Wednesday, April 6, 2011

ஏப்ரல் 8ம் தேதி ஐபிஎல்4 தொடக்கம்: 51 நாள் அதிரடி 74 அட்டகாச போட்டிகள்

ipl
உலகக் கோப்பையை வென்ற சூட்டோடு சூடாக இந்திய அணி வீரர்கள் ஆளுக்கு ஒரு அணியாக பிரிந்து வருகிற 8ம் தேதி முதல் மே மாதம் 22ம் தேதி வரை நான்காவது ஐபிஎல் தொடரில் அதிரடி வேட்டையில் குதிக்கவுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்ற கொண்டாட்டங்கள் இன்னும் கூட முடியவில்லை. அந்த சூடே இன்னும் ஆறாத நிலையில், 8ம் தேதி ஐபிஎல் 4ம் சீசன் தொடங்குகிறது.
74 போட்டிகளுடன் 51 நாட்கள் நடைபெறவுள்ள இந்த டுவென்டி 20 திருவிழாவை கண்டு களிக்க, வென்றவர்களை ரசிக்க கோடானுகோடி கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி விட்டனர்.
ஏப்ரல் 8ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன

Tuesday, April 5, 2011

வளைகுடா நாடுகள்-ஈரான் இடையேயான மோதல் முற்றுகிறது

அபுதாபி:வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின்(ஜி.சி.சி) உறுப்பு நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையேயான உறவில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளது.
அரபு நாடுகளில் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் எழுச்சியின் திரைமறைவில் வளைகுடா நாடுகளில் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்கவும்,தங்களது விருப்பங்களை நிலைநாட்டவும் ஈரான் மேற்கொண்டுவரும் முயற்சிகள்தாம் இம்மோதல் முற்றுவதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பஹ்ரைனில் ஷியா முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்திற்கு உதவி புரிந்த ஈரான், குவைத்தில் உளவு வேலையில் ஈடுபட்டது. மேலும், பஹ்ரைனுக்கு உதவியாக படைகளை அனுப்பிய சவூதி அரேபியாவை கடுமையான முறையில் விமர்சனம் செய்து அறிக்கையை வெளியிட்டது.இதனால் ஜி.சி.சி நாடுகள் மற்றும் ஈரானுக்குமிடையேயான உறவு மேலும் சீர்குலைந்துள்ளது.
அரபு நாடுகள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புதிய சூழலின் பின்னணியில் ஜி.சி.சி வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ரியாதில் அவசரக் கூட்டத்தை நடத்தினர்.
வளைகுடா நாடுகளில் சமீபத்தில் உருவான சில பிரச்சனைகள் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையேயான இடைவெளியை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பஹ்ரைனில் நடந்த போராட்டம் இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்தது. இதர அரபு நாடுகளில் மக்கள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராடிய வேளையில், பஹ்ரைனில் ஷியா முஸ்லிம்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை பஹ்ரைன் மன்னர் அங்கீகரித்து, தேசிய விவாதத்திற்கு இளவரசர் அழைப்பு விடுத்த பிறகுதான் ஷியா முஸ்லிம்களின் போராட்டத்தில் மோதல் வலுத்தது. ஷியா முஸ்லிம்கள் மீது கொடூரமான தாக்குதல்களை ஜி.சி.சி படை கட்டவிழ்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
போராட்டத்தின் பின்னணியில் ஈரானின் தலையீடு தெளிவான நிலையில் அதற்குரிய ஆதாரங்களை பஹ்ரைன் திரட்டியது.மேலும் ஐ.நா சபையில் ஈரானின் மீது புகார் அளித்தது.
பிரச்சனை பூரணமாக கைநழுவி,வெளிநாட்டினர் மீது தாக்குதல் துவங்கிய வேளையில் ஜி.சி.சி தீர்மானத்தின்படி ராணுவ உதவி பஹ்ரைனுக்கு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் ஜி.சி.சியின்  ‘பெனின்சுலா ஷீல்ட்’ என்ற படையினர் பஹ்ரைனுக்கு சென்றனர்.
ஜி.சி.சி நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த ராணுவமும்,பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் நடைமுறையில் உள்ளன. இதனடிப்படையில் பஹ்ரைனுக்கு ராணுவ உதவி வழங்க சவூதி அரேபியா, யு.ஏ.இ, குவைத் ஆகிய நாடுகள் முன்வந்தன. ஆனால், இதனை சதாம் ஹுசைனின் குவைத் ஆக்கிரமிப்போடு ஒப்பிட்ட ஈரான், நேற்று முன்தினம் சவூதி அரேபியாவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை தூதரக மரியாதைகளை மீறியதாக அமைந்திருந்தது.
சவூதி அரேபியா, ‘தீக்கனலால் தலையை சொறிவதாக’ தெரிவித்த ஈரான், பஹ்ரைனில் ராணுவத்தை வாபஸ்பெற வேண்டுமென அழுத்தமாக தெரிவித்தது. இந்த அறிக்கையை சவூதி அரேபியா மறுத்ததோடு, குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அதுமட்டுமல்ல, பஹ்ரைனில் தலையிடுவதை ஈரான் கைவிட வேண்டுமென கோரியுள்ளது.
யு.ஏ.இயின் மூன்று தீவுகளை கைவசம் வைத்திருக்கும் ஈரான் இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு கூட தயாராகவில்லை.பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டுமென சர்வதேச அரங்குகள் உட்பட பல தடவை யு.ஏ.இ வலியுறுத்திய பொழுதும் ஈரான் செவிசாய்க்கவில்லை.
ஜி.சி.சி-ஈரான் இடையேயான உறவு மேலும் சீர்குலைவதற்கு காரணம், அண்மையில் குவைத் நாட்டில் ஈரான் உளவு வேலையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குவைத் ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்களைக் குறித்து அறிய ரகசியமாக செயல்பட்ட ஈரான் உளவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று பேருக்கு மரணத் தண்டனையை விதித்தது குவைத் நீதிமன்றம்.இருவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. மரணத்தண்டனை விதிக்கப்பட்ட ஈரான் நாட்டைச் சார்ந்தவரின் மகளை நீதிமன்றம் விடுதலைச் செய்தது. உளவு பார்த்த வழக்கில் குவைத்தில் ஈரானின் முன்னாள் தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பது வெளியானதைத் தொடர்ந்து குவைத் ஈரானில் தனது தூதரை திரும்ப அழைத்தது.
வளைகுடா நாடுகளில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஈரானின் தலையீடுகள் பிரச்சனைகளை உருவாக்கி அமைதியான சூழலுக்கு பங்கம் ஏற்படுத்துகிறது என மதிப்பீடு செய்யப்படுகிறது. ஈரானுடனான உறவை முறிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஜி.சி.சி நாடுகளில் எழுந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஜி.சி.சி வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவூதி தலைநகர் ரியாதில் நடத்திய அவசரக் கூட்டத்தில் வளைகுடா நாடுகளிலும், அரபு நாடுகளிலும் நிலவும் சூழ்நிலையை ஆராய்ந்தனர். பஹ்ரைன் போராட்டம், குவைத்தில் உளவு வேலை ஆகியவற்றைக் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
யு.ஏ.இயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லாஹ் பின் ஸாயித் அல் நஹ்யான் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஜி.சி.சியின் புதிய பொதுச் செயலாளர் அப்துல் லத்தீஃப் அல் ஸயானி மற்றும் ஜி.சி.சி உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
வளைகுடா நாடுகள் மற்றும் ஈரானுக்கிடையேயான மோதல் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும். முஸ்லிம் நாடுகளை மோதவிட்டு வேடிக்கை பார்த்து பின்னர் உள்ளே நுழைந்து தனது சதித்திட்டங்களை நிறைவேற்ற காத்துக் கொண்டிருக்கின்றன முஸ்லிம் விரோத சக்திகள். இந்நிலையில் ஈரானும், வளைகுடா நாடுகளும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து மோதல் போக்கையும், பிறநாடுகளில் தலையிடும் போக்கையும் கைவிடுமா? என்பதுதான் அனைவரது உள்ளங்களில் எழும் கேள்வியாகும்.

அஸ்ஸாமில் முதல் கட்ட வாக்குப்பதிவு 66 சதவீதம்

assam_poll_338x225
குவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவில் 66.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சதவீதத்தில் மாற்றம் வரலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவின் உண்மை நிலவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரியவரும். வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. இரண்டு வாக்குச் சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்படும்.
126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 62 தொகுதிகளில் நடைபெற்றது. இத்தொகுதிகளில் 485 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 38 பேர் பெண்களாவர்.முதல் கட்டமாக நடந்த வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் முதல்வர் தருண் கோகாய் உள்ளிட்ட பிரமுகர்கள் போட்டியிடுகின்றனர்.
அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சி ஹாட்ரிக் வெற்றிப் பெற்று ஆட்சியில் தொடரும் என வாக்குப்பதிவுச் செய்துவிட்டு பேட்டியளித்த தருண் கோகாய் தெரிவித்தார்.
காலை ஏழு மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் மூன்று மணிக்கு முடிவடைந்தது.

மகாத்மா காந்தியைக் குறித்த சர்ச்சைக்குரிய புத்தகத்தை தடைச்செய்ய மாட்டோம் – மத்திய அரசு

great-soul-gandhi-featured

நாக்பூர்:இந்தியாவின் தேசத் தந்தையாக கருதப்படும் மகாத்மா காந்தியடிகளை பற்றி அமெரிக்க எழுத்தாளர் , ஜோசப் லெலிவெல்ட் எழுதிய , “கிரேட் ஸோல், மகாத்மா காந்தி அண்ட் ஹிஸ் ஸ்ட்ரக்ல் வித் இண்டியா” (Great Soul – Mahatma Gandhi and His Struggle with India) என்ற புதிய வாழ்க்கை சரித்திரப் புத்தகம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் தேசத் தந்தை என்று கருதப்படும் காந்தியை ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் இனவெறியர் என்று காட்டும் வகையில் சில கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக , சில பத்திரிகைகளில் வெளிவந்த மதிப்புரைகள் இத்தகையதொரு விவாதத்தை கிளப்பியுள்ளன.
ஆனால், மகாத்மா காந்தி பற்றிய ஜோசப் லெலிவெல்ட்டின் புத்தகம் இன்னும் இந்தியாவில் பிரசுரமாகவில்லை, விற்பனைக்கும் வரவில்லை. ஆனால், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வெளியான இந்த புத்தகம் குறித்த மதிப்புரைகளை மறு பிரசுரம் செய்துள்ளன.
இந்த புதிய வாழ்க்கைச் சரித்திர புத்தகம் விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதிக்க புதன்கிழமை குஜராத் மாநில சட்டப்பேரவை ஒரு மனதாக வாக்களித்தது. மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியும், இந்தப் புத்தகத்தை, அடிப்படையற்ற, உணர்ச்சிகளைக் கிளப்பும் நிந்தனை, ஒரு தேசத் தலைவரை இழிவுபடுத்தும் புத்தகம் என்று வர்ணித்து, மத்திய அரசும் இதே போன்ற தடையை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால், நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், புலிட்சர் விருது பெற்றவருமான, ஜோசப் லெலிவெல்ட், காந்தியை, இருபால் உறவுக்காரர் என்றோ அல்லது இனவெறியர் என்றோ தான் எந்த இடத்திலும் வர்ணிக்கவில்லை என கூறியுள்ளார். மேலும், தன்னை ஒரு ஜனநாயக நாடாகக் கூறிக் கொள்ளும் ஒரு நாடு, ஒரு புத்தகத்தை அந்த நாட்டில் எவரும் படிப்பதற்கு முன்னரே தடை செய்வது அவமானகரமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இப்புத்தகத்தை தடைச் செய்யப்போவதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுக்குறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது: ‘புத்தகத்தில் காந்தியைக் குறித்து மோசமாக ஒன்றும் எழுதப்படவில்லை என லெலிவெல்ட் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள புத்தகத்தை வல்லுநர்கள் மிக கவனமாக ஆராய்ந்துள்ளனர். ஆதலால் புத்தகத்தை தடைச் செய்வதற்கான பிரச்சனை உருவாகவில்லை.’ இவ்வாறு வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

சாதிக் பாட்ஷா மரணம்:விசாரணைக்கு 3 தினங்களுக்குள் அறிவிக்கை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

  saathik4
புதுடெல்லி:முன்னாள் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க மத்திய அரசு 3 தினங்களுக்குள் அறிவிக்கை வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்து விசாரணைக்கான பொறுப்பை சி.பி.ஐயிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய அரசு காலதாமதம் செய்துவந்த சூழலில் உடனடியாக அறிவிக்கை வெளியிட வலியுறுத்தியதாக நீதிபதிகளான ஜி.எஸ்.சிங்வி, எ.கெ.கங்கூலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.
சாதிக் பாட்ஷாவின் வழக்கு விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங்கின் கோரிக்கையை பதிவுச்செய்த பிறகுதான் உச்சநீதிமன்றம் அறிவிக்கை வெளியிட உத்தரவிட்டது.
சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்த விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைக்கக்கோரி கடந்த மாதம் 18-ஆம் தேதி தமிழக அரசு கடிதம் எழுதியபோதும்,மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்துவருகிறது.எனவே இது தொடர்பாக அறிவிக்கை வெளியிட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென பொது நலன் வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை சி.பி.ஐ.எல் என்ற அரசு சாரா அமைப்பின் சார்பாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.  இம்மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்ற பெஞ்ச் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.
சி.பி.ஐ.எல் முன்னர் அளித்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது. இவ்வழக்கில் கடந்த சனிக்கிழமை சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடியிலிருந்து கிடைத்த பணத்தை பாட்ஷாவின் நிறுவனம் மூலமாக கலைஞர் டி.விக்கு அளிக்கப்பட்டதாக சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சுட்டிக் காட்டியிருந்தது.

யெமன்:17 பேரை அநியாயமாக சுட்டுக்கொன்ற ராணுவம்

mideast-yemen-protest-2011
ஸன்ஆ:யெமனில் தெற்கு நகரமான தாஇஸில் அரசு எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்துவரும் ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தாஇஸ் ஆளுநரின் தலைமையகத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியின் மீது ராணுவம் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டதாக எ.எஃப்.பி செய்தி நிறுவனம் கூறுகிறது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக எதிர்ப்பாளர்களுக்கும், ராணுவத்திற்குமிடையே மோதல் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மீது ராணுவம் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அதேவேளையில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று ஹுதைதாவில் எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டது. மரணம் குறித்து செய்தி வெளியாகவில்லை. 250 பேர் காயமடைந்துள்ளனர்.
துனீசியாவிலும், எகிப்திலும் உருவான எழுச்சியை முன்மாதிரியாகக் கொண்டு ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக யெமன் மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பாவில் தீர்வைத்தேடி கத்தாஃபியின் பிரதிநிதி


obeidi_1863334c

 

திரிபோலி:மேற்கத்திய ராணுவத்தின் தாக்குதல் வலுவடைந்ததைத் தொடர்ந்து லிபியாவின் ஏகாதிபத்திய அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் பிரதிநிதியான வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அப்துல் ஆதி அல் உபைதி கிரீஸ் தலைநகரான ஏதன்ஸிற்கு வருகைத் தந்துள்ளார்.
லிபியா சந்திக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வைத்தேடி லிபியா பிரதிநிதி வந்துள்ளதாக க்ரீஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் திமித்ரீஸ் த்ரோத்ஸாஸ் தெரிவித்துள்ளார். பின்னர் துருக்கியின் அங்காராவுக்கு சென்ற உபைதி அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தேவ்தோக்லுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எதிர் தரப்பினருடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வதுத் தொடர்பான காரியங்கள் விவாதிக்கப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உபைதி க்ரீஸ் நாட்டிற்கு சென்றார். அங்கு பிரதமர் ஜார்ஜ் பவன்ட்ரூவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பவன்ட்ரூ  லிபியா விவகாரம் தொடர்பாக துருக்கி பிரதமர் உருதுகானுடனும், கத்தர்-பிரிட்டன் தலைவர்களுடனும் விவாதித்தார்.
லிபியாவில் அரசியல், ராஜதந்திர தீர்வை காண தாங்கள் தயார் என க்ரீஸ் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேவேளையில், கத்தாஃபியின் மகன்களான ஸைஃபுல் இஸ்லாம் மற்றும் ஸாஇதி ஆகியோர் கத்தாஃபியை பதவியிலிருந்து விலகச்செய்துவிட்டு சமரச பேச்சுவார்த்தைக்கு திட்டமிட்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் ப்ரீகாவில் எதிர்ப்பாளர்கள் முன்னேற்றமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கத்தாஃபியின் ராணுவம் அப்பகுதியிலிருந்து பின்வாங்கியுள்ளது. மிஸ்ரத்தாவிலிருந்து காயமடைந்தவர்களுடன் புறப்பட்ட துருக்கி கப்பல் பெங்காசிக்கு வந்துள்ளதாக தொடர்புடையவர்கள் தெரிவிக்கின்றனர்.
விமானத்தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதற்காக விமானங்களை அமெரிக்கா வாபஸ் பெற்றுள்ளதாக நேட்டோ தெரிவிக்கிறது.

Monday, April 4, 2011

அழகிரியை பதவியில் இருந்து நீக்க பாஜக கோரிக்கை!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் முரளிதர் ராவ் தேர்தல் அதிகாரியைத் தாக்கிய மத்திய மந்திரி மு.க.அழகிரியை அமைச்சரவையில் இருந்து விலக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் கோயிலுக்குச் சென்ற போது தேர்தல் அதிகாரி காளிமுத்துவும் விடியோ கிராபர் ஒருவரும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களால் தாக்கப் பட்டதாக வழக்கு பதிவு செய்யப் பட்டது.  இது குறித்துப் தெரிவித்த முரளிதர் ராவ் தேர்தல் அதிகாரி தாக்கப் பட்டது ஜனநாயகத்துக்கு விடப் பட்ட மிரட்டல் என்றும் தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணியைச் செய்ய விடாமல் தடுக்கப் படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப் பட்ட தேர்தல் அதிகாரி காளிமுத்து தம்மையும் விடியோ கிராபரையும் யாரும் தாக்க வில்லை என்றும் கீழவளவு காவல் துறையினர் தான் அவ்வாறு கூறினர் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

ஞாயிறு, 03 ஏப்ரல் 2011 11:45 தௌலா Tamil Nadu E-mail அச்செடுக்க ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்காக பிரத்யேகமாக சில வாக்குறுதிகளை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அள்ளி வீசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளவை: உங்களது தொகுதியில் உங்களின் அன்பு சகோதரியாக நான் வேட்பாளராக இருக்கிறேன். எனது பூர்வீகம் ஸ்ரீரங்கம் தான். நான் உங்களது உள்ளூர் பிரச்னையும் நன்கு அறிவேன். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலைச்சுற்றி 100 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்கள் நிலங்களை வாங்க முடியாமலும், விற்க முடியாத சூழலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மழை காலங்களில் அடிக்கடி ஸ்ரீரங்கம் பாதிக்கப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும். சரிவர செயல்படுத்தாத மணிகண்டம் கூட்டு குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும். புங்கனூர், கள்ளிக்குடி ஏரியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுவதால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளின் துயரம் துடைக்கப்படும். கோரையாறு, அரியாறு குறுக்கே பாலம் கட்டப்படும். புங்கனூர்-அல்லித்துறை இடையே அரியாறு பாலம் கட்டப்படும். உய்யக் கொண்டான் திருமலை- இனியானூர் சாலையில் பாலம் அமைக்கப்படும் இனாம்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம்கள் பெருமளவு வசிக்கின்றனர். அவர்களிடையே ஜெயலலிதா பேசியபோது, ""இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும். முறையாக வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்கப்படும்'' என்று வாக்குறுதி அளித்தது பெரும் வரவேற்பை பெற்றது.

E-mail அச்செடுக்க
ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்காக பிரத்யேகமாக சில வாக்குறுதிகளை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அள்ளி வீசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளவை:

உங்களது தொகுதியில் உங்களின் அன்பு சகோதரியாக நான் வேட்பாளராக இருக்கிறேன். எனது பூர்வீகம் ஸ்ரீரங்கம் தான். நான் உங்களது உள்ளூர் பிரச்னையும் நன்கு அறிவேன்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலைச்சுற்றி 100 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்கள் நிலங்களை வாங்க முடியாமலும், விற்க முடியாத சூழலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
மழை காலங்களில் அடிக்கடி ஸ்ரீரங்கம் பாதிக்கப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்.
சரிவர செயல்படுத்தாத மணிகண்டம் கூட்டு குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
புங்கனூர், கள்ளிக்குடி ஏரியில் நான்கு வழிச்சாலை
அமைக்கப்படுவதால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளின் துயரம் துடைக்கப்படும்.
கோரையாறு, அரியாறு குறுக்கே பாலம் கட்டப்படும்.
புங்கனூர்-அல்லித்துறை இடையே அரியாறு பாலம் கட்டப்படும்.
உய்யக் கொண்டான் திருமலை- இனியானூர் சாலையில் பாலம் அமைக்கப்படும்
இனாம்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம்கள் பெருமளவு வசிக்கின்றனர். அவர்களிடையே ஜெயலலிதா பேசியபோது, ""இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும். முறையாக வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்கப்படும்'' என்று வாக்குறுதி அளித்தது பெரும் வரவேற்பை பெற்றது.
 

கணிணியில் டிரைவர்களை மாற்றம் செய்ய

driver error
கணிணியின் இயங்குதளம் மற்றும் வன்பொருள்களான விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவற்றுடன் தொடர்பு கொள்வதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும்.
பொதுவான கருவிகளுக்கான டிரைவர்கள் இயங்குதளத்திலேயே கிடைக்கப்பெறும். புதியதாக ஏதேனும் கருவியை நிறுவினால் வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களால் வழங்கப்படும். கணிணியில் இவை கட்டாயம் இருந்தால் தான் வன்பொருட்கள் முறையாக வேலை செய்யும்.
கணிணியில் குறிப்பிட்ட கால பயன்பாட்டுக்குப் பிறகு டிவைஸ் டிரைவர்களை(Device drivers) அப்டேட் செய்ய வேண்டும். ஏன் என்றால் மென்பொருள்களுக்கு அப்டேட் இருப்பது போல வன்பொருள்களையும் அப்டேட் செய்வது கணிணியின் திறனையும் கருவிகளின் உறுதிப்பாட்டையும் அதிகரிக்கின்றன.
சிலரின் கணிணியில் என்னென்ன நிறுவப்பட்டுள்ளது, எவை சரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. சில கணிணிகளின் குறிப்பிட்ட வன்பொருள்களுக்கு டிரைவரே இருக்காது. இதனால் டிரைவர் கோப்புகளைத் தேடி இணையதளங்களில் தேடி அலைய வேண்டியதில்லை.
இதற்கென இருக்கும் ஒரு இலவச மென்பொருள் Device Doctor. இந்த மென்பொருள் பெரும்பாலான கருவிகளையும் அவற்றின் நிறுவனங்களையும் ஆதரிக்கிறது. இதன் தரவுத்தளத்தில் 3000 GB க்கும் மேற்பட்ட டிரைவர்கள் உள்ளன. இதன் Cache சேகரிப்பு முறையால் வேகமாக டிரைவர்கள் மற்றும் அப்டேட்களை தரவிறக்க முடியும்.
கணிணியில் அப்டேட் செய்யப்பட வேண்டிய டிரைவர்களை விரைவாக சோதித்து பட்டியலிடுகிறது. பெயர் தெரியாத டிரைவர்களையும் பெயரைக் கண்டறிந்து காட்டுகிறது. இந்த மென்பொருள் விண்டோசின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக்கூடியது.

Dua For Gaza