பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக "பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி பயிலகம்" இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்டின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் சகோ. ஹபீப் நவாஸ்கான் அவர்களால் கடந்த செவ்வாய் (23.04.2013) கிழமை மாலை 5 மணியளவில் துவக்கி வைக்கப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோரதரர் ஹமித் இப்ராகிம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் தர்ம பரிபாலன சபை மற்றும் முஸ்லிம் முன்னேற்ற சங்க நிர்வாகிககள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த நிகழ்ச்சியினை புதுவலசை சகோ.ரிஸ்வான் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்கள்.
இந்த தையல் பயிற்சி வகுப்பு சுமார் 2 மாதங்கள் நடைபெறுகிறது. தினமும் பிற்பகல் 2:30 முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது. முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மற்றும் இதர தகவல்களுக்கு +91 97 864 864 27 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மாவட்ட தலைவர் சகோ. ஹபீப் நவாஸ்கான் துவக்கி வைத்தபோது
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோரதரர் ஹமித் இப்ராகிம்
மாவட்ட தலைவர் சகோ. ஹபீப் நவாஸ்கான் உரை நிகழ்த்திய போது
புதுவலசை ஜமாஅத் தலைவர் ஜனாப். சேகு முஹம்மது
சகோ. ரிஸ்வான்
0 கருத்துரைகள்:
Post a Comment