Wednesday, February 20, 2013

அருண் ஜெட்லி பற்றிய கருத்தில் மாற்றமில்லை- கட்ஜு

Katju

புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியை கடுமையாக விமர்சித்து ப்ரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு கட்டுரை எழுதியதால் ரோஷம் கொண்ட பா.ஜ.கவின் அருண் ஜெட்லி, அவரை அப்பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த கட்ஜு அரசியலுக்கு பொருத்தமில்லாத ஜெட்லி தான் அத்துறையில் இருந்து விலகவேண்டும் என்று பதிலளித்தார்.

இந்நிலையில் பா.ஜ.க தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் கட்ஜு தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.
கட்ஜு கூறியது:ஓய்வு பெற்ற நீதிபதியான எனக்கு இந்திய பத்திரிகை கவுன்சில் பதவி கொடுக்கப்பட்டிருப்பதை ஜெட்லி விமர்சிக்கிறார். ஆனால் அவர் சார்ந்த பாஜக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, சட்டத் துறை அமைச்சர்
பதவி வகித்த அவரே ஓய்வு பெற்ற நீதிபதிகளை பல்வேறு பொறுப்புகளில் நியமித்துள்ளார். அப்போது இந்த முறைக்கு அவர் மறுப்புத் தெரிவிக்காதது ஏன்?
ஜெட்லி அரசியலுக்கு பொருத்தமானவர் இல்லை. எனவே அரசியலை விட்டு விலகி விட வேண்டும் என்ற என கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கட்ஜு நேற்று கூறினா

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza