Saturday, May 4, 2013

ஹைதராபாத் : பல்கலைக்கழகங்களில் சிறுபான்மை - தலித் மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி, போலீஸ் தாக்குதல் - கேம்பஸ் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!



புதுடெல்லி : ஆந்திரமாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மற்றும் இஃப்லு பல்கலைக் கழக வளாகங்களில் சிறுபான்மை, தலித் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சங்பரிவார மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மற்றும் போலீஸுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுத் தொடர்பாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் இமாமுல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின்(ஏ.பி.வி.பி) தாக்குதலுக்கு இரையாகும் தலித் மாணவர்களை கைதுச் செய்யும் நடவடிக்கையை போலீஸ் மேற்கொண்டுள்ளது. இஃப்லு பல்கலைக் கழகத்தில் கஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த மாணவர் முதஸ்ஸிர் கம்ரானின் தற்கொலைக்கு காரணம் பல்கலைக் கழக நிர்வாகிகள், பாசிச மாணவர் அமைப்புகள், போலீஸ் ஆகியோரின் சதித்திட்டமாகும்.

Friday, May 3, 2013

சோமாலியா - பஞ்சத்தினால் பலியாகிய 258,000 மக்கள்!

சோமாலியா

மொகாதிசு - சோமாலியாவில் வறுமை மற்றும் பசிக்கொடுமை காரணமாக ஏறத்தாழ இரண்டு லட்சத்து அம்பத்தெட்டாயிரம் மக்கள் பலியாகி உள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 


வறுமையினால் மக்கள் பலியாவதைத் தடுப்பதற்கு போதுமான அளவு தாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் ஐ.நா. அந்த அறிவிக்கையில் ஒத்துக் கொண்டுள்ளது. 2010 - 2012 ஆண்டுகளில் சோமாலியாவில் நிலவிய கடும் வறுமைக் காரணமாகவும் பசியின் காரணமாகவும் இறந்துள்ள 258,000 மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறி்க்கையினை ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பும், பஞ்ச முன் எச்சரிக்கை அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளது.

சிரியாவிலும், மியான்மரிலும் இரத்தக்களரியை நிறுத்தவேண்டும்! - தவக்குல் கர்மான்!



உலன்பதூர் : சிரியாவில் மக்கள் மீது பஸ்ஸாருல் ஆஸாதின் ராணுவமும், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அரசும், புத்தமதத்தினரும் நடத்தும் தாக்குதல்களை நிறுத்த முயலவேண்டும் என்று யெமனில் ஜனநாயக போராட்டத்திற்கு தலைமை தாங்கியவரும், அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவருமான தவக்குல் கர்மான் உலக மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் தேசிய ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளர் அஸத் ஸாலி கைது : பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்


கொழும்பு நகரின் முன்னாள் துணை மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளருமான அஸத் ஸாலி அவர்கள் கைது செய்யப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் வார இரு இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியை காரணமாக வைத்தே இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் இலங்கை அரசாங்கம் தன்னுடைய வலிமையை காட்டுவதற்கே இந்த கைதை நடத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த பேட்டியின் விபரங்களை அஸத் ஸாலி தரப்பு விளக்கிய போதும் அதனை ஏற்றுக்கொள்ள அரசாங்க தரப்பு தயாராக இல்லை.

Thursday, May 2, 2013

சர்வதேச அளவில் உள்நாட்டுக்குள்ளேயே புலன்பெயரும் மக்கள் அதிகரிப்பு!


ஆயுத மோதல், வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக உலகெங்கிலும் பல நாடுகளில் மக்கள் தங்கள் நாடுகளுக்குள்ளேயெ, முன்னெப்போதும் காணப்பட்டதை விட மிக அதிகமான எண்ணிக்கையில், தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளார்கள் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு இறுதியில் இதுபோல உள்நாட்டிலேயே புலன்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 28.8 மில்லியனாகும் என்று ஜெனிவாவில் உள்ள உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் கூறுகிறது. சிரியாவில் மட்டுமே 2012ம் ஆண்டு இறுதி வாக்கில், 2.4 மில்லியன் பேர் உள்நாட்டுக்குள் புலன்பெயர்ந்துள்ளார்கள் என்று இந்த அமைப்பு கூறுகிறது.

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்:உண்மை குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும்- பாப்புலர் ஃப்ரண்ட்


சென்னை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலக கூட்டம் ஏப்ரல் 29 ம் தேதி மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமையில் சென்னையில் நடைபெற்றது . 

இச்செயலக கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கபட்டது . முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது :

  • சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னிய இளைஞர் சித்திரைப் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்விழாவுக்கு பிறகு மரக்காணம் அருகேயுள்ள கிராமத்தில் இரு பிரிவனர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு பல குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன . முஸ்லிம்களின் பள்ளிவாசல்களும், சொத்துகளும் சேதப்படுதபட்டுள்ளது. அங்குள்ள முஸ்லிம் மக்களும் தாக்கப்பட்டுள்ளனர். இதை வண்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , அது போல் பாதிக்க பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டும் என்றும் இச்செயலக கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

Wednesday, May 1, 2013

மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா


மேட்டுப்பாளையம்: கோவை வடக்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா பொதுக்கூட்டம் மற்றும் இலவச தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் அருகில் மஜீத் திடலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோவை வடக்கு மாவட்ட தலைவர் A.S. ஷபீக் அஹமது தலைமை தாங்கினார். சமூக மேம்பாட்டு துறை பொறுப்பாளர் அஸ்ரப் கிராஅத் ஓதினார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் A. காஜா மைதீன் வரவேற்றார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் அப்துல் கபூர் மன்பஈ வாழ்த்துரை வழங்கினார்.

சென்னையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு!



சென்னை: பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து, சென்னையில் வரும் மே 5ம் தேதி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று கூட்டமைப்பின் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவிவுடன் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சந்திப்பு!


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. அவர்கள் இன்று (30-04-2013) மாலை 4 மணியளவில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவருடன் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், கட்சியின்செய்தி தொடர்பாளர் வன்னியரசு, மாநில பொருளாளர் யூசுப், பாவலன், ரஹ்மான் உட்பட பல்வேறு நிர்வாகிகளும் வருகை தந்தனர். அவர்களை மாநில தலைவர் தெஹ்லான் பாகவி உட்பட எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் வரவேற்றனர். சுமார் 1 மணிநேரம் உரையாடிய தொல் திருமா அவர்கள், தர்மபுரியில் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும், மரக்காணத்தில் தலித்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும், சமீபத்தில் நடைபெற்ற மாமல்லபுரம் மாநாட்டில் பாமக தலைவர்களால் பேசப்பட்ட உரைகள் குறித்தும் விளக்கினார்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்: SDPI- BSP கூட்டணி 199 தொகுதிகளில் போட்டி!


கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் எஸ்.டி.பி.ஐ-பகுஜன் சமாஜ் கூட்டணி நம்பிக்கையுடன் களத்தில் உள்ளது. இக்கூட்டணி 199 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 175 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ 24 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கட்சி உருவாக்கப்பட்ட பிறகு எஸ்.டி.பி.ஐ முதன் முதலாக கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி-உள்ளாட்சி தேர்தல்களில் எஸ்.டி.பி.ஐ தனது பலத்தை நிரூபித்திருந்தது.பெங்களூர், மங்களூர் மாநகராட்சிகளில் எஸ்.டி.பி.ஐக்கு கவுன்சிலர்கள் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலிலும் 70க்கும் அதிகமான இடங்களை எஸ்.டி.பி.ஐ வென்றது. 

முஸ்லிம்-தலித் வாக்குகளை குறிவைத்துள்ள எஸ்.டி.பி.ஐ-பகுஜன்சமாஜ் கட்சி கூட்டணியை முக்கிய அரசியல் கட்சிகள் கவலையுடன் பார்க்கின்றன. 

Dua For Gaza