Sunday, March 4, 2012

எக்ஸிட்போல்:உ.பி.யில் தொங்கு சட்டசபை!

elections
லக்னோ:இந்தியாவில் மிக அதிகமான வாக்காளர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்று முடிவுற்றது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் உ.பியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை உருவாகும் என தெரியவந்துள்ளது.

முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி பார்ட்டி(எஸ்.பி) தனிப்பெரும் கட்சியாக மாறும் என்று ஸ்டார் நியூஸ்- ஏ.சி. நீல்சன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு கூறுகிறது. சமாஜ்வாடி கட்சி 160 இடங்களைப் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி 86 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், 80 இடங்களுடன் பா.ஜ., மூன்றாவது இடத்தையும், 58 இடங்களுடன் காங்கிரஸ் 4வது இடத்தையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலை.தேர்தல்: தீவிர இடதுசாரிகள் வெற்றி!

AISA party's victory in JNU polls
புதுடெல்லி:ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்(ஜெ.என்.யு) மீண்டும் சிவப்பு அங்கியை அணிந்துள்ளது. மாணவர் யூனியனுக்கு நடந்த தேர்தலில் நக்ஸலைட் அனுதாபிகளான தீவிர இடதுசாரி மாணவர் அமைப்பு ஆல் இந்தியா ஸ்டுடெண்ட்ஸ் அசோசியேசன்(எ.ஐ.எஸ்.எ) அபார வெற்றியை பெற்றுள்ளது.

தேர்தலில் யூனியனின் நான்கு நிர்வாகிகள் பதவிகளையும் இவ்வமைப்பு கைப்பற்றியுள்ளது. மேலும் எ.ஐ.எஸ்.எ யூனியன் கவுன்சில் தேர்தலிலும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. பெரும் வெற்றியை பெற்றதில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பல்கலை கழக வளாகத்தில் எ.ஐ.எஸ்.எ மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். ‘நக்ஸல் பாரி, லால் ஸலாம்’ போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

கூடங்குளத்தில் இன்று பால்குடம் ஏந்தி போராட்டம்: பலத்த பாதுகாப்பு!

kudanprotest-gpramod1
திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின்நிலையம் எந்த வேளையிலும் திறக்கப்படலாம் என்ற அச்சம் நிலவும் சூழலில் கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வலையில் உள்ளது. போராட்டம் நடக்கும் இடிந்த கரை, ராதாபுரம் தாலுகா மற்றும் அணு உலை எதிர்ப்பு குழுவிற்கு ஆதரவான பகுதிகளில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு துணை டி.ஜி.பி எஸ்.ஜார்ஜ் நேற்று முன்தினம் கூடங்குளம் வருகை தந்திருந்தார். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அணுமின் நிலையம் திறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்மக்கள் கருதுகின்றனர். காலை முதல் போலீஸ் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீமின் ’வஜ்ரா’ உள்ளிட்ட வாகனங்கள் அப்பகுதி வந்ததை தொடர்ந்து அதிகமான மக்கள் போராட்டம் நடைபெறும் இடத்தில் திரண்டுள்ளனர்.

Friday, March 2, 2012

சம்ஜோதா:மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது!

NIA identifies another Samjhauta Express bomber
புதுடெல்லி:68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியின் அடையாளத்தை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டறிந்துள்ளது.

மத்தியபிரதேச மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராஜேந்திர பஹல்வான் என்ற சமந்தர் என்பவர் ரெயிலில் குண்டுவைத்த நான்குபேரில் ஒருவர் என்பதை என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது.

ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கூகிள் நீக்கியது!

google
புதுடெல்லி:ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை இணையதளங்களில் இருந்து நீக்கிவிட்டதாக இணையதள சேவை நிறுவனமான கூகிள் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய கலாச்சாரத்தை மோசமாக சித்தரிக்கும் குற்றச்சாட்டை கூகிள் மறுத்துள்ளது. அட்மினிஸ்ட்ரேடிவ் சிவில் நீதிபதி ப்ரவீண் சின்ஹாவுக்கு ஆவணம் மூலம் தெரிவித்த பதிலில் கூகிள் இதனை கூறியுள்ளது. கூகிளின் இந்திய சேவைதாரர்களுக்கு நோட்டீஸ் கிடைத்ததை தொடர்ந்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கிவிட்டதாக கூகிள் கூறுகிறது.

ஜெயில் சூப்பிரண்டிற்கு 5 கோடி வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்கள்!

Lokayukta raids Indore jail superintendent's residence-- assets worth crores recovered
போபால்:மத்தியபிரதேச மாநில ஜெயில் சூப்பிரண்ட் ஒருவரின் வீட்டில் லோக் ஆயுக்தா போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்குரிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் புருஷோத்தம் சோம்குன்வர். இவர் தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைக் குவித்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில், இவரது வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

Thursday, March 1, 2012

நியூஸ் இண்டர்நேசனல் ஜேம் மர்டோக் ராஜினாமா!

James Murdoch resigns from News International
லண்டன்:பரபரப்பான செய்திகளை வெளியிடுவதற்காக தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது உள்ளிட்ட முறைகேடான வழிகளை கடைப்பிடித்ததால் சர்ச்சையில் சிக்கிய நியூஸ் இண்டர்நேசனலின் சேர்மன் பொறுப்பில் இருந்து ஊடக முதலை ரூபர் மர்டோக்கின் மகன் ஜேம்ஸ் மர்டோக் ராஜினாமா செய்துள்ளார்.

தி டைம்ஸ், தி சண்டே டைம்ஸ்,தி சன் ஆகிய பத்திரிகைகள் நியூஸ் இண்டர்நேசனலின் கட்டுப்பாட்டில் உள்ளது. முன்னர் தொலைபேசி உரையாடல் ரகசியமாக ஒட்டுகேட்பு விவகாரத்தில் நிறுவனத்தின் சி.இ.ஒ ரெபேக்கா ப்ரூக் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது: இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தம்!

Western sanctions tighten squeeze on Iran oil exports
வாஷிங்டன்:ஈரானிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது.

இந்தியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகளுடன் இவ்விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

சிரியா:மரண எண்ணிக்கை 7500-ஐ தாண்டியது!

Syrian forces have killed more than 7500
டமாஸ்கஸ்:சிரியாவில் சாதாரண மக்கள் மீது கடந்த 11 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 7500ஐ தாண்டியுள்ளது. பெண்களும், குழந்தைகளும் உள்பட தினந்தோறும் 100 பேர் பலியாகி வருவதாக ஐ.நா அண்டர் செகரட்டரி ஜெனரல் லேன் பாஸ்கோ அறிவித்துள்ளார்.

குண்டுவீச்சு தொடரும் ஹிம்ஸில் செவ்வாய்க்கிழமை 104 பேர் கொல்லப்பட்டனர். ஹமாவில் நடந்த கூட்டுப் படுகொலைகளில் 35 பேரும், பாப் அம்ரில் 26 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜின்சியாங்கில் மீண்டும் கலவரம் :20 பேர் மரணம்!

at least 20 people were killed in a new outburst of violence in China's

பீஜிங்:வடமேற்கு சீனாவில் ஜின்சியாங்கில் நடந்த உள்நாட்டு கலவரத்தில் குறைந்தது 20 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஜின்சியாங்கில் கார்கிலிக் சுயாட்சி பிரதேசத்தில் உள்ள சந்தையில் நேற்று முன்தினம் கலவரம் வெடித்தது. ஏழுபேர் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி தோட்டாவிற்கு பலியானார்கள்.

Dua For Gaza