Thursday, March 7, 2013

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை இழந்துவிட்டோம் – இ.அபூபக்கர் இரங்கல்!

இ.அபூபக்கர்
புதுடெல்லி:பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அமெரிக்காவின் திமிரை எதிர்த்த தீரமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை சாவேஸின் மரணத்தின் மூலம் உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் இழந்துவிட்டார்கள் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது!

புதுடெல்லி: அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப் பட்டார்.
கடந்த 2007ம் ஆண்டு, அக்டோபர் மாதம் அஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்தது இதில்  3 பேர் பலியானார்கள். 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சுரேஷ் நாயர், மெகுல் பவேஷ் பட்டேல், மற்றும் ஹர்ஷத் சோலங்கி மற்றும் முகேஷ் வாசானி ஆகியோர் இச்சம்பவத்தின் பின்னணியில் செயல் பட்டதாக காவல்துறையினரின் புலன் விசாரணையில் தெரிய வந்தது.

இதன் பின்னணியில் பின்பலமாக இருந்து குண்டை வெடிக்க வைக்க தயாராக இருந்த மேலும் இருவர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்களில் சுனில் ஜோஷி கோத்ராவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்கா சீரமைப்புக்கு நிதிக்காக விண்ணப்பிக்கலாம் – வக்பு வாரியம் அறிவிப்பு


Tamil-Daily-News-Paper_94962275029
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு வக்பு நிறுவன மேம்பாட்டு நிதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Wednesday, March 6, 2013

ஹியூகோ சாவேஸ்: ஒரு புரட்சித்தலைவனின் மரணம்….!

வெனிசுலா: இருபத்தோராம் நூற்றாண்டில் புரட்சி என்கிற சொல்லை புதிய கோணத்தில் மறு அறிமுகம் செய்து வைத்தவர் வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ். 1954ல் பிறந்து சாவேஸ் 1975ல் மிலிட்டரி அகாடெமியில் பட்டம் பெற்றார். கொரில்லா தாக்குதல் இல்லை... ராணுவத்தை வைத்து கலகம் செய்யவில்லை... ஒரு குண்டு கூட வெடிக்காமல், கத்தியின்றி ரத்தமின்றி முறைப்படி தேர்தலில் நின்று, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றவர் சாவேஸ். மக்களின் மனம் கவர்ந்தவர் இந்த புரட்சி நாயகன். வெனிசூலாவில் சாவேஸ் நிகழ்த்திக் காட்டியஅமைதிப்புரட்சி, ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. எனவேதான் காஸ்ட்ரோவுக்குப் பிறகு, லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் புரட்சியாளராகவே கருதப்படுகிறார்.

அமெரிக்க எதிரி சாவேஸ் மரணம்!


அமெரிக்க எதிரி  சாவேஸ் மரணம்
கரகாஸ்: புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹூகோ  சாவேஸ் (Hugo Chavez) இன்று மரணமடந்தார்.

தென்அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் அதிபராகக் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் ஆறாவது முறையாக மீண்டும் தேர்வு  பெற்று அதிபரான சாவேஸ் புற்றுநோயால் தமது 58 ஆவது வயதில் மரணமடைந்தது அந்நாட்டு மக்களுக்குப் பேரதிர்ச்சியாகும்.

வெனிசுலாவின் கிராமம் ஒன்றில் மண் குடிசையில் தம் பாட்டியால் வளர்க்கப்பட்ட சாவேஸ், அந்நாட்டு ஏழை மக்களால்  நேசிக்கப்பட்டவர். 1992 ஆம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியில் சாவேஸ் பங்கேற்றார். அது தோல்வியில் முடிந்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் விடுதலையான அவர் புதிய கட்சி தொடங்கி 1998 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார்.

மதுரை:பைப் வெடிகுண்டு சதிகாரர்கள் கைது! புதுவை ரயிலில் குண்டு வைத்தது அம்பலம்!

where-the-pipe-bomb-was-found
திருச்சி:ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து புதுவை வரும் தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு


20130305_181832
இராமநாதபுரம் மாவட்ட SDPI கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்  நடைபெற்றது. இதில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேர்தல் முடிவுகள்
மாவட்ட தலைவர்
M.I.நூர் ஜியாவுதீன்
மாவட்ட துணைத்தலைவர்:
1.S.ஃபைரோஸ்கான்
2.சோமு
மாவட்ட பொதுச்செயலாளர்
M.செய்யது ஹாலிது

Tuesday, March 5, 2013

தாய்லாந்து: அமைதி வழியில் முஸ்லிம் கிளர்ச்சி படை!


தென் தாய்லாந்தில் நடைபெற்று வந்த கிளர்ச்சியில் புதிய திருப்பு முனையாக தாய்லாந்து அரசிற்கும், முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் மத்தியில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிரதமர் 'நஜிப்' முன்னிலையில் தாய்லாந்து அரசும், தென் தாய்லாந்து முஸ்லிம் கிளர்ச்சி படையும் கையெழுத்திட்டன. 

சிறையில் இருந்தாலும் முழு சம்பளம் பெறும் புரோகித்


மும்பை : மாலேகான், சம்யுக்தா எக்ஸ்ப்ரஸ் உள்ளிட்ட பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித் ராணுவத்தில் இருந்து இடைக்கால நீக்கம் செய்யப்படாததோடு முழுமையான சம்பளமும் வாங்குகிறார் என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது.

 இந்தியாவில் நடைபெற்ற மாலேகான் குண்டு வெடிப்பு, சம்யுக்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வழக்குகளில் ஈடுபட்ட வலதுசாரி தீவிரவாதிகளுக்கு எல்லாவித உதவிகளும் செய்த ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த பிரசாத் புரோகித் 2008ல் கைது செய்யப்பட்டார்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமை அலுவலக திறப்பு விழா


sdpi new office opening cermony
     எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமை அலுவலக திறப்பு விழா இன்று(04-03-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நாஞ்சில் செய்யதலி வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார்.

Dua For Gaza