Thursday, July 11, 2013

தக்வாவை குறிவைப்போம்! - A.S.இஸ்மாயில், மாநில தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட்.


அல்லாஹுவின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்
தக்வாவை குறிவைப்போம் !

வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது.

மகத்துவம் வாய்ந்த அல்லாஹ் ஏற்படுத்திய ரமலான் மாத பயிற்சி பாசறையில் முகாமில் கலந்துகொள்வதற்கு அறிவார்ந்த வழிகள், ஒழுக்கம் நெறிகள் நிறைந்த, விஞ்ஞானப்பூர்வமான விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளான். நாம் நோன்பின் (பயிற்சி முகாமின்) விதிமுறைகளை சரியாக பேணவேண்டும்.


நோன்பு பயிற்சியின் மூலம் பல்வேறு பலன்களை, நலன்களைப் பெற்றாலும். குறிப்பாக தக்வா என்னும் ஆடையை ஏற்படுத்துகிறான். ‘லா அல்லக்கும் தத்தகூன்’, ‘இறையச்சம் ஏற்படுத்துவதற்காக ‘ ஆக நோன்பு சிறந்த கேடயம். நம்மை சொர்க்கத்திற்கு உரித்தாக்கும் அடிப்படை பண்புகளை உருவாக்குகிறது. அதை அடைவதற்கு முழுமையாக நோன்பு பயிற்சியில் நுழைய வேண்டும்.

இந்தியாவில் வாழும் சமூகங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம் சமூகம் வாழ்கிறது. ஆக, மொத்த முஸ்லிம் சமூகத்தையும் சக்திபடுத்த வேண்டும் என்ற இலட்சிய பயணத்தில் தொடர் பணிகளையும், போராட்டங்களையும் முன்வைத்து பயணிக்கும் சகோதர, சகோதிரிகளே! நோன்பின் மாண்புகளை சுவைத்து சுவைத்து முன்னேற வேண்டும்.

முதல் பத்து அல்லாஹுவின் அருளுக்குரியது ,இரண்வது பத்து பாவமன்னிப்புக்குரியது, மூன்றாவது பத்து நரக நெருப்பின் விடுதலைக்கு உரியது. இறுதிபத்து நாட்களில் லைலத்துல் கதிர் இறங்கிய ஒற்றைப் படை இரவுகள், இஹ்திகாப் போன்ற அம்சங்களுடன் ரமலான் பதினேழாம் நாள் பத்ரு போர் நடந்த தினம் ‘சத்தியம் வந்து அசத்தியம் அழிக்கப்பட்ட’ நாள் என நினைவு கூற நன்மைகளை குவிக்கும் களமாக, கீழங்கியை வருஞ்சு கட்டி அமல்களை செய்து பயன்பெறவேண்டும். இன்ஷா அல்லாஹ் !

பத்ரீயின் நாட்கள் ஆன்மீக பலத்தையும், சமூகத்தின் எதிர்காலத்தை, தீர்மானிக்கும் போராட்டமாக அமைந்தது. முஸ்லிம்களில் ஆட்கள் பலமும், ஆயுதபலமும் குன்றிய நிலையில் எதிரிகளின் பெரும்படையையும், ஆயுதம் குவியலையும் மலக்குமார்களின் உதவிகள் கொண்டு தகர்த்தெரிந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ் !

ஆக ரமலான் வாழ்வியலின் அனைத்து அம்சங்களையும் சீர்செய்ய படிப்பினையையும், பயிற்சியையும் தருகிறது.

எனவே சமூக மேம்பாட்டு பணியிலும், நீதிக்கான போராட்டத்தில் முன்னணியில் நின்று செயல்படும் செயல்வீரர்கள் ஒவ்வரு நொடிப்பொழுதும் சரியானதாக பயன்படுத்த வேண்டும். அல்லாஹ் ரமலான் நோன்பின் முழுமையான பலனைத் தந்தருள்புரிவானாக !

A.S.இஸ்மாயில் 
மாநில தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza