Friday, September 7, 2012

ஐரோப்பா பெண்கள் பெற்றிருப்பது சுதந்திரமா?


சமீபத்தில் இணையச் செய்தி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில் இஸ்லாமும் மற்ற மதங்களைப் போலவே பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது என்று மக்கள் கலை இலக்கியக் குழவைச் சேர்ந்த நண்பர்கள் விமர்சனம் எழுதி இருந்தார்கள்.

அவர்களது விமர்சனத்திற்குப் பதில் கூறுமுகமாகவும், இஸ்லாத்தில் உள்ள பெண்களின் உரிமைகள் பற்றியும், அந்த உரிமைகள் யாவும் அவர்கள் கேட்டுப் பெற்றதோ அல்லது போராடிப் பெற்றதோ அல்ல என்றும், ஆனால் 1400 வருடங்களாக இன்னும் சொல்லப் போனால், பெண்களை இன்னும் போகப் பொருளாகவும், கடைச்சரக்காகவும், பண்டமாற்றைப் போலவும் அவர்களை நடத்தி வரும் சமூகங்களுக்கு மத்தியில் இஸ்லாம் அவர்களை எந்தளவு கண்ணியமான இடத்தில் வைத்துள்ளது என்பது புரிய வரும். இஸ்லாம் அவர்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் யாவும், அவர்களின் பெண்மைக்கு இயைந்த மற்றும் பாதுகாப்பு என்ற நிலையிலே அல்லாது, அவர்கள் பெண்கள் என்ற காரணத்திற்காக என்றுமே அவர்களை தாழ்த்தி வைத்ததில்லை மற்றும் அடக்கி வைத்ததில்லை என்பதை சகோதரர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுரையைத் தருகின்றோம்.

உளவாளிகளின் மர்ம உலகம் – 4!


அத்தியாயம் 4
இஸ்ரேலில் மொசாத் தலைமையகம் பணயக் கைதிகளை விடுவிக்கும் அதிரடித் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கென்யாவுக்குள் முதன்முதலில் போய் இறங்கிய ஆறு மொசாத் உளவாளிகளும் என்ன செய்தார்கள் என்பதைப் பார்க்கலாமா?

மொசாத்தின் திறமைசாலிகளான உளவாளிகள் எனத் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட இந்த ஆறு பேரில் இரண்டுபேர், விமானங்களையும் செலுத்தக் கூடியவர்கள்.இந்த இருவரும் களத்தில் இறங்கினார்கள்.

''இஸ்லாம்தான் இறுதியான தீர்வு'' - தானியல் ஸ்ட்ரீக்.


 சுவிட்சர்லாந்து நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் தானியல் ஸ்ட்ரீக் - Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக சென்ற மாதம் செய்திகள் வெளிவந்தன. இப்போது அவர் நேரடியாக சுவிட்சர்லாந்து அரச தொலை காட்சியில் தோன்றி, தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

Thursday, September 6, 2012

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து..! மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நிவாரணப்பணியில் பாப்புலர் ப்ரண்ட்...


மதுரை : 05-09-2012 இன்று மாலை சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்து தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இவ்விபத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்தில் காயமடைந்த மக்கள் மதுரை,விருதுநகர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் ,அவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றது போன்ற பணிகளில் பாப்புலர் ப்ரண்ட் ஈடுபட்டது.

வரலாற்றில் இருந்து பஸார் பாடம் படிக்கட்டு​ம் – முஹம்மது முர்ஸி!

Bashar must learn from 'history' says Morsi
கெய்ரோ:சிரியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ள சூழலில் அதனைப் புரிந்துகொண்டு தனது பதவியை ராஜினாமாச் செய்யுமாறு சர்வாதிகாரி பஸாருல் ஆஸாத்தை எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி வலியுறுத்தியுள்ளார்.
கெய்ரோவில் உள்ள இண்டர்நேசனல் யூனிவர்சிடி தலைமையகத்தில் நடந்த அரபு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர்.
அப்பொழுது அவர் கூறியது:  “துனீசியா, லிபியா, எகிப்து, யெமன் போன்ற நாடுகளின் சமீபகால வரலாற்றில் இருந்து பஸ்ஸார் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அடக்குமுறையாளர்களும்,  ஊழல்வாதிகளுமான ஆட்சியாளர்களை அதிகாரத்தில் இருந்து கீழே இறக்கிய அரபு வசந்தத்தைக் குறித்து புரிந்துக் கொள்ள பஸார் தயாராக வேண்டும். பிரச்சனை மேலும் சிக்கலாகும் முன்பு அவர் பதவி விலக வேண்டும்.

உளவாளிகளின் மர்ம உலகம் – 3!


அத்தியாயம் 3

தீவிரவாதிகள் விமானக் கடத்தல் மூலம் இஸ்ரேலியப் பணயக் கைதிகளை உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி, அப்போது உலகெங்கும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது.

இந்த விவகாரம், கென்யாவுக்கும் நன்றாகவே தெரியும். அத்துடன் இஸ்ரேலிய உளவுத்துறை பணயக் கைதிகளை மீட்க அதிரடியாக ஏதோ செய்யப்போகின்றது என்ற விபரமும், கென்யாவுக்கு மேலதிகமாகத் தெரியும்.
அப்படியான சூழ்நிலையில் இஸ்ரேலிய விமானம் ஒன்று கென்யாவில் எரிபொருள் நிரப்ப அனுமதி கேட்கின்றது!

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல,மிகத் தெளிவாகபுரியக்கூடிய விடயம் இது. இஸ்ரேலிய விமானம் வருவது, பணயக் கைதிகளை மீட்கும் ரகசிய ஆபரேஷன் என்பதை கென்யா ஊகித்திருந்தது.

ஆனால் என்ன விஷயம் என்று சரியாகத் தெரியாமல், தமது நாட்டு விமான நிலையத்தை இதற்கு உபயோகிப்பதற்கு விட கென்யா விரும்பவில்லை. அதனால்தான் துருவித் துருவி விபரங்களைக் கேட்டது கென்யா.
டேவிட் கிம்சீ, மொசாத்தின் தலைவருடன் கலந்து ஆலோசித்தார்.

ஹிஜாப்: தன்னம்பிக்கையின் அடையாளம்!


இஸ்லாமிய ஆடை அடையாளம் பயங்கரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படும் காலக்கட்டத்தில் அதே ஆடையை அணிந்த பெண்மணி புரட்சியின் சின்னமாக புகழாரம் சூட்டப்பட்டு பிரபல டைம் மாத இதழின் “பர்ஸன் ஆஃப் த இயரில்” ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். உலகில் மிகப்பெரிய கெளரவ விருதாக கருதப்படும் நோபல் பரிசை வாங்க ஹிஜாப் அணிந்த பெண்மணி மேடையில் தோன்றுகிறார். தவக்குல் கர்மான்,  யுவான் ரிட்லி,  இன்க்ரிட் மாட்ஸன்,  நஜ்லா அலி மஹ்மூத்,  ஃபத்திமா நபீல், அஸ்மா மஃபூஸ், கமலா சுரய்யா என தொடர்கிறது ஹிஜாப் அணிந்த புரட்சி பெண்மணிகளின் எண்ணிக்கை…
மர்வா அல் ஸெர்பினி – ஹிஜாபிற்காக நவீன சுமைய்யாவாக மாறி தனது உயிரை தியாகம் செய்தவர். 2009- ஆண்டு இஸ்லாமிய ஃபோபியா வளர்த்துவிட்ட கொடியவன் ஒருவனால் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்படடார். பிரான்சு உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் முகத்தை மறைக்கும் வகையிலான நிகாபிற்கு தடைவிதித்துள்ளன.
இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 4,  2012 ஹிஜாப் தினமாக நம்மை கடந்து செல்கிறது. சர்வதேச ஹிஜாப் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் தினமாக செப்.4-ஆம் தேதியை அறிவிக்க காரணம் பிரான்சு நாட்டில் 2002 ஆம் ஆண்டு இதே தினத்தில் பள்ளிக்கூடங்களில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. உலகில் முதன்முறையாக ஹிஜாபிற்கு
தடை விதிக்கப்பட்ட நாட்டில் தான் ஹிஜாப் அணிந்த பெண்மணிக்கு அதிகாரப் பூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Wednesday, September 5, 2012

இலங்கை:முஸ்லிம் வீடுகள் தீக்கிரை – கடற்படையினரின் அட்டூழியம்!

CA20FZ8W
கொழும்பு:இலங்கையின் வடமேற்கே மன்னார் முஸலி பகுதியில் உள்ள தீவில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தின் பின்னணியில் இலங்கை கடற்படையினர் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இலங்கையின் வடமேற்கே மன்னார் முஸலி பகுதியில் மறிச்சுக்கட்டி மரைக்காயர் தீவில் வசித்து வரும் முஸ்லிம் மக்களின் குடியிருப்புகள் கடந்த திங்கள்கிழமை இரவு சேதப்படுத்தப்பட்டன. இரவு 7 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் 21 வீடுகளை கடற்படையினர் கழற்றி தம்முடன் எடுத்துச் சென்றிருப்பதாகவும், 4 வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.

உளவாளிகளின் மர்ம உலகம் – 2!


அத்தியாயம் 2

“மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விடுங்கள். மொசாத்தால், அதிரடியாக ஒரு ஒப்பரேஷனை நிச்சயம் செய்ய முடியும். கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பணயக் கைதிகளையும் மீட்க முடியும்.” மொசாத்தின் தலைவர் இவ்வாறு கூறிவிட, இறுதியில் இஸ்ரேலியப் பிரதமர் அந்த உறுதிமொழியைக் கொடுத்தார்.
“இந்த அதிரடி நடவடிக்கையில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது. மொசாத் சுதந்திரமாகச் செயற்படலாம்”

மொசாத் களத்தில் இறங்கியது!

இதில் மொசாத்துக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், கடத்தப்பட்ட விமானம் தரையிறங்கியிருக்கும் இடம்!
அது உகண்டா.

Tuesday, September 4, 2012

சேது சமுத்திரம்:மத்திய அரசுக்கு மேலும் 6 வார கால அவகாசம்!

sethusamudaram
புதுடெல்லி:தமிழகத்தை வளப்படுத்தும் சேதுசமுத்திர கால்வாய் திட்டம் தொடர்பாக சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சோரியின் அறிக்கை மீதான தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மேலும் 6 வார கால அவகாசம் அளித்துள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி அதற்கு  தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனக்கூறி சிலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2007-ம் ஆண்டில் சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது.

Dua For Gaza