புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக அதிகாரியின் கார் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யத் அஹ்மத் முஹம்மது காஸ்மியின் சகோதரி மகனான பள்ளிச் சிறுவனை கடத்த முயன்ற டெல்லி ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீசாரின் முயற்சியை ஜாமியா நகர் பொதுமக்கள் முறியடித்தனர். இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Thursday, September 13, 2012
காஸ்மியின் குடும்ப சிறுவனை கடத்த முயன்ற டெல்லி ஸ்பெஷல் ப்ராஞ்ச்: முறியடித்த பொதுமக்கள்!
லேபிள்கள்:
இந்தியா
Tuesday, September 11, 2012
பாலஸ்தீனத்திற்கு 10 மில்லியன் டாலர் நிதி உதவி: இந்தியா அறிவிப்பு
இந்தியா வந்துள்ள பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். அப்போது இருநாட்டு பிரச்சினைகள், பிராந்திய வளர்ச்சித் திட்டங்கள், குறிப்பாக மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளின் வளர்ச்சிகள் பற்றி இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இந்த சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
லேபிள்கள்:
இந்தியா
எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மாபெரும் சாலை மறியல் போராட்டம்
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும்,இடிந்தகரை பகுதியில் இருந்து காவல்துறையினர் உடனடியாக வெளியேற வலியுறுத்தியும்,போராட்டக் குழுவினரோடு முதல்வர் பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியும், கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சி (10-05-2012)மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தியது.
லேபிள்கள்:
தமிழகம்
கூடங்குளம் போலீஸ் அடக்குமுறை: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!
சென்னை:கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின்நிலையத்தில் அணு உலைகளில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்தக்கோரி சுற்றுவட்டார மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் வன்மையாக கண்டித்துள்ளார். அணுமின் சக்தி ஆபத்தானது என்ற கொள்கையில் தமது இயக்கம் உறுதியாக இருப்பதாக அவர் தெளிவுப்படுத்தினார்.
கூடங்குளம் போலீஸ் அடக்குமுறையக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் நிரப்புவதை எதிர்த்து அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மற்றும் கூடங்குளம் மக்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கினர். ஒன்றரை ஆண்டுகாலமாக அந்த பகுதி மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கான காரண காரியங்களை ஆய்வு செய்யாமல் அந்த மக்களின் போராட்டத்தை முடக்குவதற்கான எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொண்ட அரசு இறுதியில் அந்த மக்களின் மீது தடியடி நடத்தியிருப்பதையும், தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகி இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
லேபிள்கள்:
தமிழகம்
மரணத் தண்டனை: ஈராக் துணை அதிபர் நிராகரிப்பு!
அங்காரா:தனக்கு எதிராக பாக்தாத் குற்றவியல் நீதிமன்றம் விதித்துள்ள மரணத் தண்டனையை நிராகரிப்பதாக ஈராக் துணை அதிபர் தாரிக் அல் ஹாஷிமி கூறியுள்ளார். இத்தீர்ப்பு அரசியல் தூண்டுதல் என்று துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அல் ஹாஷிமி தெரிவித்தார்.
லேபிள்கள்:
உலகம்
சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தெருமுனை பிரச்சாரம்!
அரசியல் கட்சிகளின் இலாபங்களுக்காக இந்தியா முழுவதும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்படுவதும் அவர்களுக்கு ஜாமீன் கூட மறுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. அதோடு அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ. (சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) போன்ற காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.
இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுவிக்ககோரி சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பிரச்சாரம் செய்து வருகிறது.
இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுவிக்ககோரி சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பிரச்சாரம் செய்து வருகிறது.
லேபிள்கள்:
புதுவலசை
Monday, September 10, 2012
த சண்டே இந்தியன் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு ஒரு முஸ்லிம் சகோதரனின் கடிதம்
தாங்கள் செப்டம்பர் 16 தேதியிட்ட சண்டே இந்தியன் தமிழ் இதழில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எழுதிய கடிதம் பார்த்து ஓர் அளவு சந்தோசமும் ஓரளவு கவலையும் பட்டுக்கொண்டேன்.ஏநென்றால் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் எந்த பிரச்சனையும் இல்லாதது போலவும் முஸ்லிம்கள்தான் பிரச்சனைகளுக்கும் தீவிரவாதத்திர்க்கும் காரணம் என்பது போலவும் எழுதி வரும் மீடியா உலகில் அதற்க்கு சிறிது மாற்றமாக இந்தியாவில் முஸ்லிம்களும் ஏனய மக்களும் பிரச்சனைகளில் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் கடுமையாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் இருக்கும் சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் ஆதலால் நாம் போராட நாம் கவனம் செலுத்த இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது என்ற அறிவுருத்தலான செய்திகளையும் பார்த்த சமயம் ஓரளவு சந்தோஷ பட்டேன்.
லேபிள்கள்:
கட்டுரை
தூதரக உயர் அதிகாரியாக முதல் சவூதிப் பெண்மணி!
ரியாத்:சவூதி அரேபியா உயர் தூதரக பிரதிநிதியாக பதவியேற்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை மோதி அல் கலஃப் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் சமூக-கலாச்சாரத்துறை துணை அலுவல் அதிகாரியாக மோதி அல் கலஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக-கலாச்சாரத்துறை அதிகாரி முஹம்மது அல் ஈஸா நேற்று மோதி அல் கலஃபின் நியமனம் குறித்த அறிக்கையை வெளியிட்டார். மோதியின் நியமனம் சவூதி அரேபிய பெண்களுக்கு பெருமையை சேர்த்துள்ளது. தூதரக துறையில் கலஃபின் திறமையை கண்டு அவரை தனது உதவியாளராக நியமித்ததாக ஈஸா கூறினார். தனது பதவி நியமனம் குறித்து அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள தனது வீட்டில் இருந்து தொலைபேசி மூலமாக அல் அரேபியா சானலுக்கு அளித்த பேட்டியில், மோதி அல் கலஃப் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார். கலஃபை தவிர 13 சவூதி பெண்கள் அமெரிக்காவில் உள்ள தூதரகத்தில் பணியாற்றுகின்றனர்.
லேபிள்கள்:
உலகம்
கூடங்குளம்:போலீஸ் பயங்கரவாதம் -தெஹ்லான், நெடுமாறன், வேல்முருகன் கண்டனம்!
திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராட்டம் நடத்திய சுற்றுவட்டார மக்கள் மீது அராஜக தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுஅப்பகுதியை கலவரக் காடாக மாற்றியுள்ள தமிழக ஜெயா அரசின் காவல்துறைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
கூடங்குளம் அணு உலையை அப்பகுதியில் அமைக்க அரசு தீர்மானித்ததில் இருந்தே கூடங்குளம் சுற்று வட்டார மக்கள் அதனை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
லேபிள்கள்:
தமிழகம்
Sunday, September 9, 2012
சிவகாசி உயிரிழப்பு – படிப்பினை என்ன?
கொளுந்துவிட்டு எறிந்த கட்டிடங்கள்; சிதறி நொறுங்கி கருகி தரைமட்டமாகி கிடக்கின்றன. தீயின் கோர பிடிக்குள் சிக்கி, வெடித்து சிதறிய வெடி மருந்துகளுடன் பிய்த்து எறியப்பட்ட மனித உடல்களும் உறுப்புகளும் சிதறிக் கிடக்கின்றன. குட்டி ஜப்பான் என்று சொல்லப்படும் சிவகாசியில் தான் இந்த கொடூரம் அரங்கேறியது.
தமிழ் நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகில் முதலிப்பட்டி என்ற ஊரில் ஓம்சக்தி ஃபயர் ஒர்க்ஸ் என்கிற பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 38 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 50 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
லேபிள்கள்:
கட்டுரை



