Tuesday, March 5, 2013

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி & பாப்புலர் ஃப்ரண்ட் இணைந்து நடத்திய புனித ஹஜ் பயண பாஸ்போர்ட் விழிப்புணர்வு முகாம்



காஞ்சிபுரம் : பாஸ்போர்ட் இல்லாத முஸ்லிம்கள், உடனடியாக பாஸ்போர்ட் பெறுவதற்கு வசதியாக “ஹஜ் மேளா”வை அரசு நடத்துகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் மார்ச் 2ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஹஜ் மேளா நடைபெற உள்ளது. இதில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் பங்கேற்று, உடனடியாக பாஸ்போர்ட் கிடைக்க ஆவண செய்கிறார்கள்.

இதனை முன்னிட்டு ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புனித ஹஜ் பயண மேற்கொள்பவர்களுக்கு உதவி செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் பிப்ரவரி 26, 27ம் தேதிகளில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான பாஸ்போர்ட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .

Monday, March 4, 2013

இரத்தத்தை உறிஞ்சும் மது அரக்கன்......!



மக்களை போதையில் ஆழ்த்தி, அவர்களின் உடல் நலத்தை கெடுத்து, எதிர்காலத்தை சிதைத்து, பல லட்சம் குடும்பங்களின் வயிற்றெரிச்சலில் கிடைக்கும் பணத்தை கொண்டு இலவசங்களை அள்ளிவீசி ஓட்டு பொருக்கும் திமுக, அதிமுக. போன்ற மாநில கட்சிகளையும், காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற மத்திய கட்சிகளையும் மக்கள் புறம் தள்ள வேண்டும். 



மக்களை நல்லாட்சி செய்யத்தான் ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் ஆட்சியாளர்களோ தேர்தல் முடிந்ததும் மக்களின் ரத்தங்களை அட்டை பூச்சிகள் போல உருஞ்சுகிரார்கள்/ தேர்தல்களில் வாக்குறுதி அளித்த இலவசங்களை அள்ளி வீச, ஏழை மக்களின் குடும்பத்தை சிதைத்து, மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறார்கள்.

Sunday, March 3, 2013

மார்ச் 4, “ஈழத்தோழமை நாள்”, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி பங்கேற்ப்பு

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழு கூட்டம் ஜெனிவாவில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் இம்முறை இலங்கைக்கு எதிரான கண்டன தீர்மானத்தை கொண்டு வர முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
புலம் பெயர் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் ஜெனிவாவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக மார்ச் 4 தேதி ஈழத்தோழமை நாள் என அறிவித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

ஈராக்கிலும், ஆப்கானிலும் நடந்ததை அமெரிக்க சமூகம் அறியவேண்டும் – ப்ராட்லி மானிங்!


விர்ஜீனியா:ஈராக்கிலும், ஆப்கானிலும் நடந்ததை அமெரிக்க மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே தான் ராணுவ ஆவணங்களை கசியவிட்டதாக விக்கிலீக்ஸிற்கு அமெரிக்க தூதரக ரகசியங்களை ஒப்படைத்த வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் அமெரிக்க ராணுவ உளவுத்துறை அனலிஸ்ட் ப்ராட்லி மானிங் தெரிவித்துள்ளார்.

Saturday, March 2, 2013

யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?


டந்த பிப்ரவரி 21ம் தேதி ஹைதரபாத் தில்சுக்நகரின் சந்தைத் தெருவில் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன; 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்; 119 பேர் காயமடைந்தனர்.
இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை தேடுவதற்கான புலன் விசாரணை நடந்து வருகிறது.
“அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஏதாவது எதிர்வினை வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்” என்றார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே. அதன் மூலம் ஹைதரபாத் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் அரசு அமைப்புகளின் முன் முடிவை வெளிப்படுத்தினார்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வைகோவின் நடைபயண நிறைவு பொதுக்கூட்டம்! SDPI மாநில தலைவர் பங்கேற்பு!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி SDPI கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் 17 வரை தமிழக முழுவதும் மனித சங்கிலி, ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, தலைமைச் செயலகம் முற்றுகை போன்ற போராட்டங்களை வீரியமாக நடத்தியது. தொடர்ந்து கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் மட்டும் பங்கேற்ற மாபெரும் பேரணியை நடத்தியது.


மேலும் அடுத்த மாதம் மதுரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

                    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் SDPI கட்சி நடத்தி வருகின்ற மாவட்ட மாநாடுகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்து என்பதை முன்னிறுத்தியே நடந்து வருகிறது.

இதுபோன்றே பல்வேறு கட்சிகளிலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

வி.களத்தூர் மக்கள் போராட்டம் : திருச்சியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி



திருச்சி : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் மற்றும் மாநில நிர்வாகிகள் 28.02.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதிக்கு சென்று அங்குள்ள ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் மக்களை சந்தித்து பேசினார்கள்  . பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறியதாவது :

" கடந்த 22.01.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு மாணவர்கள் உட்பட 72 நபர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள். இன்னொரு தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டு வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருதலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ராஜாசேகர் நடந்துள்ளார். இந்நிலையில் பதட்டம் நீடித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் கடந்த 25.02.13 அன்று அதே பகுதியில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

வி.களத்தூர் மக்கள் போராட்டம் : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் நேரில் சந்திப்பு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பல வருடங்களாக இந்து அமைப்பினர் அடிக்கடி கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் சென்று தொழுகை நேரத்தின் போது பள்ளிவாசலின் முன்பு கொட்டு அடித்தும்,விரும்பத்தகாத கோஷங்கள் எழுப்பியும் தொழுகைக்கு இடையுறு ஏற்படுத்துவதால் அப்பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

Friday, March 1, 2013

இவர் இந்தியாவின் மனசாட்சி!

இவர் இந்தியாவின் மனசாட்சி!

நான் ஏன் பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த விரும்பவில்லை?’ - இப்படி ஒரு தலைப்பில் கட்டுரை எழுதத் துணிச்சல் வேண்டும். அது மார்கண்டேய கட்ஜுவுக்கு இருக்கிறது.

அதுவும் பால் தாக்கரே மரணத்தை ஒட்டி இணையதளத்தில் கருத்துச் சொன்னதற்காக இரண்டு மும்பை மாணவிகள் கைது செய்யப்பட்ட சமயத்தில் இப்படி எழுதினார் கட்ஜு. அதற்கு முன்னும் பின்னும் நாட்டுநடப்புகள்குறித்து பட்டவர்த்தனமாக கட்ஜு வெளியிடும் கருத்துகள் ஒவ்வொன்றும் இந்திய அரசியல் அரங்கில் மாபெரும் சலனங்களை உண்டுபண்ணுகின்றன.  இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் என்ற பதவி அத்தனை அதிகாரம் மிக்கது இல்லை. ஆனால், மார்கண்டேய கட்ஜு தலைவராக வந்த நாளில் இருந்து அதிரடிகளுக்குப் பஞ்சமே இல்லை. சமீபத்தில், 'பாரதிய ஜனதா தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத் தப்போவதாகச் சொல்லப்படுகிறது.

நடுத்தர ஏழை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்-SDPI


pre
   எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
          இந்திய நாட்டின் 82 வது பொது பட்ஜெட்டினை 8 வது முறையாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்துள்ளார். இதில் நடுத்தர, ஏழை மக்களை வாட்டி வதைக்கும் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Dua For Gaza