாத அனுபவங்களை விமானப் போக்குவரத்துறையில் அளிக்கவேண்டுமென பிரபுல் பட்டேல் வயலார் ரவியிடம் கேட்டுக்கொண்டார். ஏர் இந்தியா விமான நிறுவனம் லாபகரமாக செயல்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்த வயலார் ரவி இதற்காக தொழிலாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையிலான பணிகளை புரிவோம் என தெரிவித்தார்.
செய்தி:பாலைவனதூது 

முதல் மாராடு படுகொலை: ஹிந்து ஐக்கியவேதி தலைவர் உள்பட மூன்று பேர் குற்றவாளிகள்

கோழிக்கோடு,ஜன.21:முதல் மாராடு படுகொலை சம்பவத்தில் குஞ்சுக்கோயா(வயது 32) என்பவரைக் கொலைச்செய்த வழக்கில் ஹிந்து ஐக்கியவேதி மாநில பொதுச் செயலாளரும் மாராடு ஆரியசமாஜம் முன்னாள் செயலாளருமான சுரேஷ் உள்பட 3 பேர் குற்றவாளிகள் என மாராடு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்று குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்படும்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரவு எட்டு மணியளவில் மாராடு கடற்கரைப் பகுதியில் இரு பிரிவினர்களுக்கிடையே நடைப்பெற்ற மோதலில் ஐந்துபேர் கொல்லப்பட்டிருந்தனர்.

கேரள மாநிலத்தையே அதிர்ச்சியில் உறையவைத்த இச்சம்பவத்தில் முதலில் கொல்லப்பட்டது முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த குஞ்சுக்கோயா என்பவராவார்.

மாராடு ஜும்ஆ முன்பக்கத்தில் வைத்து ஆயுதங்களுடன் வந்த ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ஹிந்து ஐக்கியவேதியின் பொதுச்செயலாளர் சுரேஷ் உள்பட பலர் சேர்ந்து குஞ்சுக்கோயாவை கொடூரமாக கொலைச் செய்தனர். இதனை நேரில் கண்ட சாட்சி அளித்த வாக்குமூலத்தை மிக முக்கிய ஆதாரமாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இவ்வழக்கில் இதர குற்றவாளிகள் பிபிஷ்(வயது 37), விஜேஷ்(வயது 31) ஆகியோராவர்.

முதல் மாராடு சம்பவத்தில் ஐந்துபேர் கொல்லப்பட்டிருந்தனர். இதற்கு பதிலடியாக நடந்த இரண்டாவது மாராடு சம்பவத்தில் 9பேர் கொல்லப்பட்டிருந்தனர். சுரேஷ் தற்பொழுது ஜாமீனில் உள்ளார். இவ்வழக்கில் முதல் குற்றவாளியான பிபிஷ் என்பவர் முதல் மாராடு சம்பவத்திற்கு பிறகு அபூபக்கர் என்பவரைக் கொலைச்செய்த வழக்கில் தண்டனையை சிறையில் அனுபவித்து வருகிறார்.
செய்தி:பாலைவனதூது 

மகரஜோதி செயற்கையானதா? - கேரள உயர்நீதிமன்றம் எழுப்பிய சந்தேகம்

கொச்சி,ஜன.21:சபரிமலையில் ஆண்டுதோறும் தென்படுவதாக கூறப்படும் மகரஜோதி மனிதர்களால் ஏற்பாடுச் செய்யப்பட்டதா? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ள கேரள மாநில உயர்நீதிமன்றம் இதுத் தொடர்பாக விளக்கமளிக்கும்படி தேவஸம்போர்டிடம் (ஹிந்து அறநிலையத்துறை) உத்தரவிட்டுள்ளது.

சபரி மலை அருகே புல்லுமேடு வனப்பகுதியில் பக்தர்கள் சென்றுக்கொண்டிருக்கும் வேளையில் ஏற்பட்ட நெரிசலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர்.

இதுத்தொடர்பான வழக்கை தாமகவே முன்வந்து பதிவுச்செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கேரளமாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.ராதாகிருஷ்ணன், பி.எஸ்.கோபிநாத் ஆகியோர் அடங்கிய தேவஸம் பெஞ்ச் மகரஜோதி தொடர்பாக தமது சந்தேகத்தை எழுப்பியது.

மகரவிளக்கிற்கும், மகரஜோதிக்குமிடையேயான வித்தியாசம் என்ன? என்பதை விளக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அது நம்பிக்கை தொடர்பானது என தேவஸம்போர்டு சார்பாக பதிலளிக்கப்பட்டது.

நம்பிக்கைத் தொடர்பானதாக இருந்தாலும், சில காரியங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டிவரும் என நீதிமன்றம் அறிவித்தது. புல்லுமேடு வனப்பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு யார் அனுமதியளித்தார்கள்? பெரியார் டைகர் ரிஸர்வில் பக்தர்கள் எவ்வாறு நுழைந்தனர்? கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது? ஆகிய காரியங்களில் அரசு விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

விபத்துத் தொடர்பாக கேரள மாநில உள்துறை செயலாளரின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் வருகிற வியாழக்கிழமை கூடும் எனவும், அரசு நிலைப்பாட்டை அறிவிக்க கால அவகாசம் தேவை எனவும் அட்வக்கேட் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.வருகிற வெள்ளிக்கிழமை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்தி:பாலைவனதூது 

இராமநாதபுரம் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரம்,ஜன.21:தமிழக அரசு சார்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டு அதற்கான முன்பதிவு 19/01/2011 முதல் 24/01/2011 வரை அனைத்து மாவட்ட ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, மற்றும் பட்டதாரிகள் பலர் பங்குபெற்றனர். இவ்வேலைவாய்ப்பு முகாமுக்கான முன்பதிவு நடைபெறும் இடங்களான இராமநாதபுரம், திருவாடனை, திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்களம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, நயினார்கோயில், போகலூர், கடலாடி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

வேலைவாய்ப்பு முகாமுக்கான நேர்முக தேர்வு வருகின்ற 28/01/2011 அன்று கீழக்கரை முஹம்மது சதக் பொறியற் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.
செய்தி:பாலைவனதூது

பாபர் மசூதி தீர்ப்பு & தேசிய அவமானம்-கருத்தரங்கம்


திருச்சியில் ஜனவரி 16, அன்று பாபரி மஸ்ஜித் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சி தமுமுக குத்பிஷா நகர் கிளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் மமக துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மதிமுக மாநில மாணவரணி செயலாளர் கங்கைச் செல்வன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். தமுமுக, மமக மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க அரங்கிற்குள் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். அரங்கிற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் வெண்திரையில் நிகழ்ச்சிகளை கவனித்தனர்.


இது அற்புதமான முன்முயற்சி என தமிழ் தேசிய சிந்தனையாளர்களும், திராவிட இயக்கத் தோழர்களும், சமய நல்லிணக்க நண்பர்களும் பாராட்டினர். கிளை நிர்வாகிகளின் கடுமையான உழைப்பும், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் கருத்தரங்கை பெரியளவில் வெற்றிபெறச் செய்திருக்கிறது.
 

 

 

 

செய்தி:கூத்தாநல்லூர் முஸ்லீம்ஸ் 

பழனி பாபா - 14 வது நினைவு நாள் பொதுக்கூட்டம்

அல்ஹாஜ், அஹ்மத் அலி பழனி பாபா-வின் 14 வது நினைவு நாள் பொதுக்கூட்டம் பழனி ஆயக்குடியில் இன்ஷா அல்லாஹ் 28 ஜனவரி மாலை 6 மணியளவில்   நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை மக்கள் ஜனநாய கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அழைப்பிதழ்.

 செய்தி:கூத்தாநல்லூர் முஸ்லீம்ஸ் 

Dua For Gaza