மதுரை : மதுரையில் வெடிகுண்டு என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்து சிதர்வதைக்கு உள்ளாக்கபடுவதை கண்டித்து 18.04.13 அன்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்பாட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முஹம்மது நசுருதீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொது செயளலாளர் காலித் முஹம்மது, மறுமலர்ச்சி முஸ்லிம்லீக் நிறுவனர் அ.ச.உமர் பாருக், SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் பி.அப்துல் ஹமீத், ஐ.என்.டி.ஜே. மாநில செயலாளர், மக்கள் ஜனநாயக கட்சி கே.எம் .செரிப் , கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில பொருளாளர் பக்ருதீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் இலியாஸ், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பஈ, மதுரை மாவட்ட முன்னால் ஐக்கிய ஜமாஅத் தலைவர் ராஜா ஹசன் அலி ஆகியோர் கலந்து கொண்டு காவல்துறையினரின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தங்களது கண்டன உரையை பதிவு செய்தனர் .
இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் மதுரை மாவட்ட செயலாளர் இதிரீஸ் நன்றியுரையாற்றினார் .இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு காவல்துறையினரின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment