Tuesday, October 4, 2011

சோமாலியா தலைநகர் மொகாதிஷூவில் பயங்கர குண்டு வெடிப்பு: 139 பேர் மரணம்

golinejad20111004102337937
மொகாதிஷூ:சோமாலியாவின் மொகாதிஷுவில் அமைச்சரவை கட்டிடம் ஒன்றின் வெளிப்புறத்தில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் சுமார் 139 பேர் மரணமடைந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் மாணவர்கள்,இராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் மரணம் அடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் அதிகமானோர் தீக்கிரையாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ருத்ராபூரில் அராஜகம் செய்த காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் – உலமா குழு

dun1
டெல்லி:ருத்ராபூரில் ஒருதலை பட்சமாக நடந்த காவல்துறை அதிகாரிகளை ராஷ்ட்ரிய உலமா குழு வன்மையாக கண்டித்துள்ளதுடன் முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 4  முஸ்லிம்களை கொன்றுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ராஷ்ட்ரிய உலமா குழுவின் பொதுச் செயலாளர் டாக்டர்.தஸ்லிம் அஹ்மத் ரஹ்மானி கூறியதாவது “உத்தரகாண்டில் அடுத்த வருடம் தேர்தல் நடக்க இருப்பதாகவும் அதை கருத்தில் கொண்டு சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற கலவரங்கள் நடத்தி வருங்கின்றனர் என்றும் மேலும் அவர்கள் குரானை தொடர்ந்து அவமதிப்பத்தின் மூலம் முஸ்லிம்களை உசுப்பேற்ற நினைக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்”.

காவல் நிலையத்தில் தொழுகை நடத்திய இளைஞருக்கு போலீசாரின் அடி உதை

கொச்சி:காவல் நிலையத்தில் தொழுகை நடத்திய இளைஞரை போலீசார் கொடூரமாக தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஒரு வழக்கு விசாரணைக்காக அரூர் காவல் நிலையம் சென்ற ரஹீம் என்ற முஸ்லிம் வாலிபரைதான் ஆய்வாளர் சிவன்குட்டி மற்றும் மூன்று காவலர்கள் அடித்து துவைத்தனர்.

சஞ்சீவ் பட் சாட்சியாக வேண்டும் – குல்பர்க் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை

Sanjeev_Bhatt_Article
அஹ்மதாபாத்:கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குல்பர்க் சொசைட்டியை சேர்ந்தவர்கள்  மோடிக்கு எதிராக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை சாட்சியாக சேர்க்க வேண்டும் என்றும் மேலும் நான்கு காவல்துறை உயர் அதிகாரிகளை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும் கடந்த திங்கள் அன்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ஜெ.தந்தா வருகின்ற அக்டோபர் 18-ஆம் தேதி அம்மனுவின் மீதான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
குல்பர்க் சொசைட்டி கூட்டுப் படுகொலையில் கொல்லப்பட்ட முன்னால் காங்கிரஸ் எம்.பி.இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாஃப்ரி அளித்துள்ள மனுவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு தனது இறுதி அறிக்கையை சமர்பித்துள்ள நிலையில் சஞ்சீவ் பட்டை இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று சிறப்பு நீதி மன்றத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, October 3, 2011

அடுத்த இரண்டு வாரங்களுக்கு டெல்லியில் மின்சார பாதிப்பு

imagesCAXBJTIL
புதுடெல்லி:வாஜிராபத்தில் மேம்பாலம் கட்டுவதை தொடர்ந்து வட மற்றும் தென் டெல்லியில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மின்சார இணைப்பில் பாதிப்பு ஏற்ப்படும் என்றும், இன்று முதல் அக்டோபர் 17 வரை, வாஜிராபாத், கீதா காலனி, பட்பர்கனி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளதாக டெல்லி ட்ரான்ஸ்கோ லிமிட் தெரிவித்துள்ளது.

இந்த மின்சார துண்டிப்பு மிகவும் முக்கியமான காரணமாகவே செய்யப்பட உள்ளது என்றும், தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றில் இணைக்கப்பட உள்ள வாஜிராபாத் பாலத்தின் பணியை மையத்தில் வைத்தே இப்படி ஒரு ஏற்பாடு என்றும் தெரிவித்துள்ளனர். 

மத துவேஷ கருத்து – சுப்பிரமணியம் சாமி மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு

ssamy
புதுடெல்லி:மதங்களுக்கு இடையே மோதலையும், துவேஷத்தையும் ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக கூறி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுப்பிரமணியம் சாமி மும்பையின் பிரபல செய்தித் தாளில் எழுதியிருந்த கட்டுரையில், இந்துக்கள் மற்றும் முஸ்லீ்ம்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செய்ல்பட வேண்டும். அந்த மனப்பான்மை இந்துக்களுக்கு வர வேண்டும்.

Sunday, October 2, 2011

சஞ்சீவ் பட்டை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

Sanjeev_Bhatt_Article
அகமதாபாத்:நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்த குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தது. அவரை நீதிமன்றக் காவலில் சிறை வைக்க உத்தரவிடப்பட்டது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட குஜராத் மாநில ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சாட்சியம் ஆவணங்களை தாக்கல் செய்தவர்.

Saturday, October 1, 2011

தனித் தெலுங்கானா பந்த்தால் முடங்கியது ஹைதராபாத்

telangana_796378f
ஹைதராபாத்: தனித் தெலுங்கானா வலியுறுத்தி, ஹைதராபாத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தால், நகர் முழுவதும் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே, டெல்லியில் தெலுங்கான பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ரயில் மறியல்,சாலை மறியல் என பல்வேறு வகையில் தெலுங்கானா பகுதிகளில் கடந்த 17 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது

Sanjeev_Bhatt_arrested_295
அஹமதாபாத்:குஜராத் காவல்துறை முன்னால் அதிகாரி சஞ்சீவ் பட் இன்று கைது செய்யப்பட்டர். குஜராத் இனப் படுகொலை வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பட் மிக முக்கியமான சாட்சிகளை பதிவு செய்திருந்தார்.

கலவரத்தின் போது மோடி வீட்டில் நடந்த கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடுவதை தடுக்கவேண்டாம் என அந்த கூட்டத்தில் மோடி காவல்துறை அதிகாரிகளுக்கு கட்டளை இட்டதாக அதில் கூறி இருந்தார்.

மோடியை விமர்சித்த கார்ட்டூனிஸ்ட் கைது

modifastontrack1
புதுடெல்லி:குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரத நாடகத்தை விமர்சித்து கார்ட்டூன் வரைந்ததற்காக  ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபாத் கிரண் என்ற ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் ஹரீஷ் யாதவ் என்ற மூசவீர்(35) இந்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  செப்டம்பர் 20ம் தேதி அவர் வரைந்த கார்ட்டூன் அந்த நாளிதழில் வெளியாகியிருந்தது.

Dua For Gaza