Monday, February 4, 2013

நாள் ஒன்றுக்கு சராசரியாக தற்கொலைச் செய்யும் அமெரிக்க முன்னாள் ராணுவத்தினரின் எண்ணிக்கை 22! – ஆய்வில் தகவல்

'22 US veterans commit suicide daily'
வாஷிங்டன்:அமெரிக்க முன்னாள் ராணுவத்தினரில் 22 பேர் சராசரியாக தினமும் தற்கொலைச் செய்துகொள்வதாக அமெரிக்க அரசு நடத்திய முக்கிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு சராசரியாக 18 பேர் இவ்வாறு இறக்கிறார்கள் என்று முன்னர் கூறப்பட்டதைவிட இது சற்று அதிகமாகும். சுமார் 60 வயதைச் சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாய்களே இவ்வாறு அதிகமாக தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதுவரையிலான  ஆய்வுகளின்படி, இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் 50 வயதுக்குமேற்பட்டவர்களாவர்.

நல்ல குடும்பத்துப் பெண்கள் நடனமங்கைகள் ஆக மாட்டார்கள் : ஹூரியத் அமைப்பு

நல்ல குடும்பத்துப் பெண்கள் நடனமங்கைகள் ஆக மாட்டார்கள் : ஹூர்ரியத் அமைப்பு
காஷ்மீர்: நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் நடனமாடுவதற்கு அக்குடும்பத்தார் சம்மதிக்க மாட்டார்கள் என்று காஷ்மீர் ஹூர்ரியத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அயாஸ் அக்பர் கூறியுள்ளார்.

முழுவதும் பெண்களே உள்ள நடனக்குழு ஒன்று காஷ்மீரில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அக்குழுவினருக்கு மிரட்டல்களும் கடும் எதிர்ப்புகளும் வந்ததாகச் சொல்லப்பட்டதையடுத்து, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் அந்த நடனக் குழுவிற்கு தனது அரசின் ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

மதச்சார்பின்மையென்ற பெயரில் ‘விஸ்வரூபம்‘ எடுக்கும் படைப்புச் சுதந்திரம்

கமலின் ரசிகர்கள் ‘ஆப்கான் தீவிரவாதிகள் பற்றி கதையெடுத்தால் இங்குள்ள முஸ்லீம்கள் ஏன் கொதிக்கிறார்கள்‘ என்று ஒரு அறிவுப் பூர்வமான கேள்வியை எழுப்புகிறார்கள்.  விஸ்வரூபத்தில் ஆப்கான் தீவிரவாதிகளை அவர்களுடைய நாட்டோடு மட்டும் இணைத்து கதையெடுக்கப் பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்தத் தீவிரவாதி தமிழ்நாட்டிலுள்ள மதுரைக்கும், கோவைக்கும் வந்து தங்கியிருந்தபோது தமிழ் கற்றுக் கொண்டதாக கூறும் காட்சி உள்ளதாம்.
இந்த வசனம், காட்சி இங்குள்ள இஸ்லாமியர்களையும் ஆப்கான் தீவிரவாதிகளுடன் நேரடித் தொடர்புடையவர்களாகப் பார்க்கும் எண்ணத்தை திரைப்படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தாதா? ஏற்கனவே அர்ஜுன், விஜயகாந்த் வகையறாக்களின் தேசபக்திக்கு இஸ்லாமியர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். துப்பாக்கி படத்தில் சாதாரண இஸ்லாமியரைக்கூட ஸ்லீப்பர் செல் என்று சந்தேகிக்க வைத்துவிடும் அபாயம் இருந்ததைப் போலவே இதிலும அபாயம் உள்ளது. டெல்லி, மும்பை என்று கூறப்பட்டிருந்தால் கூட அதன் தன்மை வேறானதாக இருந்திருக்கும். ஆனாலும் அதையும் கூட நாம ஏற்றுக் கொள்ள முடியாது.

அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் மூன்று அதிகாரிகளுக்கு, இத்தாலிய நீதிமன்றம் சிறைத் தண்டனை !


அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் மூன்று அதிகாரிகளுக்கு, இந்தாலிய நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இத்தாலிய வீதி ஒன்றில் வைத்து இஸ்லாமிய மதகுரு ஒருவரை கடடத்திச் சென்ற ஆபரேஷனே, தண்டனைக்கு காரணம்.

ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நடத்தப்பட்ட ‘தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ நடவடிக்கையில் இந்த சம்பவம் நடந்தது.

த்தாலியில் வசித்த எகிப்தைச் சேர்ந்த மதகுரு அபு ஓமர் என அறியப்பட்ட ஒசாமா ஹசன் முஸ்தாபா நசீர் என்பவருக்கு (மேலே போட்டோவில் உள்ளவர்) அல்-காய்தாவுடன் தொடர்பு இருப்பதாக சி.ஐ.ஏ. சந்தேகித்தது. அதையடுத்து, அவர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது கடத்திய சி.ஐ.ஏ. டீம், தமது பிரத்தியேக விமானத்தில் எகிப்துக்கு கொண்டு போய் விசாரித்தனர்.

இவர் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் அல்ல என பின்னர் தெரியவந்தது.

Sunday, February 3, 2013

விஸ்வரூபம்’ சர்ச்சை முடிவுக்கு வந்தது: சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல்!

‘விஸ்வரூபம்’ சர்ச்சைக்கு தீர்வு - இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் இடையே உடன்பாடு!
சென்னை:இஸ்லாத்தின் புனித ஆதாரங்கள் மற்றும் வணக்க வழிபாடுகளை அவமதிக்கும் வகையிலும், அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற அழித்தொழிப்பு நடவடிக்கைகளையும், ஆக்கிரமிப்பையும் ஆதரிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது.  இத்திரைப்படத்தின் 6 காட்சிகளை நீக்கவும், திரைப்படத்தின் துவக்கத்தில் இது முற்றிலும் கற்பனையானது என்று காட்டவும் கமலஹாசன் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து எதிர்ப்பை கைவிட முஸ்லிம் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

திரை உலகம் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் !

popular front
புதுடெல்லி:திரைப்படங்களை தயாரிக்கும்பொழுது பன்முக சமூகம் என்ற நிலையில் மத, இன உணர்வுகளை திரைப்பட தயாரிப்பாளர்கள் மதிக்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மத்திய செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
சாதி ஓரவஞ்சனை, மத வெறுப்புணர்வுகளை தூண்டும் விதத்தில் தொடர்ச்சியாக தயாரிக்கப்படும் திரைப்படங்கள் பொதுமக்களிடையே எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்காவும், கூட்டணி நாடுகளும் நடத்தும் ஆக்கிரமிப்பையும், கூட்டுப் படுகொலைகளையும் நியாயப்படுத்த இந்திய திரைப்படத் துறையிலும் ஆட்கள் தயாராக உள்ளார்கள்.

Saturday, February 2, 2013

முஸ்லிம்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன் - கோ.சுகுமாரன்


விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. ஒரு மனித உரிமை ஆர்வலன் என்ற முறையில் எந்த கருத்தையும் தடை செய்வதன் மூலம் எதிர்கொள்ள கூடாது என்ற கருத்துடையவன். ஆனால், முஸ்லிம்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்படத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் கூறும் காரணங்களில் முக்கியமானது ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என இப்படத்தில் சித்தரிப்பது.
இந்தியாவில் இந்து பாசிசம் தலைத் தூங்கத் துவங்கிய காலத்திலும், அதன் பின்னர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் முஸ்லிம் மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தின. அப்போது இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று போன முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதப் பாதையை தேர்வு செய்தனர். இதற்கு சர்வதேச அரசியலும் பின்புலமாக இருந்தது. அப்போதுதான் 'முஸ்லிம் தீவிரவாதம்' என்ற சொல்லாடல் புழகத்திற்கு வந்தது. இவற்றை அரசுகள் எதிர்க்கொண்ட விதமும், அது முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் பற்றியும் பிரிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகாரப்பூர்வ தடை!

vishwaroopam

அபுதாபி:வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவமதிக்கும் வகையில் நடிகர் கமலஹாசன் இயக்கி தயாரித்துள்ள  ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக தடை
விதித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய மீடியா கவுன்சில்(என்.எம்.சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 24-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தடபுடலான சடங்குகளுடன் இத்திரைப்படம் வெளியாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இத்திரைப்படத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் அரசின் காதுகளுக்கு எட்டியதை தொடர்ந்து தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

Friday, February 1, 2013

இந்தியாவின் புதியதோர் வரலாற்று புரட்சியை SDPI ஏற்படுத்தும்- மதுரை மாவட்ட மாநாட்டில் தேசிய செயலாளர்


எஸ்.டி.பி.ஐ (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) கட்சியின் மதுரை மாவட்டத்தின் சார்பாக மாபெரும் அரசியல் எழுச்சி மாநாடு நே(27.01.2013) மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெற்றது.
 துவக்கமாக பேரணியும் அதனை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது.மாநில பொதுச்செயலாளர் B.S.அப்துல் ஹமீது கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டு பொதுக்கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் M. ஜாபர் சுல்தான் தலைமை தாங்கினார். மாவட்டபொதுச்செயலாளர் A.முஜீபுர் ரஹ்மான் வரவேற்றார்.

டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் விஸ்வரூபத்தை தடை செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் உள்ளிட்ட அமைப்புகள் மனு


டெல்லி மாநில ஆளுநரின் தனி செயலாளரிடம் மனு அளித்த பொழுது 

 நடிகர் கமல் காசன் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் தமிழ்,தெலுங்கு ,ஹிந்தி போன்ற மொழிகளில்  வெளிவந்துள்ளது மேலும் அதன் படம் டெல்லி உள்பட பல பகுதிகளில் வர இருக்கிறது .இந்த திரைப்படம் முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படும்படி அமைக்கப்பட்டுள்ளது படம் வெளிவந்தால் சமுக ஒற்றுமை சீர்குலையும் அதனால் இதனால்  விஸ்வரூபம் ஹிந்தி மொழி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், டெல்லி லெஃப்டினண்ட் கவர்னர் தேஜேந்திர கன்னா  ஆகியோரிடம் முதல் கட்டமாக மூவ்மெண்ட் ஃபார் சிவில் ரைட்ஸ் அமைப்புகளின் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Dua For Gaza