Sunday, July 14, 2013

குஜராத் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் மோடியின் பேச்சு: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

 முஸ்லிம் இனப்படுகொலை புகழ் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வெளிநாட்டு செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸுக்கு அளித்த நேர்காணலில் குஜராத்தில் முஸ்லிம்களை படுகொலை செய்ததை நியாயப்படுத்தியிருக்கின்றார். நரேந்திர மோடியின் இக்கருத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம் தெவித்துள்ளது.

இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கடந்த 2002 ஆம் ஆண்டில் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த கலவரத்தை கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ குஜராத முதல்வர் நரேந்திர மோடி எவ்வித முயற்சி எதுவும் எடுக்கவில்லை, மாறாக காவல் துறை அதிகாரிகளுக்கு "ஹிந்துக்களின் கோபத்தை வெளிப்படுத்த விடுங்கள்" என்று ஆணை பிறப்பித்து படுகொலை நடத்த ஊக்கப்படுத்தினார்.



அந்த படுகொலைகளை நியாயப்படுத்தியும், முஸ்லிம்களை மோசமான உதாரணத்தைக் கொண்டு கொச்சைப் படுத்தியும் வெளிநாட்டு செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸுக்கு அளித்த நேர்காணலில் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். இது அவரின் குரூர சிந்தனையை வெளிப்படுத்துகிறது. இது ஆணவம் நிறைந்த பேச்சு இதை கடுமையாக கண்டிப்பதோடு, அவர் இக்கருத்தை வாபஸ் வாங்குவதுடன் பொது சமூகத்திடம் நரேந்திர மோடி பகிரங்க மண்ணிப்பு கேட்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது."

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza