Tuesday, December 4, 2012

ரிஹாப் சார்பாக வாலிநோக்கத்தில் நடைபெற்ற டெங்கு பரிசோதனை மற்றும் நோய்த் தடுப்பு மருந்து வழங்கும் முகாம்



ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக தத்தெடுக்கப்பட்ட வாலிநோக்கம் கிராமத்தில் டெங்கு பரிசோதனை மற்றும் நோய்த் தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 01.12.2012 அன்று காலை 10.30 மணியளவில் மீனவர் காலணியில் உள்ள ரிஹாப் சமுதாயக் கூடத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் டெங்கு விழிப்புணர்வு , இரத்தப் பிரிவு கண்டறிதல் , நிலவேம்பு கசாயம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஹபீப் நவாஸ் தலைமை தாங்கினார் .

பாபர் மஸ்ஜித் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் SDPI யில் இணைந்தனர்.


 நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் SDPI சார்பாக பாபர் மசூதி இடிப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் பிற கட்சியினர் SDPI யில் இணையும் விழாவும் 2.12. 2012 அன்று மாலை 7 :30 மணிக்கு தொடங்கியது .
கூட்டத்திற்கு நகரத் தலைவர் மின்னதுல்லாஹ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ஜிந்தா வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணை தலைவர், அம்பை தாவுத், நாசிர் கான், சாகுல் ஹமீது உஸ்மான் ஆகியோர் அறிமுக உரை நிகழ்த்தினர். மாவட்ட செயலாளர் பாலை ஹயாத், ஏர்வாடி ஹபிப் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மாநில செயலாளர் K.S.செய்யது இப்ராஹீம் பாபர் மசூதியின் வரலாறு குறித்து சிறப்புரையாற்றினார். SDPI மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி SDPI பணிகள், பாபரி வரலாறு, முஸ்லிம்கள் செய்ய வேண்டியது குறித்து சிறப்புரையாற்றினார். பாலை தொகுதி தலைவர் அப்துல் ஹமீது நன்றி கூறினார்.

Monday, December 3, 2012

கோவையில் சிறைவாசி அபுதாஹீரை விடுதலை செய்ய வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் பங்கேற்பு


கோவை : நவ – 30,2012 , கோவையில் மரணப்படுக்கையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசி அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்திட வேண்டி வலியுறுத்தியும் கோவையில் அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடந்தது. இதில் 3000 க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் .

கோவை மத்திய சிறையில் 15 ஆண்டு காலமாக சிறைவாசத்தை அனுபவித்து வரும் அபுதாஹீர் கடந்த 5 ஆண்டுகளாக SLE (Syetemic Lupus Erythematosus) எனும் அறிய வகை நோயால் தாக்கப்பட்டுள்ளார். இதன் கொடூர தன்மை என்னவெனில் இந்த நோய் இலட்சத்தில் ஒரு நபருக்கு வரக்கூடிய நோய்.இந்த நோய் தாக்கியவரின் ஒவ்வொரு உள் உறுப்புகளையும்செயல் இழக்க செய்து மரணத்தை உண்டாக்கும் கொடிய வகை நோயாகும். இதன் பாதிப்பால் சிறையில் போதிய மருந்து வசதி இன்றி சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றார். இவருக்கு போதிய மருத்துவத்திற்காக இதுவரை கடந்த ஆட்சியில் , அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவின் படி 90 நாட்கள் சிறப்பு அனுமதி பெற்று பரோலில் வெளியே வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இத்தனை ஆண்டு காலமாக நோயின் கடுமையை தாக்குப் பிடித்தார்.

தருமபுரி வன்முறைக்கு எதிரான கருத்தரங்கம் -SDPI மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி பங்கேற்பு!



தர்மபுரி மாவட்டத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடை பெற்ற சாதிய வன்முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டன.தருமபுரி வன்முறைக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் களத்தில் குதித்துள்ள நிலையில் விடுதலைக் குயில்கள் சார்பாக தருமபுரி வன்முறைக்கு எதிரான கருத்தரங்கம் இன்று (01-12-2012 )சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பல்வேறு எழுத்தாளர்களும்,சமூக ஆர்வலர்களும், களத்தில் கண்ட நேரடிக்காட்சிகளை விவரித்தனர். இக்கருத்தரங்கில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,சுப.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி Mஃஅ பீமாராவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன், கவிஞர் ம.மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை நிகழ்த்தினார்கள்.

69% இடஒதுக்கீடு அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதா?

இடஒதுக்கீடு
இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு தமிழகத்தில் மட்டுமே 50 சதவீதத்தை தாண்டி 69 சதவீதம் அமுலில் உள்ளது. 1993ம் ஆண்டு மண்டல் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பினை தொடர்ந்து தமிழகத்தில் அமுலில் இருந்த 69 சதவீதத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் 88 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள் இருக்கும் காரணத்தால் 50 சதவீத இடஒதுக்கீடு போதாது என்று வாதாடப்பட்டது.பின்னர் இவ்வழக்கில் 2010ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் அமுலில் இருந்து வரும் 69 சதவீத இடஒதுக்கீடு மேலும் ஒரு வருடத்திற்கு மட்டும் தொடரலாம் என்றும் மாநில அரசு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான புள்ளி விபரங்களை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

Saturday, December 1, 2012

ஆண் பாவம்.............!


"ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு”
 ”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்” 
"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு" [எதுக்கு?? ஒரு அடிமை சிக்கிட்டான்ன்னா]
”அடடே ஆண்குழந்தையா போயிட்டுபோகுது ஆத்தா 2 பொட்டப்புள்ள இருக்குன்னு நெனச்சேன் இதாவது ஆணா பொறந்துச்சே"

நீங்க ஹைடெக் சிட்டில இருக்குறவரா இருந்தா இந்த வாசகம்லாம் உங்கள் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.... ஆனால் இன்றும் அதிகப்படியாக ஒலிக்கும் வசனங்கள் தான் இவையெல்ல்லாம்... ஒரு குழந்தை பிறந்தா அது பெண்ணாக இருக்க கூடாது என்பது இவர்களின் முதன்மை எண்ணம்... பொட்டப்புள்ளையா பொறந்தா எம்பூட்டு நல்லதுன்னு இவுகளுக்கென்ன தெரியும். அண்ணாவோடது தம்பியோடது அப்பாவோடது என எல்லா சொத்துக்களிலும் பங்கு வந்துருமுல்ல? பல அம்மாக்கள் சுரண்டியாவது கொடுத்திடமாட்டாங்க :-)

அஸ்ஸாம் கலவர பூமியில் என்.சி.ஹெச்.ஆர்.ஒ குழு!

nchro
குவஹாத்தி:அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கொக்ராஜர், சிராங் மாவட்டங்களில் மனித உரிமை அமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் குழுவினர் பார்வையிட்டனர்.
என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் தேசிய செயலாளர் ரெனி ஐலின், செயற்குழு உறுப்பினர்களான பேராசிரியர் அ.மார்க்ஸ், ஜி.சுகுமாரன், அஸ்ஸாம் மாநில கமிட்டி உறுப்பினர் அன்ஸாரி ஆகியோர் அடங்கிய குழுவினர் கொக்ராஜர், சிராங் மாவட்டங்களில் உள்ள கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 14 அகதிகள் முகாம்களுக்கு சென்றனர்.

மும்பை 7/11 குண்டுவெடிப்பு : போலீஸ் மீது நீதிபதி சரமாரி வசை ; எருமை மாட்டின் மீது மழை!


 மும்பை 7/11 புறநகர் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில், அப்பாவிகளை சிக்கவைத்துள்ள போலீசின் தவறுகளை "மோப்பம்" பிடித்துவிட்டதாக தெரிவித்த நீதிபதி "அபை தப்சே" நீதிமன்றத்தின் "சந்தேகம்" உறுதியாகிவிட்டால், "கடுமையான தீர்ப்பு" வழங்கப்படும்,என்று எச்சரித்தார்.
இந்த வழக்கில் போலீசின் "தகிடு தத்தங்"களின் விவரமாவது:
மும்பை லோக்கல் ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் "தொலைபேசி உரையாடல்"களை முக்கிய ஆதாரமாக சொல்லப்பட்டு, அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், குண்டுவெடிப்பின்போது சம்பவ இடத்தில் இருந்ததாகவும், அவர்கள் தங்களுக்கிடையில் பேசிக்கொண்டதாகவும் "புலனாய்வுத்துறை" கூறியிருந்தது.

தினமலர் என்னும் தரம்கெட்ட உலகமகாபொய்யர்கள்!


ஏன் திடீரென தினமலர் பற்றி? தினமலரைப் பற்றி மட்டும்தான் எப்போதுமே எழுதலாம்! ஏனெனில் தினம் தினம் ஏதாவது விஷத்தை கக்கும் கேவலத்தை செய்வது தினமலர் மட்டுமே. கட்டுரையின் இறுதியில் வைகோவைப் பற்றிய தினமலரின் சேட்டையைக் குறிப்பிட்டுள்ளேன். அதற்குமுன் கீழே தினமலரின் பொறுக்கித்தனங்களுக்கு வகைக்கு ஒன்றாக உதாரணங்கள் கொடுத்துள்ளேன்.

பல வருடங்களுக்கு முன், வாஜ்பாய் இந்தியப் பிரதமராகவும், முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராகவும் இருந்த காலகட்டம் அது. அப்போது ஐ.நாவில் பல்வேறு நாடுகள் பங்கேற்ற ஒரு மிக முக்கியமான மாநாட்டைப் பற்றி தினமலர் இப்படி செய்தி வெளியிட்டது, " மாநாட்டில் வாஜ்பாய் முஷாரஃப் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமன்றி உலகமே இரு நாடுகளின் சிதைந்து கொண்டிருக்கும் உறவை பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போது தினமலர் ஏதோ இருநாட்டு பிரதிநிதிகளையும் 'நாய்' போல சித்தரித்து 'உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என செய்தி வெளியிட்டிருந்தது. முதன்முதலில் தினமலர் என்ற செய்தித்தாள், மேஜை துடைக்கக்கூட லாயக்கில்லாத காகிதமாகப் பட்டது அன்றுதான். பத்திரிக்கை என்றால் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு தினமலர் மட்டுமே சரியான உதாரணம். 

சட்டப்படி ஆட்சி நடக்கும் நாடுகள், இந்தியாவுக்கு 78வது இடம்


உலகில் நீதி நிர்வாக முறையில் சட்டத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெறும் நாடுகளில் இந்தியா 78ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கைக்கு 8ம் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.உலக நீதி நிர்வாக திட்டம் என்ற அமைப்பு, உத்தரவாதமான அனைத்து சிவில் நிர்வாக வாய்ப்புகள் தொடர்பாக 97 நாடுகளில் ஆய்வு நடத்தி “சட்டத்தின் ஆட்சிக் குறியீடு-2012′ என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
சுதந்திரமான நீதிமுறை, பேச்சுரிமையைப் பாதுகாப்பது, வெளிப்படையான அரசாங்கம் இவற்றில் இந்தியா உலகளவில் 50ஆவது இடத்திலும், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் 4-வது இடத்திலும் உள்ளது.இந்தியாவில் நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இந்த விஷயத்தில் 79ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவு மக்களுக்கும் எல்லாவிதமான உரிமைகளும் கிடைக்கும் வாய்ப்புள்ள நாடுகளில் இந்தியா 78ஆவது இடத்தில் உள்ளது.

Dua For Gaza