Wednesday, May 8, 2013

பன்ஸல் ராஜினாமாச் செய்ய SDPI கோரிக்கை!

லஞ்சம் வாங்கிய வழக்கில் மருமகன் கைதான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ரெயில்வே அமைச்சர் பவன்குமார் பன்ஸல் தனது பதவியைராஜினாமாச் செய்யவேண்டும் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுத் தொடர்பாக எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் எ.ஸயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: நிலக்கரி, 2 ஜி உள்ளிட்ட ஊழல்கள் எல்லாம் ஐ.மு அரசில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. புரட்சிகர காங்கிரஸ் ஊழல் காங்கிரஸாக மாறிவிட்டது. ஊழல் புரிவதும், குற்றவாளிகளை பாதுகாப்பதும் ஆகிய காரியங்களை மட்டுமே அரசுசெய்கிறது. ஊழல்களின் மூலம் நாட்டின் நம்பிக்கையை இழக்கச் செய்த அரசு ஆட்சியில் தொடர உரிமையில்லை.

வடக்கிலிருந்து முஸ்லிம்களை, தமிழர்கள் வெளியேற்றியது இன சுத்திகரிப்பு:எம்.ஏ சுமந்திரன் எம்.பி!


கொழும்பு: இலங்கையின் வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இலங்கை தமிழரசு கட்சியின் நிறுவனரான தந்தை செல்வாவின் 36-வது நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் சுமந்திரன்.

கூடங்குளம் : உச்ச நீதிமனறம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் நலனுக்கு எதிரானது - SDPI

0
கூடங்குளம் : உச்ச நீதிமனறம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் நலனுக்கு எதிரானது என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை வருமாறு;
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, அணு உலை இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது துரதிஷ்டவசமானது.மேலும் அப்பகுதி மக்களின் வாழ்வாதார உரிமை உள்பட எவ்விதமான உரிமையும்  கணக்கில் எடுக்காமல் அணுஉலை இயங்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் மாற்றம் கோரும் முஸ்லிம்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் - தமிழக அமைச்சர்!


சென்னை: முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்கும் என வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.வி. ரமணா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று(திங்கள் கிழமை) நடைபெற்ற வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, "கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tuesday, May 7, 2013

ரத்ததான கொடையாளர்க‌ள் 1 ல‌ட்ச‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை அறிந்து கொள்ள‌ வ‌லைத‌ள‌ம்!ராம‌நாத‌புர‌த்தில் அறிமுக‌ நிக‌ழ்ச்சி!


இந்தியா முழுவதும் தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்ய 
விரும்பும் சுமார் 1ல‌ட்ச‌த்திற்கும்  மேற்ப‌ட்டோர்  பதிவு செய்துள்ள இணையதளத்தை செல்போன்களில் அறிந்து கொள்ளும் வசதியை ராமநாதபுரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.


கடந்த 24.11.2005 அன்று ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.கே. ஷெரீப் (9885039261) என்பவரை நிறுவனராகக் கொண்டும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைந்துhttp://www.friends2support.org/index.aspx என்ற இணையதளத்தை துவக்கியுள்ளனர்.

"நீங்கள் உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும்"- Dr.செந்தில் வசந்த்

உலக ஆஸ்துமா தினம் ஆண்டுதோறும் மே 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆஸ்துமா தினத்தின் கருப்பொருள் “நீங்கள் உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும்’ என்பதாகும்.அந்த கருப் பொருளை செயல்படுத்த நாம் சில விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்!

நமது இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 3200 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆஸ்துமா குழந்தைகளிடையே ஒரு நீடித்த நோயாக உருப்பெற்றுள்ளது. நாட்டில் 10-ல் ஒரு குழந்தை இந்நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் இன்கேலர்களை பயன்படுத்துவதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இந்திய பிஸ்டல் சுடும் அணியின் முஸ்லிம் பயிற்சியாளருக்கு அமெரிக்கா விசா மறுப்பு!


அமெரிக்காவில் நடைபெறவுள்ள பிஸ்டல் சுடும் உலகக் கிண்ண போட்டியில் (ISSF World Cup) இந்திய அணி கலந்து கொள்கிறது. இந்த அணியுடன் செல்ல வேண்டிய பயிற்சியாளருக்கு அமெரிக்க விசா தரமுடியாது என மறுத்துள்ளது, டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம்.

Monday, May 6, 2013

ஃபலஸ்தீன் சுதந்திர தேச பதவிக்கு கூகிளின் அங்கீகாரம்!

google_palestine
வாஷிங்டன்:ஃபலஸ்தீனை சுதந்திர தேசமாக அங்கீகரித்து அந்நாட்டிற்காக தனி பக்கத்தை கூகில் உருவாக்கியுள்ளது. முன்னர் ஃபலஸ்தீன் எடிசன் ஹோம் பேஜின் பெயர் ஃபலஸ்தீன் பிரதேசம் என்பதாக இருந்தது. இம்மாதம் 1-ஆம் தேதி அதனை ஃபலஸ்தீன் என்று கூகிள் திருத்தம் செய்துள்ளது. கூகிளின் முடிவை ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வரவேற்றுள்ளார்.கூகிள் லோகோவின் கீழ் பகுதியில் ஃபலஸ்தீன் என்று அரபியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. கூகிள் பி.எஸ் என்பது கூகிளின் ஃபலஸ்தீன் எடிசன் பெயராகும்.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு:இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது!


 2007 ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 2002-ஆம் ஆண்டு பெஸ்ட் பேக்கரி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான ஜயந்த் கோஹ்லி என்ற உஸ்தாத், அவனது மகன் ரமேஷ் கோஹ்லி என்ற மகேஷ் ஆகியோர் குஜராத்தின் வதோதராவில் வைத்து கைதுச் செய்யப்பட்டனர். ஜயந்தைக் குறித்து தகவல் அளிப்பவருக்கு இரண்டு லட்சமும், ரமேஷைக் குறித்து தகவல் அளிப்பவருக்கு ஐந்து லட்சமும் பரிசுத்தொகையாக அளிக்கப்படும் என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) அறிவித்திருந்தது.

Sunday, May 5, 2013

காலனியாதிக்க ஆட்சியின் தொடர்ச்சியே அரச பயங்கரவாதம் – அருந்ததி ராய்!

Arundhati Roy
புதுடெல்லி:காலனியாதிக்க ஆட்சியின் தொடர்ச்சியே அரசு பயங்கரவாதம் என்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் கூறியுள்ளார்.
டெல்லி ராஜேந்திரபிரசாத் பவனில் நடந்த ‘மக்களுக்கு எதிரான போர்’என்ற கன்வென்சனில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர்.

Dua For Gaza