Monday, July 29, 2013

நீதிக்காக போராட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் - பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்


சென்னை: SDPI கட்சி மத்திய சென்னை மாவட்டம் சார்பாக 27.7.2013 அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது: "கண்ணியமும்,புண்ணியமும் பொருந்திய ரமலான் மாதத்திலே 1432 ஆம் ஆண்டு அசத்தியத்திற்கும்,சத்தியத்திற்கும் தீர்ப்பு வழங்கிய நாளான பத்ரு போர்க்களம் நடந்த தினத்திலே நாம் சங்கமித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் !


ரமலான் நோன்பு சிறந்த வாழ்வியலைக் கற்றுத்தரும் உன்னதம் பொருந்திய மாதம். மனம்,அறிவு,உடல் இவைகளை ஒருங்கிணைத்து போராடி உன்னத நிலையைப் பெரும் மாதம். இந்நிலையில் சமூகத்தில் நீதியை வென்றெடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

உங்களுடைய செல்வம்,உயிர் போன்றவற்றில் கண்டிப்பாக சோதனைக்கு உற்படுத்தப்படுவீர்கள்.அதுபோல் உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கபட்டோரிடமிருந்தும், இணைவைப் போரிட மிருந்தும், அதிகமான தீங்கான செய்திகளை நீங்கள் கண்டிப்பாக கேட்பீர்கள். அந்த சமயத்தில் பொறுமையாக இருந்து,தக்வாவுடன் நடந்து கொள்வீர்கள் எனில்,அது தான் மிக உயர்ந்த செயற்பாடாகும். அல்குர்ஆன் -(3:186)

இன்றைய தமிழக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்:

நம்முடைய அடையாளத்தை கொச்சைப்படுத்தி தனிமைப்படுத்தும் முயற்சியை காவிகளும்,ஊடகங்களில் சிலரும், காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளும் விஷமத்தை செய்கிறது. முஸ்லிம்கள் குறிவைக்கபடுகிறார்கள். பல்வேறு முஸ்லிம்களின் வழிபாட்டு தளங்கள் தாக்கப்பட்டுள்ளது,பொருளாதாரம் சேதப்படுத்தப்பட்டுள்ளது,முஸ்லிம்கள் மீது தாக்குதல்,கத்திக்குத்து,ஆபாச வார்த்தைகள்,வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுதல் இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பந்த் என்ற பெயரிலே முஸ்லிம்களின் கடைகள் உடைப்பு, பொது சொத்துக்களுக்கு சேதம்,மிரட்டல் காவல்துறையும்,ஆட்சியாளர்களும் கடையை அடைக்க சொல்வது. முஸ்லிம்கள் சட்டரீதியாகவும்,ஜனநாயக போராட்டத்தை முன்வைத்து போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த கொலைகளுக்கு காரணம் முஸ்லிம்கள் தான் என முன்தீர்மானமெடுத்து குற்றவாளிகளாக சித்தரிப்பது சரியா ?

காவி பயங்கரவாதிகளின் நோக்கம் என்ன?

காவி பயங்கரவாதிகள் அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். அரசியல் நோக்கமென்றால் கலவரத்தை ஏற்படுத்தி குஜராத்தை போன்று வெற்றி காண முயற்சிக்கிறார்கள். Fear pshyco politics அச்சுறுத்தும் அரசியல் மக்கள் பயந்து ஒட்டுபோடுவார்கள். இதை தான் தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்நிலையை புரிந்துகொண்ட காவல்துறைத் தலைவர் மதக்கலவரத்தை தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை என்று கூறினார். கடந்த சில நாட்களாகவே அவர்கள் நடத்தும் கூட்டங்களில் பேசும்போது குஜராத் போன்று கலவரத்தை செய்வோம்.என்று மிரட்டுவது கடைகளுக்கு தீ வைப்பு. பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள். பந்த் என்ற பெயரால் பொதுசொத்திற்கு சேதம் மக்களை பீதியடைய செய்வது.

காவல்துறையின் தவறான அணுகுமுறை:

முஸ்லிம்கள் செய்யவில்லை என்ற செய்தியை தமிழக காவல்துறைத் தலைவர் குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் குற்றவாளிகள் என சந்தேகிக்கிறோம் என்று நான்கு நபர்களின் படத்தை வெளியிட்டுள்ளார்கள் ! அதன் மர்மம் என்ன ? அவர்கள் யார் ? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளோம். தவறு யார் செய்தாலும் சட்டத்திற்கு முன்பு நிறுத்தி தண்டிக்க படவேண்டியவர்கள் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. சந்தேகப்படும் இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அத்வானி வருகையின் போது குண்டு வைத்ததாக தேடி வருகிறார்கள். இவர்களை பிடிப்பதற்கு தமிழக அரசு பட்ஜெட் ஒதுக்கி சிறப்பு குழுவை நியமித்தது இன்று வரை ஏன் பிடிக்கவில்லை. அந்த மூன்று நபர்களை முன்னிறுத்தி மதுரையில் 360 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விசாரிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள். ஒருபக்கம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அப்பாவிகள் சித்திரவதை செய்வதை தடுக்கும் போராட்டம் நடத்தி வருகிறது .
சமீபத்தில் நடந்த இரண்டு கொலைகளைப் பற்றிய துப்பு கிடைக்காத நிலையில் சிறப்பு விசாரணைக் குழு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்ற பிரச்சாரம். இவைகளுக்கு எதிராக போராட்டத்தை நடத்தவேண்டியது ஒவ்வொருவருக்கும் கடமை.

ஊடகங்களும் மதச்சார்பற்றவர்களும்:

வாரப்பத்திரிக்கை முஸ்லிம்கள் தான் செய்திருப்பார்கள் என எழுதிதள்ளினார்கள். சமூக ஆர்வலர்களின் கருத்து நடுநிலையையும் சமூகப் பொறுப்பையும் மீளாய்வு செய்யவேண்டும்.

நம்முடைய கேள்வியும் போராட்டமும்:

• நடந்த கொலைகளின் பின்னணியில் சொந்த காரணங்களைக் கொண்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.       பிறகு ஏன் முஸ்லிம்கள் மீது சித்தரிப்பு.
• சமீபத்தில் நடந்த வேலூர் மற்றும் சேலத்தில் நடந்த வழக்கில் தடையம் கிடைக்காத நிலையில் சிறப்பு        புலனாய்வுப் போடப்பட்டுள்ளது இந்நிலையில் முஸ்லிம்கள் தான் செய்திருப்பார்கள் என முன்                தீர்மானம். தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் தான் என சந்தேகம் சரியா ?
• இந்துத்துவவாதிகள் முஸ்லிம்களுக்கும்,பொதுமக்களுக்கும் எதிராக கலவரத்தில் ஈடுபடுவது சரியா ?
• ஊடகங்கள் தவறாக சித்தரிப்பது சரியா ?
• பொதுதளங்களில் அரசியல் கட்சிகள் பந்திற்கு ஆதரவு தெரிவிக்கும் போது, உண்மையை ஆராய்ந்து அறிக்கைகள் விடவேண்டும்.
• நம்மோடு இருக்கிறார்கள் என்பதாக இந்துத்துவவாதிகள் புரிந்துக் கொண்டு தலை,கால் தெரியாமல் குதிக்கிறார்கள்.

இந்நிலையை மாற்ற நீதிக்காக போராட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்" என்று தனது உரையில் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி, மாநில செயலாளர் அமீர் ஹம்சா, மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா , மத்திய சென்னை மாவட்ட தலைவர் நஸிம், மாவட்ட செயலாளர் இஸ்மாயில், மற்றும் SDPI கட்சி மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza