இஸ்லாமாபாத்:ட்ரோன்(ஆளில்லா விமானம்) தாக்குதல் நடத்தியது அமெரிக்கா தான் என அதிபர் பாரக் ஒபாமாவின் அறிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ட்ரோன் தாக்குதல்கள் ராணுவ தந்திரங்களின் ஒரு பகுதியாக இருந்தாலும் அது சட்டவிரோதமானதும், ஏற்றுக்கொள்ள இயலாததுமாகும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அப்துல் பாஸித் கூறியுள்ளார்.
Wednesday, February 1, 2012
அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதல்: எஸ்.டி.பி.ஐ உள்பட அரசியல் கட்சிகள் கண்டனம்
சென்னை:நெல்லை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய நிபுணர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னணி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அரசியல் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
லேபிள்கள்:
இந்தியா
ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது அமெரிக்காதான்: ஒபாமா
வாஷிங்டன்:அல்காயிதா-தாலிபான் போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளை கொன்று குவிக்கும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது அமெரிக்காதான் என அந்நாட்டின் அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.
சோசியல் நெட்வர்க் இணையதளமான கூகிள் ப்ளஸ் மூலமாக நடத்திய ஒரு மணிநேரம் நீண்ட வீடியோ உரையில் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு சீர்குலைந்ததன் பின்னணியில் உள்ள ஆளில்லா விமானத் தாக்குதல்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஒபாமா.
லேபிள்கள்:
உலகம்
இஸ்மாயில் ஹனிய்யா ஈரான், வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம்
காஸ்ஸா:ஃபலஸ்தீன் எதிர்ப்பு போராட்ட இயக்கமான ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்ஸாவின் பிரதமர் இஸ்மாயில் ஹானிய்யா ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். ஹமாஸின் மூத்த தலைவர் காலித் மிஷ்அல் ஜோர்டான் மன்னர் மற்றும் கத்தர் இளவரசரை ஏற்கனவே சந்தித்து இருந்தார்.
ஹானிய்யா ஈரான், குவைத், பஹ்ரைன், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதின் சிறப்பு அழைப்பின் பேரில் ஹனிய்யா ஈரானுக்கு செல்கிறார் என ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
லேபிள்கள்:
உலகம்
சிரியா:ஐ.நா தீர்மானம் உள்நாட்டு போருக்கு வழி வகுக்கும் – ரஷ்யா
டமாஸ்கஸ்/மாஸ்கோ:சிரியாவில் அரசு எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்துள்ள சூழலில் அரபு நாடுகளும், மேற்கத்திய நாடுகளும் இணைந்து தயாராக்கிய நகல் தீர்மானம் சிரியாவில் உள்நாட்டு போரை உருவாக வழி வகுக்கும் என்றும், அது ஒருபோதும் நல்லிணக்க வழியை ஏற்றுக்கொள்ள இரு பிரிவினரையும் தூண்டாது என்றும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் பதவி விலகவேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆதரிக்க கோரி அரபு லீக் பொதுச்செயலாளர் நபீல் அல் அரபியின் அறிக்கைக்கும் ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தீர்மானத்தை வீட்டோ செய்வோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கென்னடி காற்றிலோவ் தெரிவித்துள்ளார்.
லேபிள்கள்:
உலகம்
அஜ்மல் கஸாபிற்கு நீதி கிடைக்கவில்லை – அமிக்கஸ் க்யூரி
புதுடெல்லி:26/11 மும்பை தாக்குதல் வழக்கில் கைதான முஹம்மது அஜ்மல் கஸாபிற்கு சுதந்திரமான, நீதியான விசாரணை கிடைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தால் அஜ்மல் கஸாபிற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர்(அமிக்கஸ் க்யூரி) ராஜு ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் நீதிபதி அஃப்தாப் ஆலம் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் முன்பாக இதனை தெரிவித்தார்.
லேபிள்கள்:
இந்தியா
நிலபேர ஊழல்:எடியூரப்பாவின் அப்பீல் தள்ளுபடி
பெங்களூர்: நிலபேர ஊழல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி எடியூரப்பா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
பெங்களூர் அருகேயுள்ள அரகெரே, தேவரசிக்கன ஹள்ளி, கெட்டத ஹள்ளி ஆகிய இடங்களில் பெங்களூர் வளர்ச்சி ஆணையம் (பிடிஏ) கையகப்படுத்திய நிலத்தை விடுவித்து தனது மகன்களுக்கு சாதகமாகச் செயல்பட்டதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் ராகவேந்திரா, மருமகன் சோஹன்குமார் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குரைஞர் சிராஜின் பாஷா மற்றும் பால்ராஜ் ஆகியோர் சிறப்பு லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் தனி மனு தாக்கல் செய்தனர்.
லேபிள்கள்:
இந்தியா
நீரா ராடியாவின் டேப்புகளில் முறைகேடு நடந்துள்ளது – மத்திய அரசு
புதுடெல்லி:ஊடகங்கள் வெளியிட்ட முன்னாள் கார்ப்பரேட் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய டேப்புகளில் முறைகேடு நடந்துள்ளது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் டேப் விவகாரம் கசிந்ததில் அரசு ஏஜன்சிகளுக்கு பொறுப்பில்லை என்று மத்திய அரசு அறிக்கையில் கூறியுள்ளது.
மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் இதுத்தொடர்பான அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை சீல் செய்யப்பட்ட கவரில் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி அடங்கிய பெஞ்ச் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
லேபிள்கள்:
இந்தியா
பங்களாதேஷ் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்: பி.எஸ்.எஃப் ஜவான்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை
நியூயார்க்:இந்திய எல்லைக்குள் மாடுகளை ஓட்டி வந்த பங்களாதேஷ் வாலிபரை கர்ண கொடூரமாக சித்திரவதைச் செய்த ஈவு இரக்கமற்ற எல்லை பாதுகாப்பு படை ஜவான்கள் எட்டு பேர் மீது விசாரணை நடத்த சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜனவரி 18-ஆம் தேதி புதன்கிழமை அன்று பங்களாதேஷைச் சார்ந்த இளைஞரான ஹாபு ஷேக் என்ற அப்துல் ஷேக் தனது கிராமத்தைச் சார்ந்த சில நபர்களுடன் மாடுகளை ஓட்டிக்கொண்டு இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இந்த எல்லைப் பகுதியில் வேலிகள் இல்லை. வழக்கமாக இரு நாடுகளை சார்ந்த விவசாயிகளும் மாடுகள் உள்பட வியாபாரத்திற்காக இந்த எல்லையை பயன்படுத்தி வருகின்றனர்.
லேபிள்கள்:
இந்தியா
வயது சர்ச்சை:ராணுவமே காரணம் – மத்திய அமைச்சர் ஏ.கெ.அந்தோணி
புதுடெல்லி:ராணுவ தளபதி வி.கே.சிங்கின் வயது தொடர்பான சர்ச்சை ஏற்படுவதற்கு ராணுவத்தின் செயல்பாடுகளே காரணம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி குற்றம் சாட்டினார்.
தளபதி ராணுவத்தில் சேரும்போது அளித்த வயதுச் சான்றிதழின் இரண்டு படிவங்களை 36 ஆண்டுகளாக வைத்திருந்ததால்தான் இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. முதலிலேயே எந்த வயதை எடுத்துக் கொள்வது என்று தீர்மானித்து அதைப் பின்பற்றியிருந்தால் இத்தகைய குழப்பம் ஏற்பட்டிருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
லேபிள்கள்:
இந்தியா
