Wednesday, August 21, 2013

தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சட்ட உதவி! - மத்திய அரசு முடிவு!



போலீஸ் மற்றும் ரகசிய புலனாய்வு அமைப்புகளால் தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக சிக்கவைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சட்ட உதவி வழங்க மத்திய அரசு முடிவுச் செய்துள்ளது.
பொய் வழக்குகளை கண்டறிவதற்கான அளவுகோலை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) பதிவுச் செய்த தீவிரவாத வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் 39 சிறப்பு நீதிமன்றங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டதற்கு பிறகு சட்ட உதவி வழங்கவும் மத்திய அரசு தயாராகி வருகிறது. என்.ஐ.ஏ பதிவுச் செய்துள்ள பெரும்பாலான வழக்குகளில் முஸ்லிம்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களில் பெரும்பான்மையோர் நிரபராதிகள் என்று மூத்த உள்துறை அமைச்சக அதிகாரியொருவர் கூறுகிறார். ஆகையால் சரியான முறையில் விசாரணை நடக்க சட்ட உதவி வழங்கவேண்டியது அவசியமாகும். ஆனால், பொய் வழக்குகளை சரியான வழக்குகளில் இருந்து பிரிப்பது சிரமம் என்றும் அவர் கூறுகிறார்.
முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவுக்கு ஏற்கனவே மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான் புகார் கடிதம் எழுதியிருந்தார். சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(யு.ஏ.பி.ஏ) முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்றே பிரயோகிக்கப்படுவதாகவும், ஆகையால் தீவிரவாத வழக்குகளில் தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவ வேண்டும் என்று ரஹ்மான் கான் வலியுறுத்தியிருந்தார். இதனை ஷிண்டே அங்கீகரித்தார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவத்ம் 39 சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Source: New india.tv/tn

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza