Tuesday, October 2, 2012

இராமநாதபுரத்தில் மதுவுக்கு எதிராக SDPI நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம்!


   இன்று காந்தி பிறந்த தினமான அக்டோபர் -02 ஆம் தேதி தமிழகத்தில் மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை மனித சங்கிலி மூலம் எஸ்.டி.பி.ஐ கட்சி துவங்கியது.
தொடர்ச்சியாக 15 நாட்கள் தமிழக மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரப்பாடல்கள்,நாடகங்கள்,துண்டு பிரசுரம் விநியோகம்,போஸ்டர் பிரச்சாரம்,தெருமுனை கூட்டங்கள்,பொதுக்கூட்டங்கள் என்று தமிழகம் முழுவதும் மக்களுக்கு மதுவின் கொடுமையினை விளக்க எஸ்.டி.பி.ஐ திட்டமிட்டுள்ளது.

சஞ்சீவ்பட்:மோடி அரசின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!

revokes suspension of IPS officer Sanjiv Bhatt
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த காரணத்தால் பழிவாங்கும் விதமாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மோடி அரசின் உத்தரவை ரத்துச் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில அரசு நேற்று (திங்கள்கிழமை) சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது.
2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பைத் தொடர்ந்து  அவசரமாக கூட்டிய கூட்டத்தில் ஹிந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது கோபத்தை வெளியிட அனுமதிக்கவேண்டும் என்று மோடி உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்  செய்தார்.
இதனைத் தொடர்ந்து மோடி அரசு, சஞ்சீவ் பட்டை பழிவாங்

Monday, October 1, 2012

முதுகுக்கு பின் நாக்கு...!


பொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடையே இருக்கும். பின்பு, வேதாளம் முருங்கை மரத்தில்  ஏறிய கதையாக மறுபடி அதே தவறு நம் வாழ்வில் புகுந்துவிடும். உதாரணத்திற்கு, பொய் பேசுவது!!! "ஆ......இதனால் யாருக்கும் எந்த நஷ்டமுமில்லையே...." என சிறு அளவில் தொடங்கி பெரிய அளவில் கொண்டுபோய் விட்டுவிடும்.

அதுபோலவே, புறம் பேசுவதும் பாவமுமாகும். சும்மா..... அப்பப்ப பேசும்போது யாரைப் பற்றியாவது எந்த விசயத்தையாவது
 பேசுவது. அது உண்மையா.... இல்லையா என்று சற்றும் யோசிக்காமல் பேச்சுவாக்கில் சொல்லிவிடுவது. 

தினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு வராது!

காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ்’ எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது:

மின் தடையால் ஏற்பட்ட வித்தியாசமான பிரச்சனை!


தமிழகத்தில் தொடரும் மின் தடையால் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பட்ட மக்களும் பல்வேறு
இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எப்பொழுது மின்சாரம் வரும் ? எப்பொழுது போகும்? என்பது தெரியாமல் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் சரிவர செய்ய இயலாமல் பெண்களும் மிகவும் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த வகையில் விருது நகரை சேர்ந்த பெண் ஒருவர் மின் வெட்டால் சந்தித்த சற்று வித்தியாசமான பிரச்சனை இது.

ஆஃப்கான்:10 ஆண்டுகளில் 2000 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி!

US military deaths in Afghanistan hit 2000
காபூல்:ஆஃப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கும், தாலிபான் போராளிகளுக்கும் இடையேயான போரில் இதுவரை 2 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாலியாகியுள்ளதாக அமெரிக்க அதிகாரி கூறுகிறார்.
அண்மையில் ஆஃப்கான் பாதுகாப்பு படை வீரரால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல் ஒன்றில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரும், சிவிலியன் காண்ட்ராக்டர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இராமநாதபுரத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துக்களில் இருவர் மரணம்!

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே,  தாமரை ஊரணியை சேர்ந்த மகேஷ்வரன், 23. இவர், அழன்குளத்தை சேர்ந்த தனது நண்பர் ராம்குமாருடன், நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு "ஸ்டார் சிட்டி' பைக்கில் ராமநாதபுரத்திற்கு வந்து விட்டு ஊர் திரும்பினார்( ஹெல்மெட் அணியவில்லை).

நாகாச்சி அருகே, சிறுநீர் கழிப்பதற்காக ரோட்டை விட்டு கீழே இறங்கிய மகேந்திரன் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். உச்சிப்புளி போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கூகுளுக்கு மாற்றீடாக புதிய தேடுதல் பொறியை உருவாக்கும் ஈரான்!

Iran seeks alternatives to Google, Gmail
டெஹ்ரான்:இணையதள தேடுதல் பொறியான கூகுள் மற்றும் அதன் மின்னஞ்சல் சேவையான ஜி-மெயிலுக்கு மாற்றீடாக புதிய இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
ஃபக்ர் என்ற பெயரில் தேடுதல் பொறியையும், ஃபஜ்ர் என்ற பெயரில் மின்னஞ்சல் சேவையையும் துவக்கும் முயற்சியில் ஈரான் உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான திரைபடத்தின் ட்ரைலரை யூ ட்யூபில் இருந்து நீக்கம் செய்ய கூகுள் மறுத்ததை தொடர்ந்து ஜி-மெயிலை ஈரான் முடக்கியது. ஈரானில் 50 சதவீதம் பேர் இணையதளத்தை உபயோகிக்கின்றனர்.

இராமநாதபுரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீயில் கருகி பலி: போலீஸ் விசாரனை!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள என்மனம்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தோப்புவலசை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கள்ளழகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் காளிமுத்து. இவர்களுக்கு காளீஸ்வரி (வயது13), பாலமுருகன் (8), சரண்யா (6), சக்தி (1) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். 

கள்ளழகர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் காளிமுத்துவின் தந்தை கருப்பையா தனது மகளுடன் பாதுகாப்புக்காக வசித்து வந்தார். தோப்புவலசை கிராமத்தில் தனியாக ஒரு பெரிய குடிசை வீடு கட்டி இவர்கள் அதில் வசித்து வந்தனர். 

ஈராக் ஆக்கிரமிப்பை தவிர்த்திருக்கலாம் – கோஃபி அன்னன்!

Annan says Blair could have prevented Iraq war
லண்டன்:பிரிட்டீஷ் பிரதமர் டோனி ப்ளேயர் நினைத்திருந்தால் 2003-ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பை தவிர்த்திருக்கலாம் என்று முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் கூறியுள்ளார். ஐ.நா பொதுச் செயலாளராக பதவி வகித்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட தனது அனுபவங்களைக் குறித்து எழுதிய நூலை வெளியிடுவதை முன்னிட்டு டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார். ஈராக்கை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் இருந்து ஜார்ஜ் w புஷ்ஷை, ப்ளேயர் நினைத்திருந்தால் பின்வாங்கச் செய்திருக்கலாம் என்று அன்னன் கூறினார்.

Dua For Gaza