நமதூரில் வருகிற 9-ம் தேதி சனிக்கிழமை மதியம் 4.30 மணியளவில் 123-வது ஆண்டுவிழா நடைபெற இருக்கின்றது. அதனை முன்னிட்டு முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கிரிக்கெட், கைப்பந்து, ரோந்து, அவ்வா என நமதூர் இளைஞர்களை அணியாக பிரித்து போட்டிகள் தொடங்கியுள்ளன.
6.03.2013 மாலை 5 மணியளவில் நமதூர் விளையாட்டு மைதானத்தில் ரோந்து நடைபெற்றது. இதில் ஒரு அணிக்கு 26 பேர் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ரிமோஸ் தலைமையிலான அணி 11 ரோந்துகளை அடித்து வெற்றி பெற்றது.

அதே போன்று அன்று இரவு 10.00 மணியளவில் கைப்பந்து நடைபெற்றது. இதில் நான்கு அணிகள் கலந்து கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், தொடர்ச்சியாக இரண்டு அணிகளை வீழ்த்தி பக்கீர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
MMS தலைவர் ஜாஹிர் ஹுசைன் மற்றும் செயளாலர் மனாசிர் ரஹ்மான் முழுமையாக நின்று இப்போட்டிகளை சிறப்பாக நடத்திவருகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment