Friday, April 26, 2013

கேரளா கைது சம்பவம்: பின்னணியில் இருக்கும் சதியை பாப்புலர் ஃப்ரண்ட் உணர்ந்தே உள்ளது



புதுடெல்லி: கேரள மாநிலம் கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல் வீரர்கள் " ஆரோக்கியமான மக்கள் - வலிமையான தேசம்" என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களை கண்ணூர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சதி திட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டறிந்துள்ளது. இது குறித்து தேசிய போது செயலாளர் O.M.A. சலாம் கூறும் போது, அரக்கத்தனமான U.A.P.A கருப்பு சட்டத்தை காரணமில்லாமல் முஸ்லிம் இளைஞர்கள் மீது காவல்துறை பாரபட்சமாக திணித்துள்ளது. இது முஸ்லிம் இளைஞர்கள் மீதான காவல் துறையின் தெளிவான வெறுப்புணர்வை காட்டுகிறது.


கண்ணூர் மாவட்டத்தை பொறுத்தவரை C.P.M மற்றும் R.S.S உறுப்பினர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, குண்டுகள் தயாரிப்பது, ஆயுத பயிற்சி எடுப்பது, இது போன்ற செயல்களை தொடர்ந்து முன்னின்று செய்து வருகின்றனர். அனால், எப்பொழுதெல்லாம் C.P.M மற்றும் R.S.S பயிற்சி பாசறையில் போலீசார் சோதனையில் ஈடுபடும்போது அவர்களின் மேல் சாதாரண சட்டங்களே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த விசயத்தில் போலீஸில் ஒரு சாரார் மக்களை துன்புறுத்துவதில் மட்டும் ஈடுபடாமல் அவர்களுக்கு எதிராக பொய் வழக்குகளை ஜோடிப்பதிலும், பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பிற்கு எதிராகவும் ஈடுபடுகின்றனர்.

மேலும் ஒரு சந்தேகம் என்னவென்றால், மொத்த இந்திய நாடும் இந்த கருப்பு சட்டமான UAPA சட்டத்தை எதிர்க்கும் நிலையில் கேரள போலீசார் இந்த சட்டத்தை அப்பாவி முஸ்லிம்கள் மீது பாய்ச்சி அவர்களை சிறை கொட்டடியில் நீண்ட காலத்திற்கு வைக்க உபயோகப்படுத்தி உள்ளனர்.

அவர்கள் மீது அநீதி இழைக்கப்படும் இந்த பொய் பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.

இப்படிக்கு,
இலியாஸ்
தேசிய செயலாளர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza