Monday, March 7, 2011

ஹோஸ்னி முபாரக் உலகின் மிகப்பெரிய பணக்காரர் - 'தி கார்டியன்'

லண்டன்,மார்ச்.7:எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று 'தி கார்டியன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு 7000 கோடி அமெரிக்க டாலர்கள் (ரூபாயில் சுமார் 3.22 லட்சம் கோடி) சொத்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

எகிப்து நாட்டின் அதிபராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தவர் முபாரக். சமீபத்தில் அந்த நாட்டில் நடந்த மக்கள் புரட்சியால் அவர் அதிபர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

இந்த நிலையில் லண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் பணக்காரராக ஹோஸ்னி முபாரக் இருக்கலாம் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது. ஹோஸ்னி முபாரக் இந்தப் பணத்தை ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள வங்கிகளிலோ அல்லது சொசுகு பங்களாக்கள், ஹோட்டல்களிலோ முதலீடு செய்திருக்கலாம் என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

மன்ஹாட்டன், பெவர்லிஹிஸ்ல் பகுதிகளில் அவருக்கு ஏராளமான சொத்துகள் இருப்பதாகத் தெரிகிறது என்றும், இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் அவர் தனது ஏராளமான பணத்தை முதலீடு செய்துள்ளார் என்றும் அல் கபர் என்ற பத்திரிகை முன்பு செய்தி வெளியிட்டிருந்தது. சொத்துப் பட்டியலில் மெக்ஸிகோவைச் சேர்ந்த தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் (5,350 கோடி அமெரிக்க டாலர்கள்), மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் (5,300 கோடி அமெரிக்க டாலர்கள்) ஆகியோர் ஹோஸ்னி முபாரக்குக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.

இதுகுறித்து டர்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டோபர் டேவிட்சன் கூறியதாவது: 'முபாரக் அதிபராக இருந்தபோது பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்துகொண்டார். வெளிநாட்டு நிறுவனங்களுடன் அவர் செய்துகொண்ட ஒப்பந்தங்களால் அவர் ஏராளமான சொத்துகளைச் சேர்த்தார் என்றார் அவர்.

ஹோஸ்னி முபாரக்கின் தெரிந்த சொத்து விவரமே 7 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் என்னும்போது, தெரியாத வகையில் அவருக்கு இன்னும் கூடுதலாக சொத்துகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
செய்தி:பாலைவனதூது 

Friday, March 4, 2011

அதிகாரியை காருடன் தீ வைத்து கொளுத்திய கொடூரம்!

ஒரிசா மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில், தொழிலாளர் பிரச்சனை காரணமாக, காரில் வந்த அதிகாரியை மடக்கி, காருடன் தீ வைத்து கொளுத்திய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரிசா மாநிலம் பாலாங்கிர் மாவட்டம் டிட்லாகர் என்ற இடத்தில் தனியார் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். சில மாதங்களுக்கு முன் 14 நிரந்தர தொழிலாளர்கள், 45 ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

சஸ்பெண்டு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரியும், சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தொழிற்சாலை முன்போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது தொழிற்சாலையின் துணைப் பொதுமேலாளர் ராதேஷியாம்ராய், மதிய உணவிற்குச் செல்வதற்காக ஒரு ஊழியருடன் காரில் வெளியே வந்தார். உடனே தொழிலாளர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். திடீர் என்று ஆவேசம் அடைந்த தொழிலாளர்கள் காரில் இருந்த ஊழியரையும், ஓட்டுனரையும் வெளியேற்றினார்கள்.

அதிகாரியை மட்டும் காருக்குள் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் கார் தீப்பற்றி எரிந்தது. அருகில் வசிக்கும் பொதுமக்கள் சிலர்  ஓடி வந்து அதிகாரியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 90 சதவிகித தீக்காயங்களுடன் இருந்ததால் வழியிலேயே அவர் இறந்தார்.   இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர்.

காவலர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதிகாரி எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக தொழிற்சங்க தலைவர் உள்பட 30 தொழிலாளர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
 
மசூதி வாசல் முன்பு ரவுடி கும்பல் போதை பொருட்கள் விற்பனை செய்வதால் பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கலகம் மூளும் அபாயமும் அதிகரித்துள்ளது.
குமரிமாவட்டம் நாகர்கோவிலுள்ள இடலாக்குடி பகுதி முஸ்லிம் இன மக்கள் பெருபான்மையாக வாழும் பகுதியாகும். இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. இவற்றில் பிரதானமான பள்ளி வாசல் பாவாகாசிம் பள்ளி வாசல் ஆகும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பள்ளிவாசல் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பல்வேறு சிறப்புமிக்க பள்ளிவாசலின் முன் பகுதி தற்போது போதை மருந்துகள்  வியாபாரத்திற்கும் இளைஞர்கள் மது அருந்தி கூத்தடிக்கும் பகுதியாகவும்  மாறி உள்ளது குறித்து  இடலாக்குடி வாழ் பொதுமக்கள் பெரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது 15க்கும் மேற்பட்ட போதை பொருள் விற்கும் கும்பல் அப்பகுதிக்கு வருகிறது. இவர்களுக்கு உள்ளூர் ஏஜண்டுகள் சிலர் உதவி செய்கின்றனர். இந்தக் கும்பல் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கஞ்சா, பிரவுண்சுகர் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். படிக்கும் இளைஞர்களை எளிதில் இந்தக் கும்பல் தனது வலைக்குள் சிக்க வைத்து விடுகிறார்கள். வெளிநாட்டில் தந்தை வேலை  பார்ப்பதால் கையில் அதிக பணம் புழங்கும் இப்பகுதி இளைஞர்கள்  தங்களது எதிர்காலத்தை அதல பாதாளத்திற்குத் தள்ளும் இத்தகைய போதைப்பொருள் கும்பலின் கைகளில் எளிதாக சிக்கி விடுகிறார்கள்.

சமூகத்தைச் சீரழிக்கும் இப்பாதக‌ செயல் குறித்து வெளிப்படையாக பேசுவதற்குக்கூட அச்சப்படும் அளவுக்கு ரவுடி கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இவர்கள்மீது காவல்துறை கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

துனீசியா: 'அல் நஹ்தா' இஸ்லாமிய இயக்கத்தின் மீதான தடை நீக்கம்

துனீஸ்,மார்ச்.4:துனீசியாவில் நாட்டை விட்டு வெளியேறிய சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலியால் தடைச்செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கமான அல்நஹ்தாவின் தடையை துனீசிய அரசு நீக்கியுள்ளது. அல் நஹ்தா செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

துனீசியாவில் மக்கள் எழுச்சியால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து 20 வருடமாக வெளிநாட்டில் வாழ்ந்திருந்த அல் நஹ்தாவின் தலைவர் ராஷித் அல் கன்னோஷி நாடு திரும்பியிருந்தார்.

துனீசியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட பிரதான கோரிக்கைகளில் ஒன்று அல்நஹ்தாவின் தடையை நீக்குவதாகும்.

1989-ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் மோசடிகள் நடந்த பிறகும் அல் நஹ்தா இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றிப் பெற்றது. ஆனால், இதனை அங்கீகரிக்காமல் ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் சர்வாதிகார அரசு அல்நஹ்தாவுக்கு தடை விதித்தது. அதன் ஊழியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

குடியுரிமை மீறல்களுக்கெதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி

புதுடெல்லி,மார்ச்.4:குடியுரிமைகளை பாதுகாப்பதற்கான டெல்லியில் நடந்துவரும் ஒருவார கால பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர்மந்தரில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பேரணி நடைபெற்றது.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்தல், டாக்டர் பினாயக் சென்னை விடுவித்தல், கறுப்புச் சட்டங்களை வாபஸ் பெறுதல், பாட்லா ஹவுஸ் போலி மோதல் கொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடத்தப்பட்டது.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டெல்லி, அலிகர், ஜாமிஆ மில்லியா ஆகிய பல்கலைக்கழகங்களில் கருத்தரங்கங்களும், இதர நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந்தியாவில் மக்களின் குடியுரிமைகளை பாதுகாப்பதற்காக மாணவர் சமூகம் களமிறங்க வேண்டுமென ஜந்தர்மந்தரில் நடந்த பேரணியில் கலந்துக்கொண்ட கேம்பஸ் ஃப்ரண்டின் டெல்லி மாநிலத் தலைவர் ஆலம் அஃப்தாப் உரைநிகழ்த்தினார்.

தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது அனீசுர் ரஹ்மான் இப்பேரணியில் பங்கேற்றார்.

நஜ்முத்தீன் அர்பகானுக்கு கண்ணீருடன் விடை....

இஸ்தான்புல்,மார்ச்.2:கடந்த பிப்.27-ஆம் தேதி மரணமடைந்த நவீன துருக்கியின் இஸ்லாமிய அரசியல் எழுச்சியின் சிற்பியும், முன்னாள் பிரதமருமான நஜ்முத்தீன் அர்பகானின் இறுதியாத்திரையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அவருடைய உடல் ஜனாஸா (மரணிப்போருக்காக நடத்தப்படும் பிரார்த்தனை) தொழுகைக்குப் பிறகு இஸ்தான்புல்லில் மர்கஸ் அஃபந்தி மண்ணறை மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான், அதிபர் அப்துல்லாஹ் குல் உள்பட ஆளுங்கட்சி தலைவர்களும், பல்வேறு அரசியல் மற்றும் கலாச்சார பிரமுகர்களும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்றனர்.

இதய அதிர்ச்சியின் மூலம் மரணமடைந்த நஜ்முத்தீன் அர்பகானின் உடலை இறுதியாக காண்பதற்காக் பெண்கள், சிறுவர்கள் உள்பட நாட்டின் பல்வேறு துறைகளை சார்ந்த மக்கள் அங்காராவில் குழுமியிருந்தனர்.

அங்காரா, இஸ்தான்புல் நகரங்கள் கண்ணீரை உதிர்த்துக் கொண்டு ராணுவ பயங்கரவாதம் மற்றும் மதசார்ப்பற்ற தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு மத்தியில் களத்தில் நின்று உறுதியாக பணியாற்றிய அர்பகான் என்ற திடமான இஸ்லாமிய ஆளுமைக்கு இறுதி விடையை அளித்தன.

அர்பகானின் இறுதிச்சடங்கில் துனீசியாவின் அந்நஹ்தா இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் ராஷித் அல் கன்னோஷி, எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான முஹம்மது மஹ்தி அகஃப், இந்தோனேசியாவின் ப்ராஸ்பரஸ் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர் லுத்ஃபி ஹஸன் இஸ்ஹாக், இந்தியாவின் ஜமாஅத்தே இஸ்லாமிய இயக்கத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் கெ.எ.சித்தீக் உள்பட பல வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டனர்.

கோத்ரா வழக்கை மறுவிசாரணைச் செய்யவேண்டும் - பிரசாந்த் பூஷண்

புதுடெல்லி,மார்ச்.3:கோத்ரா ரெயில் எரிப்பைக் குறித்து மறுவிசாரணை நடத்தவேண்டுமென பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.

2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 31 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு 62 பேர் விடுதலைச் செய்யப்பட்ட சூழலில் பிரசாந்த் பூஷண் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

தவறான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தவறான தீர்ப்பை கோத்ரா சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ளது என பிரசாந்த் பூஷண் கூறுகிறார்.

'தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடுச் செய்ய முடியுமென்றாலும், கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைக் குறித்து ஒரு மறுவிசாரணை நடத்தவேண்டும். தவறான சூழலில் எழுந்த வழக்கு இது. மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மீது தீவைப்பு குற்றம் சுமத்தியதில் ஒரு நியாயமுமில்லை. அது போதாது என அவர்கள் மீது கொலைக் குற்றமும், சதித்திட்டம் தீட்டிய குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது.' என பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு தடைவிதிக்க வேண்டும் -இஸ்ரேல்

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை தடைச்செய்ய வேண்டுமென இஸ்ரேல் எகிப்தின் ராணுவ ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தீவிரவாத குழுவாகும். தேர்தலில் போட்டியிட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு இஸ்ரேலிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டேனி அயனேண் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி:கூத்தாநல்லூர் முஸ்லீம்ஸ் 

தேர்தல் அறிவிக்கப்பட்ட 4 மாநிலங்களில் SDPI

அஸ்ஸாம் மாநிலம் தவிர தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களிலும் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவுக்கு வருகைப்புரிந்துள்ள இ.அபூபக்கர் கல்ஃப் தேஜஸுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: "வாய்ப்புள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி SDPI-ன் மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவை தேடுவதே லட்சியமாகும். கட்சி முன்வைக்கும் அரசியல் சித்தாந்தத்தை அங்கீகரிக்கும் விதத்தில் தேர்தலை பயன்படுத்துவோம்.

இந்தியாவில் ஜனநாயகம் விற்பனை சரக்காக மாறிவிட்டது. கார்ப்பரேட்டுகளின் எண்ணங்களுக்கு களமாக மாறியுள்ளது இந்திய அரசியல். தேர்தலில் வேட்பாளர்களை நிர்ணயிப்பதிலும், சட்டமியற்றும் சபைகளில் கேள்வி கேட்பதற்கும் அடிப்படை காரணியாக பணம் மாறிவிட்டது. இச்சூழல் மாறவேண்டும்.

ஜனநாயகம் மற்றும் மதசார்ப்பற்ற கொள்கையின் உண்மையான தன்மை மக்களிடம் சென்றடைய வேண்டும். சிலரை சுரண்டவும், பலருக்கு துரோகம் செய்வதற்கும் உதவுவது அல்ல ஜனநாயகம். மக்கள் நலத்திட்டங்கள், பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் அனைத்து பிரிவு மக்களுக்கும் நல்லவிதமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் SDPI லட்சியமாக கொண்டுள்ளது." இவ்வாறு இ.அபூபக்கர் தெரிவித்தார்.

லிபியா மக்கள் எழுச்சிக்கு சவூதி மார்க்க அறிஞர்கள் ஆதரவு

லிபியா நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபிக்கு எதிராக அந்நாட்டில் கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு சவூதி அரேபிய நாட்டின் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

லிபியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் துவங்கிய சில தினங்களில் சவூதி அரேபியாவைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள் லிபியாவுக்கு வருகைத் தந்து கத்தாஃபிக்கு எல்லாவித ஆசீர்வாதங்களும் வழங்கியதாக அவரது ஸைஃபுல் இஸ்லாமின் அறிக்கையை மறுத்த மார்க்க அறிஞர்கள் லிபியா முழுவதும் நடைபெறும் போராட்டத்திற்கு தங்களது பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் மார்க்க அறிஞர்கள் சபையின் உறுப்பினரான ஷேக் ஸாலிஹ் அல் லெய்தான், தான் லிபிய மக்கள் எழுச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மக்களுடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு லிபியாவுக்கு சென்றதாகவும், கத்தாஃபிக்கு புகழாரம் சூட்டுவதற்கல்ல எனவும் இன்னொரு மார்க்க அறிஞரான ஷேக் ஆதில் அல் கர்னி தெரிவித்துள்ளார்.

லிபியாவில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் போராட்டம் குறித்து ஷேக் ஸாலிஹ் அல் லெய்தான் தெரிவிக்கையில்,கத்தாஃபியின் ஆட்சி இஸ்லாமிய ஆட்சி அல்ல. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸன்னூஸி மன்னரை கிளர்ச்சியின் மூலம் அகற்றிவிட்டு ஆட்சியை கைப்பற்றிய கத்தாஃபி அதற்கு பின்னர் மக்களின் அங்கீகாரத்தை பெறவேயில்லை எனக்கூறினார். இச்செய்தியினை பிரபல உள்நாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது.

நபிகளாரின் பொன்மொழிகளை நிராகரிக்கும் கத்தாஃபியை அங்கீகரிக்க முடியாது என்பது சவூதி மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். திருக்குர்ஆன் மட்டும் போதும் என கத்தாஃபி கூறியுள்ளார். மார்க்க அறிஞர்களின் ஏகமனதான தீர்மானத்தை(இஜ்மாஃ) கத்தாஃபி அங்கீகரிக்கவில்லை. உண்மையான முஸ்லிமோ அல்லது இமாமாகவோ(தலைவர்) இல்லாத அறிவுக்கெட்ட பதூவிய தலைவர்தான் கத்தாஃபி என மார்க்க அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி:கூத்தாநல்லூர் முஸ்லீம்ஸ் 

Dua For Gaza