Thursday, February 3, 2011

அடுத்து மக்கள் புரட்சி எற்படும் நாடு இந்தியா!! அதிர்ச்சி தகவல்!!!


பிப்,2: எகிப்தில் 30 ஆண்டுகளாக தொடரும் அடக்குமுறை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர லட்சக்கணக்கான மக்கள் அணி திரண்டுள்ளனர். ராணுவத்தை களமிறக்கிய போதும் அவர்கள் மக்களுடன் இணைகின்றார்கள் என செய்திகள் வெளிவருகின்றன. ஊரடங்கு உத்தரவு பலனற்று போனது. போராட்டத்திற்கு தலைமையேற்க வந்த அல்பராதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இணையதளம் முடக்கப்பட்டது. அல்ஜஸீராவுக்கு தடை விதித்த பொழுதும் தொடர்ந்து செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டுதான் இருக்கிறது. கெய்ரோவின் கட்டுப்பாடு முபாரக்கின் கைகளிலிருந்து நழுவிவிட்டது. 1979 ஆம் ஆண்டு ஈரான் புரட்சியுடன் தற்போதைய எகிப்திய மக்கள் திரள் போராட்டத்தை அரசியல் நோக்கர்கள் ஒப்பிடுகின்றனர்.

ஜனநாயக நாடுகள் என்ற முகவரியில் இன்று உலகில் அறியப்படும் பெரும்பாலான நாடுகளுக்கு எகிப்தின் மக்கள் புரட்சி ஒரு பாடமாக அமையவேண்டும். அந்த வரிசையில் அடுத்து இருப்பது இந்தியாதான். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னை கூறி கொண்டாலும் அங்குதான் மனித உரிமை மீறல்களும், அப்பாவிகளை அநியாயமாக சிறையில் அடைப்பதும், ஏகாதிபத்திய அழிவு சக்திகள், கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும் நடந்துவருகிறது. சமீபத்தில் ட்ரான்ஸ் ப்ரன்சி இண்டர் நேசனல் வெளியிட்ட பரிசுத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்தது 3.3 மதிப்பெண்கள். எகிப்திற்கு கிடைத்த மதிப்பெண் 3.1 ஆகும். இதனை இந்தியா கவனத்தில் கொள்ளவேண்டும். மக்களை அந்நியர்களாக மாற்றிவிட்டு ஆட்சியில் நீண்டகாலம் தொடரலாம் என எவரும் கனவு காணவேண்டாம் என்பதைத்தான் எகிப்தின் மக்கள் புரட்சி நமக்கு உணர்த்துகிறது.
 
NEWS : SINTHIKKAVUM

Tuesday, February 1, 2011

எல்லாம் குழந்தைகளுக்காக...


வெள்ளைமுடி, கன்னத்தில் சுருக்கம், மெலிந்த தேகம், உடமை என்று சொல்லிக் கொள்ள வியாதிகள், குடும்பத்தை பிரிந்து வெகு தொலைவில்... இரவு பகல் பாராமல், வெயில், குளிர் என வேற்றுமை பாராட்டாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பலரை நாம் தினந்தோறும் கண்டுவருகிறோம்.

சம்பாதிப்பதே அரை சாண் வயிற்றுக்குதான் என்றாலும் இவர்களில் பலர் நேரத்திற்கு உணவருந்துவதில்லை. மாத இறுதியில் கிடைக்கும் சம்பளத்திற்காக முன்பின் தெரியாதவர்களிடம் ஏச்சுகளையும் பேச்சுகளையும் கேட்கும் அவலம்... இவை அனைத்தையும் இவர்கள் சகித்து செல்வதற்கு எதற்காக?

நான் நன்றாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், விதவிதமான உடைகளை அணிய வேண்டும், உலகை சுற்றி வர வேண்டும் என்பதற்காகவா? இக்கேள்விக்கு பலரும் அளித்த பதில் ஒன்றுதான்.. 'எல்லாம் என் குழந்தைகளுக்காக, அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக'.தன்னுடைய குழந்தைகள் எப்படி வாழப்போகிறார்கள் என்பதை இவர்களில் பலரும் கண்ணால் காண்பது கூட கிடையாது. தன்னுடைய வயதான காலத்தில் தன்னை இவர்கள் கவனிப்பார்களா என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. வியர்வையை சிந்தும் இவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பது இல்லை. இருந்த போதும் 'எல்லாம் குழந்தைகளுக்காக'. இதைத்தான் ஆங்கிலத்தில் அழகாக கூறுவார்கள், 'Fathers work for their children' என்று. இவ்வாறு குழந்தைகளுக்கு உழைக்கும் ஒவ்வொருவரும் தன்னுடைய பார்வையை சற்று விசாலமாக்கினால் எப்படி இருக்கும்?

இன்று நம்முடைய சமுதாயத்தின் நிலையை சற்று கண் முன் கொண்டு வருவோம். வறுமை, கல்வியின்மை, வரதட்சணை, ஊடகங்களில் இருட்டடிப்பு, போலி என்கௌண்டர், இனப்படுகொலை, மஸ்ஜித் இடிப்பு... என சொல்லிக்கொண்டே போகலாம். இதனை தீர்க்க நாம் என்ன செய்துள்ளோம். இதனை கேட்டவுடன் பலரும் தரும் பதில், 'இதெல்லாம் உடனே தீர்க்க கூடிய விஷயங்கள் இல்ல, நாம என்ன செய்ய முடியும்?.'

அழகான ஒரு வரலாற்று நிகழ்வு இத்தருணத்தில் நினைவுக்கு வருகிறது. முஸ்லிம்களின் தலைமையான கிலாஃபத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த நேரம். இதற்காக சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அருமையான பயிற்சிகள். இறுதியாக திட்டத்தை விளக்கியவன் கூறினான், 'இது இருநூறு ஆண்டு திட்டம்'. கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் கேட்டான், 'இருநூறு ஆண்டுகள் கழித்து நான் இதனை அனுபவிக்க போவது இல்லை. அப்படியிருக்கும் போது நான் எதற்காக இந்த வேலையை செய்ய வேண்டும்?' இதற்கு அந்த தலைவன், இவர்களின் தியாகத்தால் இஸ்லாம் எவ்வாறு கீழிறக்கப்பட்டு ஆங்கிலேயர்களின் கை மேலோங்கும் என்பதை விளக்கி விட்டு கூறினான், 'Fathers work for their children'. தீட்டிய திட்டத்தை நிறைவேற்றினார்கள், கிலாஃபத்தை ஒழித்தார்கள்.

தற்போது நமது நிலை என்ன? தனி வாழ்வில் சுயநலத்தை விரும்பாத நாம் பொதுவாழ்விலும் அதனை பின்பற்ற தயங்குவது ஏன்? நான்கு நபர்கள் ஒன்று சேர்ந்தால் ஒரு குடும்பத்தின் வறுமையை போக்கலாம். வசதியின்றி தவிக்கும் மாணவர்களின் படிப்பிற்கு வழிவகை செய்யலாம். இளைஞர்கள் முன்வந்தால் வரதட்சணையை இல்லாமல் ஆக்கலாம். ஆக்கப்பூர்வமாக சிந்திப்பவர்கள் ஒன்றிணைந்தால் ஊடகத்தை நமதாக்கலாம். சமுதாயம் சிறிது முன்வந்தால் பாசிசத்தை பின்னுக்கு தள்ளலாம்... இப்படி கூறிக்கொண்டே செல்லலாம்.

இதில் சிலவற்றின் பலனை நாம் அனுபவிக்காவிட்டாலும் நமது சந்ததிகள் அதனை அனுபவிப்பார்கள். எங்களின் முன்னோர்கள் எதையும் செய்யவில்லை என்ற பழிச்சொல்லில் இருந்தும் தப்பிக்கலாம்.

சிந்ததைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் நேரமிது.
ஏர்வை ரியாஸ்

பாப்ரி மஸ்ஜித்:தமிழகத்தில் சிறப்புடன் நிறைவுற்ற பாப்புலர் ஃப்ரண்டின் பிரச்சாரம்

சென்னை,ஜன.31:பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டவேண்டும், லிபர்ஹான் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக்கோரி கடந்த இரண்டு மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவிலான பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

இப்பிரச்சார நிகழ்ச்சியின் இறுதியாக தமிழகத்தில் சென்னை, திருவாரூர், திண்டுகல், நாகர்கோவில், கோவை ஆகிய நகரங்களில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.

நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் என்.சி.ஹெச்.ஆர்.ஒ மாநிலத் தலைவர் பவானி ப.மோகன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் மற்றும் மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்ஸாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்-

யெமன் நாட்டில் போராட்டம் உச்சக்கட்டம்

ஸன்ஆ,ஜன.31:யெமன் நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் ராஜினாமாச் செய்யக்கோரி நடைபெறும் மக்கள் திரள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தலைநகரான ஸன்ஆவில் எகிப்து நாட்டு தூதரகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்ட புரட்சியாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். ஆனால் எவரும் காயமடைந்ததாக தகவல் இல்லை.

சர்வாதிகாரி ஸாலிஹ் ராஜினாமாச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என யெமன் நாட்டின் பிரபல பெண் தலைவரான தவக்குல் கர்மான் அறிவித்துள்ளார்.

யெமன் நாட்டின் தெற்கு பகுதியில் ஜனநாயகவாதிகளும், வடக்கு பகுதியில் ஷியா புரட்சியாளர்களும், பாராளுமன்ற எதிர்கட்சியினரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துகின்றனர் என தவக்குல் கர்மான் தெரிவித்தார்.

இஸ்லாமிய கட்சியான அல் இஸ்லாஹ் மற்றும் யெமன் நாட்டின் பிரபல மனித உரிமை அமைப்பின் தலைவர்தான் தவக்குல் கர்மான். யெமன் நாட்டில் 1978 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் தொடரும் ஸாலிஹின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகத்தான் மக்கள் திரள் போராட்டம் நடந்துவருகிறது.

செய்தி:மாத்யமம்-

ஹுஸ்னி முபாரக்கிற்கு இஸ்ரேல் ஆதரவு

டெல்அவீவ்,பிப்.1:எகிப்து நாட்டு அதிபர் ஹுஸ்னி முபாரக்கை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென இஸ்ரேல் கூறியுள்ளது.

எகிப்திலும், மேற்காசியாவிலும் ஸ்திரத்தன்மை(?)யை நிலைநாட்டுவதில் முபாரக்கை ஆதரிப்பது அவசியம் என இஸ்ரேல் கூறியுள்ளது.

இதுத்தொடர்பாக அழுத்தம் கொடுப்பதற்கு முக்கிய நாடுகளில் தங்களின் தூதரக பிரதிநிதிகளுக்கு அவசர செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக ஹாரட்ஸ் பத்திரிகை கூறுகிறது.

ஆட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ளாததை காரணங்காட்டி முபாரக்கை மேற்கத்திய நாடுகள் விமர்சித்திருந்தன. இதனால் நெருக்கடியான காலக்கட்டத்தில் முபாரக் தனிமைப்படுத்தப்பட்டார்.

அமெரிக்காவின் உற்ற தோழனான முபாரக் இஸ்ரேலுக்கும் நெருக்கமானவர்தான். காஸ்ஸாவின் மீது தடை ஏற்படுத்தும் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எல்லாவித ஒத்துழைப்பையும் அளித்தவர் முபாரக்.

எகிப்தில் ஏற்பட்டுள்ள மக்கள் திரள் போராட்டம் ஆட்சி மாற்றத்திற்கு காரணமானால் அது தங்களையும் பாதிக்கும் என இஸ்ரேல் அஞ்சுகிறது. எகிப்தின் நிலைமைகளைக் குறித்து மதிப்பீடுச்செய்ய இஸ்ரேலின் ராணுவ தலைமை அவசரக் கூட்டத்தை கூட்டியது. முபாரக்கின் ஆட்சி கவிழ்ந்தால் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல மணிநேரம் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

எகிப்தின் நிலைமைகள் குறித்து நாங்கள் கவலையுடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளாக இஸ்ரேலின் கூட்டாளியான முபாரக்கை இழந்து விடுவோமா? என இஸ்ரேல் கவலையில் உள்ளது. எகிப்திலிருந்து காஸ்ஸாவிற்கு செல்லும் எல்லைப் பகுதிகளில் கட்டுப்பாடு பல இடங்களிலும் சீர்குலைந்துவிட்டது. ஹமாஸ் இயக்கம் இவ்வழிகள் மூலம் ஆயுதங்களை கடத்துவதற்கான வாய்ப்புகளைக் குறித்தும், எகிப்து நாட்டு சிறையிலிருந்து வெளியேறிய ஹமாஸ் போராளிகள் காஸ்ஸாவிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகளும் இஸ்ரேலின் தூக்கத்தை கெடுத்துள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்-

அல்ஜஸீரா தொலைக்காட்சி சேனலின் உபகரணங்கள் பறிமுதல்

கெய்ரோ,பிப்.1:எகிப்து நாட்டில் நடந்துவரும் மக்கள் திரள் போராட்டத்தை தொடர்ந்து ஒளிபரப்பிவரும் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. ஆனால், அதனையும் மீறி அல்ஜஸீரா எகிப்து நாட்டில் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் 6 செய்தியாளர்களை எகிப்து அரசு கைதுச் செய்தது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களிடமிருந்து கேமரா உள்பட உபகரணங்களை எகிப்து நாட்டு ராணுவம் பறிமுதல் செய்துள்ளது.

எகிப்து அரசின் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உண்மையை வெளிக்கொணரும் எங்களுடைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அல்ஜஸீரா செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நைல்ஸாட் மூலமாக அல்ஜஸீரா ஒளிபரப்புவதை எகிப்து அரசு தடைச் செய்திருந்தது. எகிப்து ரேடியோ மற்றும் தொலைக்காட்சிக்கு உரிமையானதுதான் நைல்ஸாட். அதேவேளையில், பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் எகிப்து அதிகாரிகளின் நடவடிக்கையை இண்டர்நேசனல் ப்ரஸ் இன்ஸ்ட்யூட் கண்டித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்-

அமெரிக்க அதிகாரிக்கு மரணத்தண்டனை விதிக்கக்கோரி பாகிஸ்தானில் பேரணி

இஸ்லாமாபாத்,பிப்.1:இரண்டுபேரை சுட்டுக் கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரிக்கு மரணத் தண்டனை வழங்கக்கோரி நூற்றுக்கணக்கான மக்கள் லாகூர் நகரத்தில் போராட்டம் நடத்தினர்.

அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து அந்நாட்டு தூதரக அதிகாரியை விடுவிக்கக் கூடாது என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அவரை போலீசார் கைதுச் செய்துள்ளனர். கைதுச் செய்யப்பட்ட அவர் சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்ததாக போலீசார் குற்றஞ்சாட்டினர்.

அமெரிக்க அதிகாரி வழிப்பறிக் கொள்ளையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளத்தான் துப்பாக்கியால் சுட்டார் எனவும், எனவே அவரை விடுதலைச்செய்ய வேண்டுமென அமெரிக்கா முன்னர் பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

டேவிஸிற்கு தூதரக பிரதிநிதிகளுக்கான சிறப்பு சலுகை உண்டு என வாதித்தது அமெரிக்கா. ஆனால், பாகிஸ்தான் இதனை மறுத்ததோடு துப்பாக்கியை கைவசம் வைத்திருக்கும் உரிமை இல்லை என தெரிவித்தது. இதற்கிடையே, டேவிஸை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவேண்டும் எனக்கோரும் மனுவில் லாகூர் உயர்நீதிமன்றம் அரசின் நிலைப்பாட்டை ஆராய்ந்தது.

பஞ்சாப் மாகாண அட்டர்னி ஜெனரல் , அட்வக்கேட் ஜெனரல் ஆகியோரிடம் இன்று, நீதிமன்றத்தில் ஆஜராகி பதிலளிக்க இம்மனுவில் வாதத்தை கேட்ட முதன்மை நீதிபதி இஜாஸ் அஹ்மத் சவ்தரி உத்தரவிட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் -

கேலி செய்ததால் ஆத்திரம்: தனது 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க தாய்!!!

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வடக்கு தம்பா பகுதியை சேர்ந்தவர் ஜூலி ஸ்னெக்கர். இவரது கணவர் அமெரிக்க ராணுவத்தில் அதிகாரியாக உள்ளார். இவர்களுக்கு பீயூ (13) என்ற மகனும், காலிஸ் (16) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் தாஸ் ஜூலியின் பேச்சை கேட்பதில்லை. ஏதாவது கூறினால் அவரை பின்னால் நின்றபடி கேலியும், கிண்டலும் செய்து வந்தனர்.

இதனால், தனது குழந்தைகள் மீது ஜூலிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இவர்களை கொலை செய்ய அவர் திட்டமிட்டார். அதற்காக, கடந்த 5 நாட்களுக்கு முன்பு 38 காலிடர் ரக துப்பாக்கியை விலைக்கு வாங்கினார். அதை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தார். சம்பவத்தன்று குழந்தைகள் வழக்கம் போல் அவரை கேலி பேசி கிண்டல் செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜூலி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவர்களை சுட்டார். இதனால் பயந்த அவர்கள் வீட்டுக்குள் இருந்த அறைக்கு ஓடினார்கள். இருந்தும் விரட்டிச் சென்று அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றார்.

பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த ஜூலியின் தாயார் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே, அங்கு விரைந்து வந்த போலீசார் ஜூலியை கைது செய்தனர். போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், தன்னை கேலி, கிண்டல் செய்த தனது குழந்தைகளை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தார்

தி.மு.க கூட்டணியில் பா.ம.க சேர்க்கை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இதை அவர் உறுதி செய்தார். நான்கு நாள் பயணம் ஒன்றினை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் புதுடில்லி சென்றடைந்தார். திமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவைத் தவிர காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவையும் இடம்பெறும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இந்திய மாணவர்களின் காலில் கண்காணிப்பு கேமரா!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மிகப் பெரிய நகரமான சான்பிரான்சிஸ்கோ நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது டிரி வேலி பல்கலைக் கழகம். அமெரிக்க சட்டப்படி, இப்பல்கலைகழகமானது ஆண்டுக்கு 144 விசாக்கள் மட்டுமே வெளிநாட்டு மாணவர்களுக்கு அளிக்க முடியும். ஆனால், இந்தாண்டு சட்ட விரோதமாக மாணவர்களிடம் அதிகளவில் பணத்தைக் கறந்து, போலி விசாக்கள் மூலம் மாணவர் சேர்க்கையை பல்கலை நடத்தியுள்ளது. இப்பிரச்னையில் மாட்டியுள்ள 1,555 இந்திய மாணவர்களில் 750 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இதற்காக இவர்களது காலில், எலக்ட்ரானிக் டேக் எனப்படும் மின்னணு கண்காணிப்புக் கருவியை அத்துறை கட்டி விட்டுள்ளது. பாதத்திற்கு மேல் வளையம் போன்ற எலக்ட்ரானிக் தகவல் தரும் கருவி மாட்டப்படுகிறது. மாணவர்கள் எங்குள்ளனர் என்பதை இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

Dua For Gaza