Sunday, September 4, 2011

கடாபிக்கும் அமெரிக்க சிஐஏ-க்கும் இடையே ரகசிய தொடர்பு

imagesCA0U6VER
திரிபோலி:திரிபோலியில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மூலம் அமெரிக்க உளவுத் துறைக்கும், கடாபி அரசுக்கும் இடையில் ரகசிய தொடர்புகள் இருந்தது தெரியவந்துள்ளது.

இது அமெரிக்காவுக்கும், லிபியா இடைக்கால அரசுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

திரிபோலி மீது நேட்டோ விமானப் படைகள் நடத்திய குண்டு வீச்சில் சேதம் அடைந்த கட்டடங்களுள் லிபியா உளவுத் துறை அலுவலகமும் ஒன்று. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த அலுவலகத்திலிருந்து சில ஆவணங்களைக் கைப்பற்றி அவற்றில் உள்ள தகவல்களை வெளியிட்டுள்ளது.

புதிய பாதையில் சேது சமுத்திர திட்டம்?: ராமேஸ்வரத்தில் பச்செளரி குழு ஆய்வு

03-sethusamudram-project300
ராமேஸ்வரம்: சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைப்பது குறித்து ஆர்.கே.பச்செளரி தலைமையிலான மத்திய அரசுக் குழுவினர் ராமேஸ்வரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த சர்வதேச அரசுக் குழுமத்தின் இந்தியப் பிரிவின் தலைவரான பச்செளரி மற்றும் அதிகாரிகள் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வை நடத்தினர்.

மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள்: கமல்நாத்- 26 கோடி, ஏ.கே.ஆண்டனி – 32 லட்சம்!

mins435
புதுடெல்லி:மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பங்கு பெறும் அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டனர்.

263 கோடி ரூபாய் சொத்துள்ள கமல்நாத் தான் அமைச்சர்களில் அதிக சொத்துள்ளவர். வெறும் 32 லட்சம் ரூபாய் சொத்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி தான் அமைச்சர்களில் ஏழை!

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பெயரில் 22 லட்சம் ரூபாய் சொத்துள்ளது. ஆனால் அவரின் மனைவியின் பெயரில் 12 லட்சம் ரூபாய் சொத்துள்ளது.

Saturday, September 3, 2011

ஐ.நா. அறிக்கையைத் தொடர்ந்து துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது

turkey_israel_123362393_620x350
அங்காரா:இஸ்ரேல் தூதரை துருக்கி வெளியேற்றியது. அத்தோடு வரும் வெள்ளிக்கிழமை அது இஸ்ரேலுடன் இராணுவத் தொடர்புகளைத் துண்டிக்கிறது என்று துருக்கி கூறியுள்ளது.

கடந்த வருடம் துருக்கியிலிருந்து காஸாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஃப்ளோடில்லா கப்பலை இஸ்ரேலிய கப்பற்படை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு 9 பேரைக் கொன்றது.

Friday, September 2, 2011

அன்னா உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் – கொதிக்கிறார் மணிப்பூர் இரும்புப் பெண்

irom-sharmila_350_083011043643
இம்பால்:அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி விமர்சித்துள்ளார்.

அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரின் ஜன் லோக்பால் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.

கத்தாபியின் பிள்ளைகளிடம் கருத்துவேறுபாடு

26_khamis_gaddafi_632868t
திரிப்போலி:லிபியாவின் தலைநகரான திரிப்போலியின் ஆதிக்கம் மேலைநாட்டுப் படைகளின் உதவியுடன் எதிர்ப்பாளர்களின் கைகளில் முழுமையாகப் போயுள்ளது என்ற செய்திக்கிடையில் இன்னொரு செய்தியும் மீடியா உலகில் உலா வருகின்றது.

அதாவது முஅம்மர் கத்தாபியின் பிள்ளைகளுக்குள் வெளிப்படையாக கருத்துவேறுபாடுகள் இருப்பதுபோல் வரும் செய்திதான் அது. தங்கள் குடும்பத்தில் ஒரு ஆள் கூட எதிர்ப்பாளர்களிடம் சரணடைய மாட்டார்கள் என்றும், எதிர்ப்பாளர்களின் படைக்கெதிராக மரணம் வரை போராடுவோம் என்றும், வெற்றி கையெட்டும் தூரத்திலேயே உள்ளது என்றும் கத்தாபியின் இரண்டாவது மகன் ஸைஃபுல் இஸ்லாம் கூறுகிறார்.  தாங்கள் லிபியாவில்தான் இருப்பதாக லிபிய மக்களுக்குத் தெளிவுபடுத்த தான் ஆசைப்படுவதாகக் கூறும் அவர், திரிப்போலிக்கு அருகில் ஓர் இடத்தில் மறைந்திருப்பதாக அவர் வெளியிட்ட ஒலிநாடாவில் குறிப்பிட்டுள்ளார்.

ராம் தேவுக்கெதிராக என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் வழக்கு

ramdev
புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ். யோகாகுரு பாபா ராம் தேவுக்கெதிராகவும், அவரது ஹரித்துவார் ஆசிரமத்திற்கெதிராகவும் என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் வழக்கு தொடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றது தொடர்பாக அந்நியச் செலாவணிச் சட்ட மீறல் சம்பந்தப்பட்ட வழக்கு இது.

அமெரிக்கா, பிரிட்டன், நியூஸிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ராம்தேவ் சட்டவிரோதமாக பணம் பெறுவதை என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது. சமீபத்தில் மட்டும் ஏழு கோடி ரூபாயை பிரிட்டனிலிருந்து கைப்பற்றியுள்ளது.

Thursday, September 1, 2011

தமிழக ஆளுநராகப் பதவியேற்றார் கே.ரோசய்யா

01TH_ROSSAIAH_770333f
சென்னை:தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கே.ரோசய்யா இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

78 வயதாகும் மூ்த்த காங்கிரஸ் தலைவர் ரோசய்யாவை தமிழக ஆளுநராக சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நியமனம் செய்து அறிவித்தார். இதையடுத்து இன்று மாலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இதில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஹரேன் பாண்டியா கொலை: சந்தேக முள் மீண்டும் மோடியை நோக்கி!

images
காந்திநகர்:குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 முஸ்லிம் இளைஞர்களை “இவர்கள் குற்றம் செய்ததை நிரூபிப்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து சந்தேகத்தின் முள் மீண்டும் மோடியை நோக்கித் திரும்பியுள்ளது.

இந்தக் கொலை வழக்கில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்கவேண்டும் என்று 2007 டிசம்பரில் ஹரேன் பாண்டியாவின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது.

தானே,பன்வேல் குண்டுவெடிப்பு: 2 ஹிந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு 10 வருடம் கடுஞ்சிறை

தானே:2008-ல் தானேயிலும், பன்வேலிலும் நடந்த 3 குண்டுவெடிப்புகளின் வழக்கில் ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியுள்ளது.

ஹனுமந்த் கஸ்கரி, விக்ரம் வினய் பாவே ஆகியோர்தான் அந்தத் தண்டனை பெற்றவர்கள். இவர்கள் குற்றவாளிகள் என்று திங்கள்கிழமை நீதிமன்றம் தீர்மானித்தது.

Dua For Gaza