Thursday, April 4, 2013

லோக் ஆயுக்தா:குஜராத் சட்டப்பேரவையில் மோடியின் மோசடி மசோதா தாக்கல்!

Gujarat assembly passes new Lokayukta Bill.
காந்திநகர்:பிரதமர் கனவில் மூழ்கியுள்ள குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி, மாநில அரசியல்வாதிகளின் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை நியமிக்க மறுத்து வருகிறார். லோக் ஆயுக்தாவை நியமித்தால் வளர்ச்சி நாயகன் வேடம் போடு தனது உண்மை முகம் வெளிப்பட்டுவிடும் என்றுஅஞ்சியே லோக் ஆயுக்தா நீதிபதி நியமனத்தை மோடி புறக்கணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மாநில ஆளுநர் கமலா பெனிவால் கமலா பெனிவால் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் நீதிபதி ஆர்.மேத்தா என்பவரை லோக் ஆயுக்தவாக  நியமித்தார். இதற்கு எதிராக மாநில அரசு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் லோக் ஆயுக்தா நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தே இறுதியானது என உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.

Wednesday, April 3, 2013

கொரிய பகுதிகளில்தொடரும் போர் பதற்றம்! அமெரிக்கா, சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!


அமெரிக்க கடற்படை தமது போர்க் கப்பல் ஒன்றை கொரியா கடல் பகுதிக்கு திடீரென அனுப்பி வைத்துள்ளது. இந்தக் கப்பலில் ஏவுகணை தடுப்பு கருவிகள் உள்ளன.

அமெரிக்கா கொரியா பகுதியில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை சீரியசாக எடுத்திருப்பதையே இது காட்டுகிறது.
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன், அமெரிக்க இலக்குகள் மீது ஏவுகணை ஏவப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததை முதலில் சீரியசாக எடுக்காத அமெரிக்கா, இப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கப்பலை அனுப்பி வைத்துள்ளது.

முஸ்லீம்களை தண்டிக்கும் நீதி இந்துமதவெறியர்களை தண்டிக்காதது ஏன்?

பாபரி மசூதியை இடித்த பாஜக கிரிமினல்களும், மும்பையில் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறியாட்டம் நடத்திய சிவசேனா குண்டர்களும் இன்று ‘தேச பக்தர்’களாக மதிப்பான அரசியல் தலைவர்களாக உலாவுகிறார்கள்.


20 ஆண்டுகளுக்குப் பிறகும், கசக்கும் உண்மை!
பழைய காயங்களை கிளற வேண்டாம் என்று சொல்லி 1993 மும்பை கலவரங்களில் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது.
மும்பையை பூகம்பம் போல் குலுக்கிய இரண்டு நிகழ்வுகள் நடந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டன. 900 பேரை பலி வாங்கிய, முஸ்லீம்களுக்கு எதிரான சிவசேனா கும்பலின் இரண்டு மாத வெறியாட்டங்களுக்கு நீதி வழங்குவது குறித்து பேசினால் ‘பழைய காயங்களை கிளறக் கூடாது’ என்று வாயை அடைக்கிறார்கள். ஆனால், மார்ச் 12, 1993 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், அப்பாவி உயிர்களை பலி கொண்ட பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரிக்கப்படுகிறது; புலன் விசாரணை, நீதிமன்ற விசாரணை, உயர்நீதிமன்றத் தீர்ப்பு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்று அரசு எந்திரத்தின் நகர்வுகள் நீதியின் நிரூபணங்களாக போற்றப்படுகின்றன.

Tuesday, April 2, 2013

மதசார்பற்றவர்தாம் பிரதமர்: ஐக்கிய ஜனதா தளம் திட்டவட்டம்!

janata dal united
பாட்னா:பன்முக சமுதாய அமைப்பை உடைய மக்கள் வாழும் இந்தியாவில் மதச்சார்பற்ற தன்மை உடையவரே பிரதமராக வரவேண்டும் என்ற எங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐக்கிய ஜனதாதளம் கூறியுள்ளது.
பா.ஜ.க ஆட்சிமன்றக் குழுவில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி சேர்க்கப்பட்டதை அடுத்து அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பா.ஜ.கவில் ஒரு பிரிவினர் கோரி வருகின்றனர்.இதுதொடர்பாக பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பீகார் மாநில செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மும்பை காவல்துறை மன்னிப்பு கேட்காவிட்டால் அவமதிப்பு வழக்கு தொடர்வோம் - ஜமாத்தே இஸ்லாமி எச்சரிக்கை.........!!

ஜமாத்தே இஸ்லாமி
மும்பை : இந்தியாவின் மிகத் தொன்மையான முஸ்லீம் அமைப்புகளில் ஒன்றான ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் பிரிவான பெண்கள் இஸ்லாமிய அமைப்பு முஸ்லீம் பெண்களை மூளைச்சலவை செய்து ஜிஹாதுக்கு தயார் செய்வதாக மும்பை காவல்துறை வெளியிட்ட மெமோவால் சர்ச்சை வெடித்துள்ளது.

ஜமாத்தே இஸ்லாமி இந்தியாவில் இருக்கும் பிரபலமான முஸ்லீம் அமைப்புகளில் ஒன்றாகும். நாடெங்கும் பல்வேறு கல்லூரிகளையும் பள்ளிகூடங்களையும் நடத்தும் இவ்வமைப்பு மஹாராஷ்டிராவில் மூன்று இளநிலை கல்லூரிகளையும் 40 பள்ளிகூடங்களையும் நடத்தி வருகின்றது. இவ்வமைப்பின் பெண்கள் பிரிவாக Girls Islamic Organisation – GIO இயங்கி வருகின்றது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவராக ஏ.ஸயீத் அவர்கள் தேர்வு


20130331_143218(0)
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ )கட்சியின் தேசிய பொதுக்குழு  கூட்டம் மார்ச் 30&31 ஆகிய தேதிகளில் கோவை ஆயிஷா மஹாலில் நடைபெற்றது.

நேற்று(30.03.2013) காலை கொடியேற்றத்துடன் துவங்கிய இப்பொதுக்குழு இன்று (31.03.2013)மாலையில் நிறைவடைந்தது.
நேற்றைய தினம் கட்சியின் கட்சியின் கடந்தகால செயல்பாடுகள் குறித்து விவாதம் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் துவங்கியது. தேர்தல் அதிகாரியாக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான P. கோயா நியமிக்கப்பட்டார்.

Monday, April 1, 2013

இலங்கை தூதரகம் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் முற்றுகை போராட்டம்


சென்னை: சென்னை லயோலா கல்லூரி எதிரில் வைத்து முஸ்லிம்களை ராஜபக்சே மற்றும் புத்த சிங்கள பாசிஸகுருமார்களுக்கு எதிராக 01.04.2013 திங்கள்கிழமை அன்று மாலை இலங்கை துணை தூதரகம் முற்றுகை போராட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்றது.
மாநில துணைத்தலைவர் சேக் அன்சாரி தலைமை தாங்கி கண்டன உரையில் இலங்கையில் ஆளும் சிங்கள பௌத்த அரசாங்கம் தமிழர்களை தொடர்ந்து முஸ்லீம்களை வேரறுக்க வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கெதிராக பள்ளிவாசல் இடிப்பு , ஹலால் முத்திரை நீக்குதல் , முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளை மறுக்கும் நோக்கில் ஹிஜாபை தடை செய்தல் பர்தா மற்றும் தொப்பி அணிந்து வரும் முஸ்லீம்களை அச்சுறுத்துதல் என பல்வேறு அச்சுறுத்தும் வேலைகளை செய்து வருகிறது .

தாழ்த்தப்பட்ட, தலித் மாணவர்களுக்கு ‘ஏகலைவா’ விருது! – கேம்பஸ் ஃபிரண்ட் அறிவிப்பு!

campus front of india
சென்னை:தேசிய அளவில் செயல்படும் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில்  தாழ்த்தப்பட்ட மற்றும் தலித் மாணவர்களில் திறமையானவர்களுக்காக, “ஏகலைவா” விருதும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய மாநாட்டில் ஏகலைவா விருதிற்கான அறிவிப்பை வெளியிட்டது கேம்பஸ் ஃப்ரண்ட்.  பிறப்பு ஏற்ற தாழ்வுகளால் திறமைகள் மறுக்கப்பட்ட ஏகலைவா என்ற தீரனின் நினைவாக, “ஏகலைவா” விருது வழங்குவதாக முன்மொழிந்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தாழ்த்தப்பட்ட ஒருவனின் திறமைகள் உயர் சாதி எனும் பிறப்பு ஆதிக்கத்தால் ஒடுக்கப்படுகின்றது. அது அன்றும், இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.

கால்நடைகளைப் போல வாக்களிக்கும் இந்தியர்கள்! – கட்ஜு தாக்கு!

Katju decries herd-like voting mentality among Indians.
டெல்லி:ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் நம் நாட்டில் 90 சதவீதம் பேர் ஆடு, மாடுகளைப் போல வாக்களிக்கின்றனர். அதனால் நாடாளுமன்றத்தில் அதிக கிரிமினல்கள் வந்துவிட்டனர். இந்த நிலையில் இந்தியாவை முழுமையான ஜனநாயக நாடு என்று சொல்ல முடியாது ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது: 90 சதவீத இந்தியர்கள் ஆடு, மாடுகளைப் போல வாக்களிக்கின்றனர். அதனால் நாடாளுமன்றத்தில் அதிக கிரிமினல்கள் வந்துவிட்டனர். இந்த நிலையில் இந்தியாவை முழுமையான ஜனநாயக நாடு என்று சொல்ல முடியாது.

கறுப்புச் சட்டங்களை முதலில் வாபஸ் பெறுங்கள்!-மத்திய அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

தீவிரவாத வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்படும் என்ற மத்திய அரசின் அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது. 

அதேவேளையில் சிறையில் வாழ்க்கையை வீணடிக்கப்படும் நூற்றுக்கணக்கான அப்பாவிகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வு என்பது குறித்து சந்தேகமாக .உள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை விசாரணைக்கைதிகளாக உள்ளனர். சிறப்பு நீதிமன்றங்களை நிறுவினால் கூட இவ்வழக்குகளை முடிக்க பல வருடங்களாகும் என்பதை கடந்த கால வரலாறு சுட்டிக்காட்டுகிறது.

Dua For Gaza