தமிழகம் மற்றும் புதுசேரியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 10.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இத்தேர்வில் 89% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
500 க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 9 பேர் முதலிடமும் 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 52 பேர் இரண்டாம் இடமும் 500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 136 பேர் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
கணிதப்பாடத்தில் 29,905 பேர் 100 /100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அறிவியலில் 38,154 பேர் சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.
97.29 % சதவிகிதம் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டங்களில் முதலிடம் பிடித்துள்ளது .
நமதூர் அரபி ஒலியுல்லாஹ் பள்ளியில் 99 பேர் இந்த கலிவியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வை சந்தித்தனர். இதில் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான்கு பேர் தோல்வி அடைந்துள்ளனர். மாணவிகள் மூன்று பேரும், மாணவர் ஒருவரும் தோல்வி அடைந்தது வருத்ததிற்குறியது.
இதனை சமன் செய்யும் வகையில் நமதூர் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
முதல் மதிப்பெண்:
1. ரஸ்னியா ராணி, த/பெ. முஹம்மது ரபி(மேற்கு தெரு) - மொத்த மதிப்பெண் - 486/500
தமிழ் - 97, ஆங்கிலம் - 90, கணிதம் - 100, அறிவியல் - 99, சமூக அறிவியல் - 100
இரண்டாம் மதிப்பெண்:
2. ஜுமைஹா, த/பெ. பைரோஸ் (கிழக்குத் தெரு )- மொத்த மதிப்பெண் - 482/500
தமிழ் - 91, ஆங்கிலம் - 95, கணிதம் - 98, அறிவியல் - 99, சமூக அறிவியல் - 99
மூன்றாம் இடம்:
3. மீன லெட்சுமி, தேர்வை - மொத்த மதிப்பெண் - 477/500
தமிழ் - 97, ஆங்கிலம் - 88, கணிதம் - 100, அறிவியல் - 98, சமூக அறிவியல் - 99
மேலதிக தகவல்கள்:
கணிதத்தில் நான்கு பேரும், அறிவியலில் இரண்டுபேரும், சமூக அறிவியலில் ஒருவரும் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழில் 16 பேரும், ஆங்கிலத்தில் 15 பேரும், கணிதத்தில் 7 பேரும், அறிவியலில் 33 பேரும், சமூக அறிவியலில் 31 பேரும் 90-க்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்வில் 9 மாணவ, மாணவிகள் 450-க்கு மேலும், 32 பேர் 400-க்கு மேலும் மதிப்பெண்களை பெற்று நமது ஊருக்கும், பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த மிகச்சிறந்த வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களுக்கும், தங்களது கடமையை சரிவர செய்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் புதுவலசை.tk சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
தோல்வி அடைந்தவர்கள் துவண்டு விட தேவையில்லை மறு தேர்வில் கடுமையாக முயன்று வெற்றுபெற உழைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
வருகின்ற ஜூன் 20ம் தேதி மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப் படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியான தேர்வு முடிவில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஜூன் மற்றும் ஜூலையில் நடைபெறவிருக்கும் உடனடி தேர்வில் பங்கேற்கலாம். அதற்க்கான விண்ணப்பபடிவத்தை www.dge.tn.nic.in இந்த இணையதள மூலமாக விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 3 ம் தேதி முதல் 5 ம் தேதிக்குள் உடனடி தேர்வுக்கு பதிவு செய்யவேண்டும். தேர்வு கட்டணத்தை SBI வங்கியின் எதாவது ஒரு கிளையில் 6-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தேர்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல் உதவி : சகோ.ரிஸ்வான்.
0 கருத்துரைகள்:
Post a Comment