புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கூட்டு இந்துத்துவா மனசாட்சியின் படி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி கஷ்மீர் இளைஞர் அப்சல் குருவை இன்று அதிகாலை 5.25 மணியளவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தூக்கிலிட்டு படுகொலைச் செய்துள்ளது.
அப்சல் பிறந்த மாநிலமான கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



