Wednesday, July 17, 2013

3.3 கோடி ரூபாய் பள்ளிக்கூட சாதனங்களை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்!

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டுதோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ திட்டத்தில் இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்கூல் கிட்டுக்களை (பள்ளிக்கூட சாதனங்கள்) வழங்கியுள்ளது. மொத்தம் 1,16, 595 ஸ்கூல் கிட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட வர்ணமயமான பேரணியுடன் இந்நிகழ்ச்சி துவங்கியது.கல்வி சர்வே, ஸ்கூல் கிட்டுகள் விநியோகம், மாணவர்க-பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு, சிறந்த மாணவர்களை ஊக்குவித்தல், பாதியில் படிப்பை நிறுத்திய மாணவர்களை மீண்டும் தேடிப்பிடித்து பள்ளியில் சேர்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் இந்த ஸ்கூல் சலோ பிரச்சாரத்தின் போது நடந்தேறின.ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உ.பி, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், மணிப்பூர், மத்தியபிரதேசம், ஆந்திரபிரதேசம், மஹராஷ்ட்ரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 15 மாநிலங்களில் ஸ்கூல் சலோ நிகழ்ச்சிகள் நடந்தன.


எல்லோருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் லட்சியத்தின் ஒரு பகுதியாக சர்வ சிக்ஷா கிராமத் திட்டம் இவ்வாண்டு மேலும் பல கிராமங்களுக்கு பரவலாக்கப்படும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் சேர்மன் கே.எம்.ஷெரீஃப் கூறினார்.இவ்வாண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்காலர்ஷிப்(கல்வி உதவித்தொகை) வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறமைகளை சிறு வயதிலேயே கண்டுபிடித்து அவர்களுடைய கல்வி முழுமை அடையும் வரை உதவி அளிப்பதற்கான திட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார். ஸ்கூல் சலோ பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கு கே.எம்.ஷெரீஃப் நன்றி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza