நாடாளுமன்றக் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகள் பிடிபடவில்லை, தண்டனையும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்படாத தாக்குதலில் ஈடுபடாத சதிச்செயலில் ஈடுபட்டதாக நிரூப்பிக்கப்படாத அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட பாரபட்சமான தூக்குத்தண்டனை நியாயமற்றது, சட்டவிதிமுறைகளுக்கு அப்பாற்ப்பட்டு மக்களின் கூட்டுமனசாட்சியின் படி தூக்குக்குதண்டனை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்பை சட்டவல்லுனர்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும், விமர்சனம் செய்திருந்த நிலையில் மத்திய அரசு தூக்குத்தண்டனை நிறைவேற்றியிருப்பது பாரபட்சமான நடவடிக்கை, எனவே மத்திய அரசைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையான தூக்குதண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்பாட்டம் நடைபெற்றது .
இதில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளன் எம்.பி,எஸ் டி பி ஐ பொது செயலாளர் அப்துல் ஹமீது,மனிதநேய மக்கள் கட்சி முன்னால் தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ,தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது ,திராவிட விடுதலை கழகம் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன்,மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழர் தேசிய விடுதலை இயக்கம் தலைவர் தியாகு,மே-17 இயக்கம் திருமுருகன் ,பேரரிவாளனின் தாயார் அற்புதம்மாள், செந்தில் (சேவ்தமிழ்), செல்வராஜ்(மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்) சீனிவாசன் (பூவுலகின் நண்பர்கள்) உள்பட
பேரரிவாளனின் தாயார் அற்புதம்மாள் உரையாற்றிய பொழுது |
0 கருத்துரைகள்:
Post a Comment