Monday, April 4, 2011

பாகிஸ்தான்:சூஃபி தர்காவில் குண்டுவெடிப்பு-30 பேர் மரணம்

sufi darka blast
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் ஸாகி ஸர்வர் சூஃபி தர்காவில் நடந்த இரட்டைக்குண்டுவெடிப்பில் முப்பது பேர் கொல்லப்பட்டனர்.ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.மரண எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.இங்கு நடைபெறும் விழாவில்(உரூஸ்) கலந்துகொள்ளவந்த நபர்கள்தாம் பலியாகினர்.
இன்று மதிய வேளையில் இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.பாகிஸ்தானில் இதற்கு முன்பு சூஃபி மையங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன.தாக்குதலை நடத்தியது தற்கொலைப்படையைச்சார்ந்த நபர் என கூறப்படுகிறது.

இயற்கை எரிபொருள்(Bio-Fuel) மூலம் பறந்த விமானம்

bio diesel
மெக்ஸிகோ:செடிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளை உபயோகித்து மெக்ஸிக்கோவில் விமானம் இயக்கப்பட்டது.ஏர்பஸ்-320 ரக விமானம்தான் இந்த பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டது.இதனை மெக்ஸிகோ விமான தள இயக்குநர் அறிவித்துள்ளார்.
மெக்ஸிகோ சிட்டியிலிருந்து தெற்கு மாநிலத்தை நோக்கி இந்த பரிசோதனை பயணம் நடந்தது.இதில் விமானத்தின் இரட்டை எஞ்சின்களில் ஒன்றில் முப்பது சதவீதம் இயற்கை எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. இந்த இயற்கை எரிபொருள் ஜெட்ரோஃபா செடியிலிருந்து தயாரிக்கப்பட்டதாகும்.

முஸ்லிம் விரோத இடதுசாரிகளுக்கு ஆதரவா?-ஜமாஅத்தே இஸ்லாமியின் முக்கிய தலைவர் விலகல்

hameed vanimel
கோழிக்கோடு:சிறுபான்மை விரோத இடதுசாரிகளுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரிவு செயலாளர் ஹமீத் வாணிமேல் அவ்வமைப்பை விட்டு வெளியேறியுள்ளார்.அகில இந்திய பிரதிநிதி, மாநில செயற்குழு உறுப்பினர், ஷூரா(கலந்தாலோசனை) உறுப்பினர் உள்பட அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார் அவர்.
தனது பதவிகளை ராஜினாமா செய்தது குறித்து அவர் கூறியதாவது:கடந்த ஐந்து வருட கால இடதுசாரிகளின் ஆட்சியை சரியாக மதிப்பீடு செய்யாமல் வருகின்ற கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகளுக்கு வாக்களிக்க ஜமாஅத்தே இஸ்லாமி தீர்மானித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்துள்ளேன்.இடதுசாரிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னோடியாக ஜமாஅத்தே இஸ்லாமியின் கேரள அமீர்(தலைவர்) டி.ஆரிஃப் அலி சி.பி.எம் செயலாளர் பிணராய் விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இடதுசாரி அரசின் சிறுபான்மை விரோத கல்விக்கொள்கைக்கு எதிராகவும், இயற்கைக்கு விரோதமான வளர்ச்சித்திட்டங்களுக்கு எதிராகவும் சோலிடாரிட்டியும்(ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னணி இயக்கம்), எஸ்.ஐ.ஓவும்(ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் அமைப்பு) கடந்த ஐந்து வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த போராட்டங்களை இடது சாரி முன்னணி அரசு வீதிகளில் எதிர்கொண்டது.அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி ஜமாஅத்தே இஸ்லாமியை அழிப்பதற்கு முயல்வது, தீவிரவாத இயக்கம் என பிரச்சாரம் செய்து வருவது என ஒரு புறமும், மறுபுறம் வாக்குகளுக்காக ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டுவருகிறது.இத்தகைய கபடத்தனமான கொள்கைகளை கொண்ட இடதுசாரிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஜமாஅத்தே இஸ்லாமிக்கு உகந்தது அல்ல.இயக்கம் கடந்த காலங்களில் பின்பற்றிய தனித்தன்மைக்கும், உறுதிக்கும் எதிரானதுதான் இந்த அணுகுமுறை.இச்சூழலில் தான் நான் ராஜினாமா செய்கிறேன்.இவ்வாறு ஹமீத் வாணிமேல் தெரிவித்தார்.
ஆனால், ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் கேரள மாநில பொதுச்செயலாளர் எம்.கே.முஹம்மது அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரள சட்டமன்ற தேர்தலில் யாரை ஆதரப்பது? என்பது இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மரணத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு குடியரசு தலைவர் மன்னிப்பு

death penalty

புதுடெல்லி:மரணத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு நபர்களுக்கு குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் மன்னிப்பு வழங்கியுள்ளார்.இதனைத்தொடர்ந்து இருவரின் மரணத்தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்படுகிறது.1997-ஆம் ஆண்டு முதல் மரண தண்டனையை எதிர்பார்த்திருக்கும் எஸ்.பி.பிங்களே 1999-ஆம் ஆண்டு மரணத்தண்டனை உறுதிச்செய்யப்பட்ட ஜெய் குமாரின் கருணை மனுக்களை பரிசீலித்த குடியரசு தலைவர் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார்.
தன்னை விட்டு பிரிந்த மனைவிக்கு நெருங்கிய இருவரை கொலை செய்ததற்காக பிங்களேவிற்கு புனே செசன்ஸ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.மும்பை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் இத்தண்டனையை உறுதி செய்தது.ஜெய்குமார் மனைவியையும், குழந்தையையும் கொலைசெய்த குற்றத்திற்காக மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்.இவரது தண்டனையை மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதிச்செய்திருந்தன.
பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்ஸல் குருவின் கருணை மனு குடியரசு தலைவரின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றது.அப்ஸல் குருவின் கருணை மனுவின் மீதான தீர்ப்பிற்கு காலதாமதம் ஏற்படுவதைக்குறித்து எதிர்கட்சியான பா.ஜ.க சமீபத்தில் மத்திய அரசை விமர்சித்திருந்தது.அதேவேளையில், கருணை மனுக்களில் தீர்ப்பு வழங்குவதில் கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை என ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முன்னுரிமை அடிப்படையில் கருணை மனுக்களில் தீர்ப்பு வழங்கும் முறையை ப.சிதம்பரம் கடைபிடித்து வருகிறார்.13 மனுக்கள் இதுவரை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.ஒன்பது மனுக்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன

கோல்ட் ஸ்டோன் அறிக்கையை ரத்துச்செய்யவேண்டும்-இஸ்ரேல்

golston
ஜெருசலம்:2008-09 காலக்கட்டத்தில் இஸ்ரேல் காஸ்ஸாவில் நடத்திய மிகக்கொடூரமான தாக்குதல் தொடர்பாக ஐ.நா சபையினால் நியமிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா நீதிபதி கோல்ட்ஸ்டோன் தலைமையினாலான விசாரணை கமிஷன் இஸ்ரேல் காஸ்ஸாவில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தியதாக கண்டறிந்தது.இந்த அறிக்கையை தயார் செய்த கோல்ட்ஸ்டோன் தனக்கு தவறு ஏற்பட்டிருக்கலாம் எனக்கூறியிருப்பதால் இவ்வறிக்கையை ரத்துச்செய்ய இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.
கோல்ட்ஸ்டோன் நேற்று முன்தினம் வாஷிங்டன் போஸ்டில் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.தற்பொழுது என்னால் புரிந்துகொள்ளப்பட்ட விஷயங்கள்  அன்றைக்கு எனக்கு தெரிந்திருந்தால் எனது அறிக்கை வேறுவிதமாக அமைந்திருக்கும் என கோல்ட்ஸ்டோன் தெரிவித்திருந்தார்.
இச்சூழலில் கோல்ட்ஸ்டோனின் அறிக்கையை வரலாற்றின் குப்பைக்கூடையில் தூக்கி எறிய வேண்டுமென இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
2008-09 காலக்கட்டத்தில் இஸ்ரேல் நடத்திய மிக அரக்கத்தனமான தாக்குதலில் பெண்களும், குழந்தைகளும் உட்பட அப்பாவி மக்கள் 1400 பேர் படுகொலைச்செய்யப்பட்டனர்.சர்வதேச அளவில் தடைச்செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை காஸ்ஸாவில் உபயோகித்தது இஸ்ரேலின் சியோனிஷ அரசு.

லிபியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சி.ஐ.ஏ ஏஜண்ட்-சண்டே எக்ஸ்பிரஸ்

cia
லண்டன்:லண்டனில் அபயம் தேடியுள்ள லிபியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா கவ்ஸா சி.ஐ.ஏ மற்றும் பிரிட்டீஷ் உளவுத்துறையின் ஏஜண்டாக இருக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.பிரிட்டனின் எம்.16 பிரிவின் தலைவர் ஜான் ஸ்டார்லட்டுடன் 2001-ஆம் ஆண்டு கவ்ஸா சந்தித்திருந்தார்.இந்த சந்திப்பு லண்டனில் வைத்து நடந்தது.அவ்வேளையில் திரிபோலியில் ஒரு பிரிட்டீஷ் ஏஜண்டை செயல்பட அனுமதிக்கலாம் என கவ்ஸா ஒப்புக்கொண்டதாக ’தி சண்டே எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
லிபியாவில் அல்காயிதாவின் செயல்பாடுகளை கண்காணிப்பது என்ற பெயரில் பிரிட்டீஷ் உளவாளிக்கு அனுமதி வழங்கப்பட்டது.நேற்று முன்தினம் கவ்ஸா துனீசியாவிலிருந்து பிரிட்டனுக்கு வந்தார்.முஅம்மர் கத்தாஃபியின் நம்பிக்கைக்குரியவரான கவ்ஸாவின் மனமாற்றம் திடீரென ஏற்பட்டதல்ல என செய்தி கூறுகிறது.
1988-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் லாக்கர்பியில் பானாம் விமானத்தை குண்டுவைத்து தகர்த்ததில் கவ்ஸாவுக்கு பங்குண்டு என குற்றச்சாட்டு எழுந்தது.இச்சம்பவத்தில் 270 பேர் கொல்லப்பட்டனர்.பிரிட்டனுக்கு சென்றுள்ள கவ்ஸாவிடம் இதுத்தொடர்பாக விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

சிரியா:ஆதில் ஸஃபர் பிரதமராக நியமனம்

adel safar
டமாஸ்கஸ்:சிரியாவில் புதிய அமைச்சரவை தலைவராக முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் ஆதில் ஸஃபரை அதிபர் பஸ்ஸார் அல் ஆஸாத் பிரதமராக நியமித்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது.ஸஃபர் தனது அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இரண்டு தினங்களுக்குள் தெரிவிப்பார் என உயர்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸஃபர் மிதவாதி என கருதப்படுகிறார்.இதற்கிடையே, தராவில் பலர் உயிரிழக்க காரணமான சம்பவத்தை குறித்தும், சிரியாவில் பல வருடங்களாக அமுலிலிருக்கும் அவசரச்சட்டம் வாபஸ் பெற்றால் உருவாகும் நிலைமைகளைக் குறித்தும் ஆராய அரசு இரண்டு குழுக்களை நியமித்துள்ளது.

ஒரு தாயின் விடைத்தெரியாத வினாக்கள்

safia1
கண்ணூர் மைதானப்பிள்ளில் என்ற வீட்டில் இமைகளில் கண்ணீர் வற்றாத ஒரு தாய் வசிக்கிறார்.மகனின் இறந்த உடலை கூட பார்க்கமாட்டேன் எனக்கூறி செய்திகளில் இடம்பிடித்த அந்த தாய்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு -’தேச துரோகியான எனது மகனின் இறந்த உடலை காணவிரும்பவில்லை எனக்கூறிய ஒரு தாயின் நாடுதான் இது’ என்ற வாசகத்துடன் இந்த தாயின் சித்திரம் கேரள மாநிலத்தின் சுவர்களில் இடம்பிடித்திருந்தது.கஷ்மீரில் ராணுவத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஃபயாஸ் என்ற இளைஞரின் அன்னையான ஸஃபியாதான் அந்த தாய்.சிரமத்துடன் பெற்று கஷ்டப்பட்டு வளர்த்த மகனின் இறந்த உடலைக்கூட பார்க்கமாட்டேன் என இந்த தாயைக்கொண்டு கூறவைத்தது யார்?நெஞ்சில் கனன்றுக்கொண்டிருக்கும் நெருப்பை தனது கண்ணீரால் அணைக்க முயன்றுக்கொண்டிருக்கும் ஸஃபியா உம்மா தனது உள்ளத்தை திறக்கிறார்.

பரிசுகளால் கவுரவிக்கப்படும் இந்திய வீரர்கள்

worl cup
28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்று பெருமை சேர்த்துள்ள இந்திய கிரிக்கெட் அணியினருக்கு வாழ்த்துகள், பாராட்டுகள் மட்டுமின்றி ஏராளமான பரிசுகளும் குவிந்து வருகின்றன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), மத்திய அரசு, பல்வேறு மாநில அரசுகள் ஆகியவை பரிசுகளை அறிவித்து வருகின்றன.
ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி:
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி வழங்குகிறது பிசிசிஐ.
பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50 லட்சமும், தேர்வுக்குழுவினருக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் அறிவித்துள்ளார்.
சச்சின், ஜாகீர்கானுக்கு ரூ.1 கோடி
மகாராஷ்டிர வீரர்கள் சச்சின், ஜாகீர்கான் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அம் மாநில முதல்வர் பிருதிவிராஜ் சவாண் அறிவித்துள்ளார்.
யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
சேவாக், நெஹ்ரா ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு விருது வழங்கப்படும் என்று ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.
ரயில்வே பாஸ்
இந்திய வீரர்களுக்கு ஆயுள்காலம் முழுவதும் இலவசமாக ரயிலில் (ஏ.சி. முதல் வகுப்பு) பயணம் செய்யலாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
டோனிக்கு ரூ. 2 கோடி
கேப்டன் டோனிக்கு ரூ.2 கோடியும், டில்லி வீரர்களான சேவாக், கம்பீர், நெஹ்ரா, கோலி ஆகியோருக்கு தலா ரூ.1 கோடியும் வழங்கப்படும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.
யுவராஜுக்கு “ஆடி’ கார்
உலகக் கோப்பையில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்து தொடர் நாயகன் விருதுபெற்ற அதிரடி சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜுக்கு காரை பரிசாக வழங்குகிறது சொகுசுக் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம். கார் விரைவில் யுவராஜிடம் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆடி காரைப் பரிசாக இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ். இதற்கு முன் 1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியபோது, அப்போதைய சகலதுறை ஆட்டக்காரர் ரவி சாஸ்திரிக்கு ஆடி கார் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் வீட்டுமனை
இந்திய வீரர்கள் அனைவருக்கும் பெங்களூர் பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வீட்டுமனை வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள சாலை ஒன்றுக்கு தோனியின் பெயரை சூட்டவுள்ளதாக மேயர் நடராஜ் தெரிவித்துள்ளார்.
டோனி பெயரில் மைதானம்
உத்தரகண்டில் கேப்டன் டோனி, சச்சின் ஆகியோருக்கு வீடு அல்லது வீட்டுமனை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். டோனி பெயரில் விளையாட்டு மைதானமும் அமைக்கப்படவுள்ளது.
ஜார்க்கண்டில் நிலம்
இந்திய கேப்டன் டோனிக்கு அவரது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் நிலம் வழங்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவில் பதவி உயர்வு
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தோனி, யுவராஜ், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தலைவரும், நிர்வாக இயக்குநருமான அரவிந்த் ஜாதவ் தெரிவித்தார்.
ஆனால் பதவி உயர்வு குறித்த விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
டோனி ராஞ்சியில் ஏர் இந்தியா அலுவலகத்தில் துணை மேலாளராக உள்ளார். அவருக்கு மேலாளராக பதவி உயர்வு வழங்கப்படலாம். யுவராஜ் சிங் சண்டீகர் அலுவலகத்தில் மேலாளராக உள்ளதால், முதுநிலை மேலாளராக பதவி உயர்வு பெறக்கூடும். துணை மேலாளராக உள்ள ஹர்பஜன் (அமிருதசரஸ்), ரெய்னா (டில்லி) ஆகியோருக்கு மேலாளராக பதவி உயர்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.
முனாப், பதானுக்கு விருது
குஜராத் மாநில வீரர்கள் முனாப் படேல், யூசுப் பதான் ஆகியோருக்கு விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான இகல்வயா விருது வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
வீரர்களுக்கு நிலம்
கோப்பையை வென்ற இந்திய வீரர்கள், பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா 300 சதுர அடி நிலம் வழங்குவதாக ராஜ்கோட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் பூபட் போடார் தெரிவித்துள்ளார்.
ரெய்னா, சாவ்லாவுக்கு விருது
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு உதவிய உத்தரப் பிரதேச வீரர்கள் சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லாவுக்கு கன்ஷிராம் சர்வதேச விளையாட்டு விருது வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதற்கும், கோப்பையை வென்றதற்கு ரெய்னா, சாவ்லாவின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களால் உத்தரப் பிரதேசமே பெருமையடைகிறது என மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.மேலும் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக மட்டுமின்றி, வரும் காலத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு விளையாடுவதற்கு உதவும் வகையில் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

எஸ்.டி.பி.​ஐ, ம.ம.க, தி.மு.க கூட்டணி வேட்பாளர்க​ளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆதரவு

Pfi_flag1
சென்னை:வருகின்ற தமிழக-புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
இதுக்குறித்து அவ்வியக்கத்தின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க பாடுபடுவது, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலைச்செய்ய பாடுபடுவது, வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்த பாடுபடுவது, உலமா வாரியத்திற்கு அதிக நிதி ஒதுக்க பாடுபடுவது, முஸ்லிம் இளைஞர்களுக்கு தொழில் துவங்க வட்டி இல்லா கடன் கிடைக்க பாடுபடுவது, பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் சமூகம், பழங்குடியின மக்கள் மற்றும் மீனவ சமூக நலனை பாதுகாக்க பாடுபடுவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சக்திப்படுத்த தமிழக தேர்தலில் களமிறங்கியிருக்கும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) போட்டியிடும் 8 இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் தனது முழு ஆதரவை வழங்குகிறது.
இதனடிப்படையில் எஸ்.டி.பி.ஐ போட்டியிடும் தொகுதிகளான துறைமுகம், தொண்டாமுத்துர், திருப்பூர் தெற்கு, பூம்புகார், ராமநாதபுரம், கடையநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் புதுவையில் நிரவி திருப்பட்டினம் ஆகிய 8 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்கி பணியாற்ற முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், சிறுபான்மை மக்களின் நலனுக்காகவும் பாடுபடும் மனித நேய மக்கள் கட்சி(ம.ம.க) போட்டியிடும் சேப்பாக்கம், ஆம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் முழு ஆதரவு வழங்க முடிவுச்செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நலனுக்காக பல வருடங்களாக அயராது பாடு பட்டுவரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.ஷெரீஃப் அவர்கள் போட்டியிடும் தொகுதியான அறந்தாங்கியில் முழு ஆதரவு வழங்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட 11 தொகுதிகளைத்தவிர இதர இடங்களில் சிறூபான்மை மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன் மீது அக்கறையுள்ள தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சகோதர வாஞ்சையுடன் பழகி, ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே வகுப்பு வாதத்தை தூண்டி, அவர்களிடையே மத துவேசத்தை வளர்த்து, அதில் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.கவுக்கு எதிராக, குறிப்பிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்து, அவர்களின் உண்மை முகமான பாசிசத்தையும், ஊழல் மற்றும் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அவர்கள் கடைப்பிடித்து வரும் இரட்டை நிலையையும் மக்களிடையே தோலுரித்து காட்டுவது என முடிவுச் செய்யப்பட்டது.
ஏற்கனவே தமிழகத்தில் மக்கள் பா.ஜ.கவை புறக்கணித்துவிட்ட்டனர் என்பதை கடந்த நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் பறைசாற்றிவிட்டன. தமிழகத்தில் தனது முகவரியை இழந்து நிற்கும் பா.ஜ.கவை மக்கள் இத்தேர்தலிலும் புறக்கணிக்கும் வகையில் பிரச்சாரம் செய்ய முடிவுச் செய்யப்பட்டது. மத துவேச கட்சியான பாரதீய ஜனதா கட்சியை  புறக்கணிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டையும் பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது.
மக்கள் அனைவரும் ஓட்டுரிமை என்ற தங்களது மிக முக்கியமான ஜனநாயக கடமையை முறையாக பயன்படுத்தி நல்லதொரு ஆட்சி மலர பாடுபடவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.’

Dua For Gaza