Friday, April 26, 2013

பெங்களூர் குண்டு வெடிப்பில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்ததை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!



நெல்லை: பெங்களூர் குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புஹாரி உள்ளிட்ட 3 முஸ்லீம் இளைஞர்களை பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததையும், கோவை, மதுரை மற்றும் நெல்லையில் தொடரும் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கையும் கண்டித்து எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சி சார்பில் இன்று 25.04.2013 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, ம.ம.மு.க மாநிலத்தலைவர் பாளை.எஸ்.ரஃபீக், ஜமாத்துல் உலமா சபை சலாஹுதீன் ரியாஜி, எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், மதிமுக அரசியல் மையக்குழு உறுப்பினர் கே.எம்.ஏ.நிஜாம், ஐ.என்.டி.ஜே மாநிலச்செயலாளர் அப்துல் காதர் மன்பயீ, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் துரை அரசு, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் ஐ.உஸ்மான் கான் நன்றி கூறினார். இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.




0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza