உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர் இலட்சகணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீப் மற்றும் நிர்வாகிகள் உத்தரகண்ட் மாநிலத்திற்கு சென்று அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டேராடூன் மற்றும் ரிஷிகேஷ் பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.
மேலும் தேசிய தலைவர் கே.எம்.செரீஃப் தலைமையிலான குழு உத்தரகண்ட் மாநில முதல்வர் ஸ்ரீ விஜய் பஹுகுணா அவர்களை நேரில் சந்தித்து பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வழங்கினர்.
இச்சந்திப்பின் பொது பாப்புலர் ஃப்ரண்டின் டெல்லி மாநில தலைவர் அன்சாருல் ஹக் ,மாநில நிர்வாகிகள் ஜபருல்லாஹ் கான் , முஹம்மத் சபீர், நசுருதீன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Info: popularfronttn.org
0 கருத்துரைகள்:
Post a Comment