பீஜிங்:சீனாவில், "ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என, அந்நாட்டின் மேம்பாட்டு ஆய்வு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. ஜனத்தொகையை கட்டுப்படுத்த, அந்நாட்டில் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும், என்ற சட்டம் அமலில் உள்ளது.இது குறித்து, சீன மேம்பாட்டு ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
Saturday, November 3, 2012
வேண்டாம் போபால் : கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு குவியும் சர்வதேச ஆதரவு!
சர்வதேச கல்வியாளரும் அரசியல் விமர்சகருமான அமெரிக்காவை சார்ந்த நோம் சோம்ஸ்கி கூடங்குள அணு உலையை எதிர்த்து போராடும் மக்களுக்கு அனுப்பியுள்ள மடலில் கூடங்குளம் என்பது காத்திருப்பில் உள்ள போபால் பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அம்மடலில் அணு சக்தி என்பது ஆபத்தான முன்னுதாரணம் என்றும் போபால் போன்ற தொழிற்சாலை பேரழிவுகள் நடந்துள்ள நாடான இந்தியாவில் மேலும் ஆபத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? நவ-4 மதுரை மண்டல மாநாடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் அறிக்கை
மதுரை (நவம்பர் 2 , 2012 ) : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அதிகாரமையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம் நீதிக்கான முழக்கம் என்ற தலைப்பில் வருகின்ற நவம்பர் 4ம் தேதி மதுரை,சென்னை ஆகிய இடங்களில் மண்டல மாநாடுகள் நடைபெறுகின்றன. மக்களை சந்திப்போம்! உண்மையை சொல்வோம்! என்ற முழக்கத்துடன் இம்மாநாடுகள் நடைபெறுகின்றன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒடுக்கப்பட்ட சமூகங்களை கல்வி, சமூக மேம்பாடு என அனைத்து தளங்களிலும் சக்திப்படுத்த ஜனநாயக வழிமுறைகளில் போராடும் தேசிய அளவிலான ஒரு மக்கள் பேரியக்கமாகும். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சக்திபெறுவதை விரும்பாத ஆதிக்க சக்திகள் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக பல அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். உளவுத்துறையிலும், காவல்துறையிலும் உள்ள ஒரு சில வகுப்புவாத சிந்தனையுடைய அதிகாரிகளும், ஒரு சில ஊடகங்களும் இத்தகைய வதந்திகளை பரப்புவதில் தனி அக்கறை காட்டிவருகின்றனர். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான உரிமைப் போராட்டங்களை சீர்குலைக்கின்றனர். அவதூறுப் பிரச்சாரங்களின் நோக்கம், ஒடுக்கப்பட்ட பிரிவினரை சக்திப்படுத்துவதற்காக பாடுபடும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான சூழ்ச்சியாகும். இது அரசியல் சாசனம் கூறும் மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங்களை மறுப்பதாகும்.
அமெரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியை நோக்கி பயணிக்கிறது!
வாஷிங்டன்:ஒரு லட்சம் கோடி டாலர் கடனாளியான அமெரிக்கா, விரைவாக துயரத்தை நோக்கி பயணிப்பதாக 1992 மற்றும் 1996-ஆம் ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரோஸ் பெரோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்டோல் ஸாரா கார்ப்பரேசன் என்ற மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனத்தின் உரிமையாளரான பெரோ அமெரிக்க அதிபர் தேர்தல்களில் டெமோக்ரேடிக் மற்றும் ரிபப்ளிக் வேட்பாளர்களுக்கு கடுமையான சவாலை எழுப்பியவர்.அவர் கூறுகையில், நான்காவது ஆண்டாக அமெரிக்காவின் கடன் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
லேபிள்கள்:
உலகம்
Thursday, November 1, 2012
மோடியின் குற்றத்தை மறைக்கும் ஒளிரும் குஜராத்!-ஆனந்த் தெல்டும்டே!!
குஜராத்தில் முஸ்லிம் மக்கள் எவ்வாறு இந்துத்துவ சக்திகளால் தேர்ந்த திட்டமிடலுடன் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் 2002 -ஆம் ஆண்டு கொன்றழிக்கப்பட்டார்கள் என்பதை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு.
சற்று அதனை நினைத்துப் பார்க்கும் போதே எனக்கு முதுகுத்தண்டு சில்லிடுகின்றது. குஜராத்தில் முசுலிம் மக்கள் எவ்வாறு இந்துத்துவ சக்திகளால் தேர்ந்த திட்டமிடலுடன் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் 2002 -ஆம் ஆண்டு கொன்றழிக்கப்பட்டார்கள் என்பதை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அது 2002 -ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 4 -ஆம் தேதி. இனப்படுகொலைகள் தொடங்கி 5 நாட்கள் ஆகியிருந்தது. குஜராத்திலிருந்து வந்து கொண்டிருந்த ரத்தம் தோய்ந்த கதைகள் எவர் ஒருவரையும் போலவே என்னையும் கலக்கமுறச் செய்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் ஒரு மனித உரிமைச் செயல்பாட்டாளனுக்கு இருக்க வேண்டிய துணிச்சலுடன் நான் அகமதாபாத் விரைந்தேன். அகமதாபாத், நான் ‘ இந்திய மேலாண்மைக் கழகத்தில்’ படித்த காலத்தில் என் நேசத்துக்குரிய நகரமாக இருந்தது.
லேபிள்கள்:
இந்தியா
பிரபல கடத்தல் தலைவர் பொறியில் சிக்கினார்! தகவல் கொடுத்தவருக்கு $660,000 பரிசு!!
கொலம்பியா நாட்டு பிரபல கடத்தல் குழுவின் தலைவரை பொறி வைத்துப் பிடித்துள்ளது, ஆஜென்டீனா நாட்டு போலீஸ். இவரை பற்றி தகவல் கொடுத்த ‘முகம் தெரியாத’ நபர், $660,000 பரிசுப் பணம் பெறுகிறார்.
கடத்தல் குழுவின் தலைவர், ஆஜென்டீனா நாட்டின் பொனஸ் ஏரிஸ் நகரின் ரெஸ்ட்டாரென்ட் ஒன்றில் உணவு உண்ண டேபிள் ரிசர்வ் பண்ணியுள்ளார் என்று கிடைத்த ரகசிய தகவலையடுத்து, ரெஸ்ட்டாரென்ட் பார்க்கிங் லாட்டில் காத்திருந்த போலீஸ் அதிரடிப் படையினர் அவரை சுற்றி வளைத்துப் பிடித்து, கைது செய்தனர்.
லேபிள்கள்:
உலகம்
சவூதி: மின்சாரம் தாக்கி 27 பேர் பலி
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அல்ஹஸா – தம்மாம் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள அப்கைக் - அயின்தார் கிராமத்தில் செவ்வாய்கிழமை அன்று மாலை ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக மண்டபத்திற்குள் சென்ற உயர் அழுத்த மின்சார இழை கீழே விழுந்து தீப்பொறி ஏற்பட்டது.
அந்த மின்சார இழை திருமண மண்டபத்தின் வாயிலில் உள்ள ஒரு இரும்பு கதவின் மீது விழுந்து, அதனருகில் நின்றவர்கள் அந்த கதவைத் தொட்டதும் பட்டாசு வெடித்தது போன்று படபடவென சத்தம் எழுந்தது. கதவு வழியாக மின்சாரம் பாய்ந்ததால், கதவைத் தொட்ட பலரும் இறந்தது தெரியவந்துள்ளது.
லேபிள்கள்:
உலகம்
இராமநாதபுரத்தில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் .நடவடிக்கை எடுக்குமாறு SDPI மாநில தலைவர் கோரிக்கை
நேற்று(30.10.2012) நடைபெற்ற பசும்பொன் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு நடந்த மோதல் சம்பவங்களும் கலவரங்களும் வருந்தத்தக்கது. கண்டனத்திற்குரியது. இராமநாதபுரம் மாவட்டத்திலும் இதர மாவட்டங்களிலும் கலவரம் பரவாமல் தடுக்க உரிய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
அதே சமயம் நடைபெற்ற சாதிக்கலவரத்தை மதக்கலவரமாக -இந்து முஸ்லிம் பிரச்சனையாக மாற்றும் சதித்திட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ளது.
லேபிள்கள்:
SDPI,
இராமநாதபுரம்,
தமிழகம்
ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் சென்ற படகு மூழ்கியது! – 122 பேரை காணவில்லை!
டாக்கா:பங்களாதேஷ் கடல் எல்லையை ஒட்டிய வங்காள விரிகுடாவில் பயணிகள் படகு மூழ்கியதில் 122 பேர் காணாமல் போயுள்ளனர்.
மியான்மரில் புத்த தீவிரவாதிகள் நடத்தும் கலவரத்தால் புலன்பெயர்ந்து மலேசியாவுக்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் சென்றுக் கொண்டிருந்த படகுதான் மூழ்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.
மீனவ தொழிலாளிகள் மீட்ட ஆறுபேரில் ஒருவர் நடந்த சம்பவத்தை வங்காளதேச கடலோர படையிடம் விவரித்தார். வேலை வாங்கித் தருவதாக கூறி ஆட்களை மலேசியாவுக்கு கொண்டு செல்லும் படகுதான் விபத்தில் சிக்கியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
லேபிள்கள்:
உலகம்
சாண்டி புயல்: அமெரிக்காவில் 50 பேர் பலி - அணுஉலைகள் மூடப்பட்டன
அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதியில் மையம் கொண்டுள்ள சாண்டி புயல், அந்தப் பகுதியில் அமைந்துள்ள நகரங்களை சின்னாபின்னமாக்கி உள்ளது. வடக்கு கரோலினாவில் இருந்து கனெக்டிகட் வரையில் தொலை தொடர்பு வசதிகள் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரங்கள் யாவும் இருளில் மூழ்கின. இதனால் 80 லட்சம் மக்கள் தவிக்கின்றனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள், புகலிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த இயற்கைச் சீற்றத்தால் நியூயார்க், நியூ ஜெர்சி மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள், புகலிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த இயற்கைச் சீற்றத்தால் நியூயார்க், நியூ ஜெர்சி மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
லேபிள்கள்:
உலகம்






