பிரேசில்: பிரேசிலில் சிறைக் கைதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்காக 23 காவல்துறையினருக்கு தலா 156 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் சாவ்பாலோ நகரில் உள்ள மத்திய சிறையில் சிறைக்குள் நடைபெற்ற கலவரத்தில் கைதிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் சண்டையும், தீவைப்பு சம்பவமும் நிகழ்ந்தது.
இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 111 கைதிகள் பரிதாபமாக இறந்தனர். தங்களை பாதுகாத்துக் கொள்ளவே துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் சரணடைந்த கைதிகளை அறைகளில் அடைத்து வைத்து சுட்டு கொன்றதாக எதிர் தரப்பில் விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக இதில் தொடர்புடையதாக 23 காவல்துறை அதிகாரிகள், 3 ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் பிரேசில் நீதிமன்றம் கடந்த 21-ஆம் தேதி வெளியிட்டுள்ள தீர்ப்பில் காவல்துறையினரின் குற்றம் நிரூபிக்கப் பட்டதால் அவர்களுக்கு 156 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. ராணுவ வீரர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப் படாததால் அவர்கள் விடுதலை செய்யப் பட்டனர்.
-inneram
0 கருத்துரைகள்:
Post a Comment