
ராமல்லா:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் இருந்து ஹமாஸ் மக்கள் பிரதிநிதிகள் உள்பட 25 நபர்களை இஸ்ரேல் ராணுவம் கடத்திச் சென்றுள்ளது. நப்லூஸ், ராமல்லா, அல் கலீல் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் கடத்திச் சென்றுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்களான அல்கலீலைச் சார்ந்த ஹாதிம் காஃபிஷா, ஜெருசலத்தின் அஹ்ம்த் ஆத்தூன் ஆகியோரை அவர்களுடைய வீடுகளில் இருந்து ராணுவம் பிடித்துச் சென்றுள்ளது.
ஹமாஸுக்கும், ஃபத்ஹிற்கும் இடையே நடக்கும் நல்லிணக்க ஒப்பந்தத்திற்கு தடை போடும் ராணுவத்தின் முயற்சியே இந்த கடத்தல் என்று ஃபலஸ்தீன் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
குற்றம் சுமத்தாமலும், விசாரணை இன்றியும் சிறையில் அடைக்கும் அட்மினிஸ்ட்ரேடிவ் கஸ்டடி என்ற சட்டத்தின் அடிப்படையில் பெரும்பாலோர் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அட்மினிஸ்ட்ரேடிவ் கஸ்டடியின் படி ராணுவத்தினருக்கு விரும்பியவர்களை 6 மாத காலம் வரை சிறையில் அடைக்கலாம். காலாவதி முடிவடையும் பொழுது அதனை புதுப்பித்து மீண்டும் சிறையில் அடைக்கவும் ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

0 கருத்துரைகள்:
Post a Comment