Tuesday, November 5, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னையில் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா!



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஆரோக்கியம் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழாவாக மினி மாரத்தான் நிகழ்ச்சி நவம்பர் 3 காலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரை (திருவள்ளுவர் சிலை) அருகிலிருந்து துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.K.அமீன் அவர்கள் தலைமை தாங்கினார்.மாநில துணைத்தலைவர் M. முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.சென்சாய் கராத்தே கண்ணன், SDPI கட்சியின் மாநில செயலாளர் T.ரத்தினம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்சாய் கராத்தே கண்ணன் அவர்கள் மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க யோகாசனம் பற்றிய செய்முறை பயிற்சி அளித்து செய்து காண்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து மக்களின் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு யோகா உடற்பயிற்சி கையேடு புத்தகத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் வெளியிட SDPI கட்சியின் மாநில செயலாளர் T.ரத்தினம் அவர்கள் பெற்றுக்கொண்டார். பாப்புலர் ஃப்ரண்ட் சென்னை மாவட்ட தலைவர் M.நாகூர் மீரான் அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza