Tuesday, September 4, 2012

உளவாளிகளின் மர்ம உலகம் – 1


அத்தியாயம் 1

ஜூன் மாதம் 27ம் திகதி 1976ம் ஆண்டு. பாரிஸ் விமான நிலையம். சர்வதேசப் புறப்பாடுகள் பகுதி.
எயார் பிரான்ஸின் செக்இன் கவுண்டர்களில் வரிசைவரிசையாக பயணிகள் நின்றிருந்தார்கள். இஸ்ரேலின் டெல்-அவிவ் நகருக்குச் செல்லும் விமானத்துக்கான பயணிகளை செக்இன் செய்துகொண்டிருந்தார்கள் எயார் பிரான்ஸின் விமான நிலைய ஊழியர்கள்.

வழமையாக எந்தவொரு விமானமும் எந்த நாட்டுக்குப் போகின்றது என்பதைப் பொறுத்து அந்த நாட்டவர்கள்தான் பயணிகளின் எண்ணிக்கையில் பெரிய சதவிகிதம் இருப்பார்கள்.

இளவரசி கேட் உடன் கை குலுக்க மறுத்த ஈரானிய வீரர்!

பிரிட்டனில் நடைபெறும் பராலிம்பிக்ஸ் வழளையாட்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர், பதக்கம் வழங்கிய இளவரசி கேட்டின் கைகளை தொட்டுக் குலுக்க மறுத்த விவகாரம்தான், இப்போது பிரிட்டனில் ஹாட் டாபிக். பிரிட்டிஷ் பத்திரிகைகளில் இருந்து, டி.வி. சேனல்கள் வரை இது பற்றியே பேச்சு.


விளையாட்டு வீரர், 80,000 பார்வையாளர்கள் முன்னிலையில், குறிப்பிட்ட இளவரசியை அவமானப்படுத்தி விட்டார் என்ற கோணத்தில்கூட விவாதங்கள் நடக்கின்றன.
வெள்ளிப் பதக்கம் வென்றவர், ஈரானிய விளையாட்டு வீரர் மெஹ்ர்டாட் கரம் ஸாடீ.

Monday, September 3, 2012

தவறிய அழைப்புகளும்,தடுமாறும் வாழ்க்கையும்!

Missed call.
மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். வலையில் சிக்குவதை கண்டு எங்கோ ஓரிடத்தில் மிஸ்டுகால்களை தொடுத்த சூத்திரதாரி மறைந்திருந்து ரசிக்க துவங்குகிறான்.
உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

புஷ், டோனி ப்ளேயர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவேண்டும் – ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுட்டூ!

Desmond Tutu wants Blair, Bush arraigned at ICC over Iraqi war
லண்டன்:ஈராக்கின் மீது போரை திணித்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் w புஷ் மற்றும் பிரிட்டீஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பிரபல சமூக ஆர்வலருமான ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுட்டூ கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டனில் இருந்து வெளியாகும் அப்ஸர்வர் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் புஷ் மற்றும் பிளேயர் மீது கடுமையாக விமர்சித்துள்ளார்.

நரோடா பாட்டியா தீர்ப்பு: நீதிமன்றம் விடுவித்தவர்களுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடுச் செய்ய எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

இ.அபூபக்கர்
புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது பெண்கள்,  குழந்தைகள் உள்பட97 முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தவர்களுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடுச் செய்யவேண்டும் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டிஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
“குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கியுள்ள சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நீதி கிடைப்பதற்காக போராடிய தீஸ்தா ஸெடல்வாட் உள்ளிட்டோரை பாராட்டுகிறோம். இத்தீர்ப்பு நாட்டின் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கச் செய்துள்ளது. வழக்கமாக கலவர வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவது இல்லை. முதன் முறையாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு சிறப்பாக செயல்பட்டதால் இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Sunday, September 2, 2012

முகமூடிக்குள்ளே இருக்கும் உங்களுடைய உண்மையான முகத்தை எப்பொழுதாவது பார்த்ததுண்டா? – மோடிக்கு சஞ்சீவ் பட் திறந்த கடிதம்!

Sanjeev Bhatt writes open letter to Narendra Modi
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து அம்மாநில முன்னாள் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலையில் 32 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மோடிக்கு எதிராக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ததால் பழிவாங்கப்பட்ட சஞ்சீவ் பட் அவரை விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார்.
“தங்களுக்கு வலதுகரமாக செயல்பட்ட மாயா கோட்னானி,  பாபு பஜ்ரங்கி,  தவறாக கருத்தரித்த ஹிந்துத்துவா கொள்கையால் தவறாக வழிநடத்தப்பட்ட உங்களது ஹிந்துத்துவா காலாட் படையினர் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது  உங்களுக்கு தெரியுமா?” என்று சஞ்சீவ் பட் கேள்வி எழுப்புகிறார்.

பெங்களூர் to ஹைதராபாத்: ஊடகங்கள் பரப்பும் பயங்கர கற்பனை கதைகள்: பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் தவிக்கும் பெற்றோர்கள்!

பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் தவிக்கும் பெற்றோர்கள்!
பெங்களூர்:அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்பட சமூகத்தில் பிரமுகர்களை கொலைச் செய்ய திட்டமிட்டதாகவும்,  சர்வதேச அளவில் செயல்படும் போராளி இயக்கங்களைச் சார்ந்தவர்கள் என்றும் ஊடகங்களில் தங்கள் பிள்ளைகளை குறித்து வெளியாகும் பயங்கரமான கற்பனை கதைகளால் நெஞ்சுருகியும், பிள்ளைகளை காணவில்லையே! என்ற ஏக்கத்திலும் கடந்த சில தினங்களாக பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.
புதன்கிழமை காலையில் சாதாரண உடையில் வந்த போலீஸார்,  ஒரு காரணமும் கூறாமல் பிடித்துச் சென்ற தங்களது மகன்கள் குறித்த தகவல் சனிக்கிழமை மாலை வரை பெற்றோருக்கு கிடைக்கவில்லை.

Saturday, September 1, 2012

ஹிஜாப் என்னுடைய அணிகலன்! மும்பையில் ஒரு ’நிகாப்’ புரட்சி!

afreen
மும்பையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நின்று முனிசிபாலிட்டியின் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்து செல்வதில் ஒரு நிகாப அணிந்த சகோதரிக்கும் பங்குண்டு என்றால்...மிகை என்ன... மிக மிக மிகைதான் இல்லையா.


18 வயதிலேயே இஸ்லாத்திற்கு வந்ததோடல்லாமல் திருமணத்திற்கு பின் சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டு வரவும் மக்கள் பிரட்சினைக்காக பாடுபடவும் வேண்டும் என்றதும் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடும் இடத்தில் அக்கறையை மட்டும் மையமாக கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறார், சகோ.ஆஃப்ரீன். 

ரேய்ச்சல் கொலை வழக்கில் தீர்ப்பிற்கு ஐ.நா கண்டனம்!

Rachel Corrie verdict upsets U.N.
ஐ.நா:அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் ரேய்ச்சல் கோரியின் கொலையில் இஸ்ரேல் ராணுவத்திற்கு பங்கில்லை என்று கூறிய நீதிமன்ற தீர்ப்பை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. இத்தீர்ப்பின் மூலம் நீதி குழித் தோண்டி புதைக்கப்பட்டதாக ஃபலஸ்தீனில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பிரதிநிதி ரிச்சார்ட் ஃபாக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
2003-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க மனித உரிமை போராளியான ரேய்ச்சல் கோரியை இஸ்ரேல் ராணுவம் ஃபலஸ்தீனில் புல்டோஸரை ஏற்றி கொடூரமாக கொலைச் செய்தது. ஃபலஸ்தீன் மக்களின் வீடுகளை இஸ்ரேல் ராணுவம் இடிக்க முயன்றதை ரேய்ச்சல் தடுத்ததுதான் இக்கொலைக்கு காரணம்.

மாயா கோட்னானி:டாக்டர் ஆஃப் டெத்!

AP Former Gujarat minister and senior BJP leader Mayaben Kodnani arrives at a special court in Ahmedabad, India, Friday
அஹ்மதாபாத்:நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலையில் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஒரு காலத்தில் நரேந்திர மோடியின் வலதுகரமாக செயல்பட்டவர்.
கைனோகாலஜிஸ்டாக பணியாற்றி அரசியலில் களமிறங்கியவர் நரோடாபாட்டியாவில் இருந்து 3 தடவை பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று எம்.எல்.ஏ ஆனார். 2007-ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக பதவியேற்றார். கலவரத்தில் தொடர்பு இருப்பதால், அவரை அமைச்சராக நியமனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், நரேந்திரமோடி அதனை புறக்கணித்து அவரை அமைச்சராக தொடர அனுமதித்தார். ஆனால், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மாயா கோட்னானியை கைது செய்ததன் மூலம் 2009-ஆம் ஆண்டு , அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தார்.

Dua For Gaza