திருச்சி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .
அதன் அடிப்படையில் திருச்சியில் " யூனிட்டி மார்ச் " என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான S.P.நஸ்ருதீன் துவக்கவுரை நிகழ்த்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியானது சரியாக 3 மணியளவில் மரக்கடை ஸ்டார் தியேட்டர் அருகில் துவங்கி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலையில் நிறைவு பெற்றது .தொடர்ச்சியாக பேரணியின் முடிவில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக் கூட்டத்திற்கு மாநில செயலாளர் S.இல்யாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா வரவேற்புரை ஆற்றினார் . SDPI கட்சியின் மாநில செயலாளர் செய்யது இபுராஹீம் மற்றும் மதுரை , பெரம்பலூர் , புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர்கள் , செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
ஒற்றுமை கீதம் பாடும் போது
மாநில செயலாளர் S.இல்யாஸ் தலைமையுரையாற்றிய போது
மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா வரவேற்புரையாற்றிய போது
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் A.முஹைதீன் அப்துல் காதர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் .
மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் சிறப்புரையாற்றிய போது
மாநில செயற்குழு உறுப்பினர் A.முஹைதீன் அப்துல் காதர் சிறப்புரையாற்றிய போது
திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் .
கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம்
நிகழ்ச்சியின் நிறைவாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் M.அபுபக்கர் சித்திக் நன்றியுரையாற்றினார் . தஞ்சை மாவட்ட தலைவர் ஜர்ஜீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .
தஞ்சை மாவட்ட தலைவர் ஜர்ஜீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் S.P.நஸ்ருதீன்
பாப்புலர் ஃப்ரண்ட் தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து கொள்ளும் போது
0 கருத்துரைகள்:
Post a Comment